Feb 6, 2009

pongal 2009

சிந்து சமவெளி நாகரீகத்தில் ஜல்லிக்கட்ட

ஆனால் சிந்து சமவெளி நாகரீகத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்முத்திரையில் இதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

தமிழர் இலக்கியத்தில் ‘கொல்லேறு தழுவல
்’என்று பெயர் கூறி காளை அடக்குவது வெகுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆளை கொன்று தூக்கி எறியும் வகையில் வளர்க்கப்பட்ட காளையை, வீரம் சொரிந்த காளையர்கள் அடக்குவதை தழுவல் என்று வீரத்தையே மென்மையான வார்த்தையைக் கொண்டு தமிழ் இலக்கியம் சித்தரிக்கிறது.

இன்றளவும் இப்படிப்பட்ட முறையில்தான் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கொல்லேறு தழுவல் நிகழ்த்தப்படுகிறது. ஜல்லிக்கட்டில் இறக்கப்படும் காளைகளை அதற்கென்றே வளர்க்கின்றனர். ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காளையர்க்களுக்கும், அவர்களை தூக்கியெறிய முற்படும் காளைக்கும் இடையிலான சம வாய்ப்புடைய வீர சோதனைதான். 



 

இந்த மண்ணுல நம்ம மனுசனோட வளர்ச்சியை நினைச்சு பார்த்தீங்கன்னா தெரியும் அவன் விலங்கிலிருந்து மிகப்பிரம்மாண்டமாக வளர்ந்து இன்னைக்கு உலகத்தில் அங்கிங்கெனாதபடி ஈரேழு திசைகளையும் தன் கட்டுக்குள் வசப்படுத்தியிருகிறான்னு. அதற்கான மூலகாரணமே கற்காலத்து மனிதன் ஆற்றுவெளி சமுதாயத்தை உருவாக்கியதிலிருந்து வந்த வாழ்க்கைமுறைதான். ஆற்றுவெளியின் அவன் ஆரம்பிச்ச உழவுத்தொழில் நாகரீக வளர்ச்சியின் வித்து, அது விருட்சமாகி, பல்கிப்பெருகி விண்ணையே வசப்படுத்தும் அளவிற்கு வளர்ந்திருக்கு.

 

நம்ம பண்டைய தமிழர்கள் இந்த உழவுத்தொழிலின் முக்கியத்துவம் தெரிஞ்சு வந்ததனாலேயே, அதன் ஆதாரமான இயற்கையை வணங்கி அதோடு ஒன்றினைந்து வாழ்ந்திருக்காங்கன்னு தெரியுது. அறிவியலே வளர்ச்சியடையா அக்காலத்தில் தங்களோட அறிவின் வளர்ச்சியினாலே வானிலை மற்றும் பருவகால மாற்றங்களை தெளிவாக தெரிஞ்சு காலங்களை இளவேனில், முதுவேனில், கார்காலம், கூதிர், முன்பனி, பின்பனி எனப்பகுத்து அதுப்படி உழவுத்தொழிலை செம்மைப்படுத்தி வந்திருக்காங்க. அதுல இளவேனிற் காலம் அவங்களுக்கு முக்கியமான காலம். ஏன்னு பார்த்தீங்கன்னா அப்பதான் அந்த உழவின் பயனை தம் வாழ்வின் வசந்தங்களை மகிழ்ச்சியாக தொடங்குகிற காலம் – அதனால தான் இளவேனிற் காலத்தை அவங்க புத்தாண்டின் தொடக்கமாக தேர்ந்தெடுத்திருக்காங்கன்னு தெரியுது.

தமக்கு உணவுதந்த அந்த ஆதார சக்தியான ஆதவனை வழிபட்டு, இயற்கைக்கு உணவை பொங்கி வரும் பொங்கலாக படையலிட்டு ஒரு விழாவாக அதை நம்ம தமிழ் சமுதாயத்தின் அடையாளமா கொண்டாட ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு நம்ம தமிழர்கள் உலகின் எந்தக்கோடியிலிருந்தாலும் அந்த பொங்கல் திருநாளை கொண்டாடுறது நம்ம பண்பாட்டின் ஒரு அடையாளம்.

 

அது சரி, பூலோகத்தின் இன்னொரு கோடியில், ஆசுலே மற்றும் கூப்பர் ஆத்துவெளியில, அன்றைய தமிழர்களின் இன்றைய சந்த்திகளான வாழ்ந்து கொண்டிருக்கும் சார்லச்டன் தமிழ்ச் சமுதாயம் தைப்பொங்கல் திருநாளை அன்னிய மண்ணில் எப்படி கொண்டாடி மகிழ்கிறாங்கன்னு வாங்க போயி பார்க்கலாமா ?

