Nov 20, 2005

மானுடம்.....




மனங்களை மானுடர்கள்

எங்கெங்கோ எதற்காகவோ

தொலைந் தெறித்து விட்டார்கள - பாவம்

மானுடத் தன்மையும், மானுடத் துண்மையும்

மனித சீவராசிகளால் -

யுக யுகங்களாக உருக் குலைந்து உரு தொலைந்து விட்டதே......!!!

அற்றொழிந்த மானுடர்களே - தாங்கள்

ஆற்று நீரில் அடித்து செல்லப்படுவதை

அவ்வப்போது கூட உணர்வதில்லையா....

அய்யகோ...

எங்கே, எதற்கு, ஏன்

கொண்டு செல்லப்படுகிறோம்- என்று அறியாப பிண்டங்கள்

ஓட்டைச் சடலம், உப்பில்லா பாண்டம்

என்றெவனோ- பாடித்

தொலைத்ததை

உண்மையாக்கும் ஈனப்பிறவிகள்...

என் மானுட மன்னர்களே... கனவான்களே! - நீங்கள்

காரல் மார்க்ஸினை அறிந்ததுண்டா

டால்ச்டாயின் தத்துவ நெறியை மேய்ந்த துண்டா.... ?

நிகொலாச்கோயின் இடர்பாடுகளை உணர்ந்ததுண்டா - லெனினின்

சமத்துவ புரட்சிகளுடன் புரட்சி செய்ததுண்டா....

தாகோரின் கவிதாஞ்சலியில் முத்தெடுத்தது உண்டா...

பாரதியை உரசியதுண்டா....நீட்சேயினை நிந்தித்ததுண்டா...

ஷெல்லியின் வரிகளை சுவாசித்ததுண்டா......ஷேக்ஷ்பியரினுள் சென்றது உண்டா...

வேர்ட்ஸ்வெர்த்திடம் விளையாடி யதுண்டா....

புத்தனை புரிந்ததுண்டா....புதுமைப்- புத்தனை புரட்டியதுண்டா.....

ஜெயகாந்தனை...ஜெகத்தினை... அளாவளாவியது உண்டா....

ஒஷோவின் உயர்த்த சிந்தனைகளை உண்ர்ந்ததுண்டா...

ஜென் துற வறங்களை ஒரளவு உரசியதுண்டா....

ஆரோக்கியமான சிந்தனைகளிலாவது வலம் வந்ததுண்டா.....

நீங்கள் பிறக்கிறீர்கள் . என்ன வென்று உணராமலே....

நீங்கள் வளர்கிறீர்கள்.....எப்படி யென்று தெரியாமலே....

பின்

இறந்து விடுகிறீர்கள்....எதற் கென்று புரியாமலே....

மானிட்ர்களே வாழ்வை, அதன் பிரபஞ்ச உண்மையை,

அறிந்து புரிந்து உணர்ந்து கொள்ளுங்கள்....

இயற்கையின் இறையை - இரசிக்கக்

கற்றுக்கொள்ளுங்கள்....

அன்பே இறையென்றுணருங்கள்


இதெல்லாம் முடியா விடில் ......

இன்றைக்கே......

இறந்து விடுங்கள்....

- செந்தில் குமாரன்