Jan 23, 2016

உன்னுள்





கல்லில் கிடந்ததை கருத்தினில்  ஏற்றினாய் 

உள்ளில் கிடந்ததை மறுத்தே தூற்றினாய் 

காயத்தினுள் சூத்திரமிருக்க, மாயத்தினுள் தரித்திரம் கொண்டாய் 

பாற்கடல் பருகக்கிடக்க, சேற்றுக்கடல் அருந்திடத்துடித்தாய் 

மேகமது பொழிந்திருக்க, தாகத்துடன் தனித்திருந்தாய் 

சூரியனே உதித்திருக்க விளக்கதனை தேடியலைந்தாய்

மெய்ஞானம் உணராமல் பொய்ஞானம் ஏற்றித்தொழுதாய்

உன்னுள் தொலைத்தபின் விண்ணில் எப்படி தேடிப்பிடிப்பாய் ?!







**************************************

Jan 1, 2016

பிதற்றுதே எனதுளமே!


















வெற்றுப் புலனைந்துகொண்டு 

பற்றும்பொருள் 

பலவற்றை - நோயெனத் 

தொற்றும் எனதுளமே 

கற்ற செருக்கொண்டு

உற்ற நிலைநோக்கின்  -இதுகாறும்  

பெற்றதனைத்தும் 

குற்றமுற்ற பொருளுலகே! 

நெஞ்சத்தக இருளகற்றும்  

மாசற்ற 

பரம்பொருள்தன்னை - நித்தம் 

பற்றற்றுச்  சுற்றிட

திக்கற்றுப் 

பிதற்றுதே எனதுளமே!





*******************