Sep 1, 2014

வேடிக்கை மனிதர்



எங்கோ
எங்கெங்கோ
தூரதேசங்களில்
துயரதேசங்களில்
உறவு துறந்து
சுற்றம் தவிர்த்து - செல்வம்
ஒன்றெ ஒற்றைத்
துணையென  - மாயைப்
பொருலுலகினைச்
சுற்றிச்சுழலும்
தேசநலம் அற்ற
தன்னலவாதிகளைப் 
பாரீர் பாரீர் என 
நித்தம் தூற்றித் திரியும்
பேதைகள் யாரென
உற்றுப் பார்த்தால் தெரியும்


தாம் பிறந்து
வளர்ந்து சுகித்த
மண்ணைவிட்டு
ஊருக்குதவாமல்
தொலைதூர
பெருநகரங்களில் - அதன்
காங்க்ரீட்காடுகளில்
மனிதம் மறந்து
மனம் பொசுங்கி
தன்னகமெங்கிலும் 
பொறாமை போற்றி 
உள்ளத்தனைய உயர்ந்தோரை 
தூற்றித்தூற்றித்
திரியும் சில
வேடிக்கை மனிதர்கள்தாம்
அவர்கள் என.

2 comments:

காயத்ரி said...

மண்ணின் ம்ணத்தை மனிதன் மறந்து வெகு காலம் ஆகிவிட்டது! காங்க்ரீட்டு காடுகள் பூங்காவனமாகத்தான் தெரிகிறது போலும்! இன்று அவன் சொந்த மண்ணும்கூட காங்க்ரீட்டு காடாகத்தானே ஆகிவிட்டது?! சொந்த மண்ணாவது..... அயல்நாட்டு மண்ணாவது! தூற்றுவதாவது! போற்றுவதாவது! மண்ணாவது! மனிதமாவது! மிஞ்சுவதென்னவோ வெறுமை மட்டுமே!

- செகு - said...


//
இன்று அவன் சொந்த மண்ணும்கூட காங்க்ரீட்டு காடாகத்தானே ஆகிவிட்டது?! சொந்த மண்ணாவது..... அயல்நாட்டு மண்ணாவது! //

மிகச் சரியான கருத்து காயத்ரி!. சில நேரங்களில் சொந்தஊர் கூட சொர்க்கமென இருப்பதில்லை! சென்ற ஊர் நரகத்தின் நமைச்சல்தான் மிகப்பிடித்தது போல தெரிகிறது. நடுவில் திரிசங்கு சொர்க்கம் அமைக்கவும் வழியில்லை!