 

 

 

பொங்கல் விழா அன்னைக்கு வர்ற பார்வையாளர்களுக்கு அந்த ஒரு நாள்-திருநாள், ஆனா அன்றைய விழாக்கலைஞர்களுக்கு அன்னைக்கு மட்டுமில்ல கடந்த பல வாரங்களாகவே கொண்டாட்டமான நாட்கள். எப்பிடின்னு கேட்டீங்கன்னா, விழாவிற்காக ஆறேழு வாரங்களுக்கு முன்னாலே பயிற்சி மற்றும் ஒத்திகைக்காக கூடி, மத்தவங்க ஒத்திகையில பண்ற தப்ப பார்த்து சிரிச்சு, தாமே பண்ற தப்பை சமாளிச்சு, எல்லாரும் சமைச்சு கொண்டு வர்ற அத்தனை சாப்பாட்டு வகைகளையும் ஒரு கட்டு கட்டிட்டு, சுகமா கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சு, மத்தவங்கள கேலி பண்ணி், அதகளம் பண்ணி- மொத்தத்தில பல வாரக்கடைசி நாட்கள் கலாட்டா கச்சேரியாத்தான் இருந்துச்சு.

 

 சங்கத்தலைவர் சுந்தர்தான் அயராத வேலைப்பளுவிற்கு மத்தியில் பல நாட்களாக அத்தனை ஆட்களையும் இழுத்துப் பிடிச்சு பல கலை நிகழ்ச்சிகள் உருவாகக் காரணமா இருந்தார்.

 

இந்த தடவை டேனியல் தீவுப் பள்ளி அரங்கையே தேர்ந்தெடுத்தி்ருந்தோம், அருமையான இடம்…மேடை அமைப்பு, பார்வையாளர்களுக்கான் வசதி, ஒலி, ஒளி  அமைப்பு, உணவரங்க வசதிகள் அத்தனைகளும் அருமையா அமைந்த இடம்ன்னு நீங்க பார்த்தாலே தெரியும். வாங்க உள்ளே போகலாம்.

 

ஆகா….இதென்ன தப்பித்தவறி தமிழ் நாட்டுக்குள்ளேயே வந்திட்டோமா ?....எங்க பார்த்தாலும் கண்ணைப்பறிக்கிற மாதிரி பட்டுப்புடவை, வெள்ளையும் சொள்ளையுமா வேட்டி சட்டையில நம்ம மக்கள் – ஒரு கலக்கு கலக்கிட்டாங்க போங்க. விழா ஏற்பாடுகளை அரக்க பரக்க ஏற்பாடு பண்ற மக்கள் சில பேர், ஒத்திகைகளை மனசில பார்த்துகிட்டே வெளியே பரபரப்பு தெரியாம நண்பர்கள் கிட்ட பேசிகிட்டு இருக்கிற சில பேர், சுத்தி சுத்தி ஓடியாடி உற்சாகமா அரங்கத்தையே அதிர வைக்கிற சுட்டிப்பசங்க சில பேர், பல நாட்கள் கழிச்சு பார்க்கிற சில நண்பர்களோட அரட்டை அடிக்கிற மக்கள் சில பேர், உள்ள வர்ற நம்ம மக்களை வரவேற்கிற மாதிரி…அவங்க கொண்டு வர்ற உணவு பதார்த்தங்கள அப்பிடியே மோப்பம் பார்க்கிற இளவட்டங்கள் சில பேர், - இப்படி பல வித நண்பர்களை பார்க்கிறதே கண்கொள்ளா காட்சியா இருக்கு, இல்லையா.

 

சிறுமி இனியாவின் நடனம் பார்வையாளர்களுக்கு அருமையான விருந்து – பார்த்துகிட்டிருந்த சின்னப்பசங்களும் ஆட்டம் போட ஆரம்பிச்சுட்டாங்க.

 

அடுத்தது – ஏலோலோ நாட்டிய நாடகம். மீனவர்களின் வாழ்க்கையில் படும் அவதிகளை, அவ்வாழ்வின் அல்லல்களை அப்பிடியே படம் பிடிச்சுகாட்டுற மாதிரி நடிச்சிருந்தாங்க. சுந்தர், யுவராசு, கொளசிக் மற்றும் செந்தில் மீனவர்களின் ஒவ்வொரு காலகட்டங்களை நடிச்சு நடனமாடி காட்டிகிட்டிருக்காங்க. படகோட்டி துடுப்பு போடுகிற மீனவ மக்களா நடிக்கிறது சந்தோசு, உதய், விக்னேசு, சிவா. மீனவர்களின் கடின வாழ்க்கையை நாடக நடினமாக பார்க்கிற பார்வையாளர்களின் மனச கலங்கடிச்சிட்டாங்க.

இப்ப நீங்க பாக்கிறது, கீதா, சானகி, லட்சுமி, சந்தியா, வானதி, மற்றும் வினு குழுவின் கும்மி நடனம். பட்டுப்புடவையில பகட்டா வந்திருந்து ஆடிறாங்க பாருங்க ஆட்டம் -  நம்ம ஊரு கிராமப்பொண்ணுகளே வந்து ஆடி பட்டைய கிளப்பின மாதிரி இருந்த்து. ஒரு தப்பில்ல, தாளம் பிசகல்ல, அத்தனை நேர்த்தி, அத்தனை அசத்தல்.

 

ஆகா, இது யாரு சரோஜா தேவியா அது, அட இந்தப்பக்கம் யாரு எம்.ஜி.ஆரு – என்னா பண்றாங்க இங்க வந்து – “அன்று வந்ததும் அதே நிலா – இன்று வந்த்தும் அதே நிலா”.  பாட்டுக்கு ஆடிறாங்க. உத்துப்பார்த்தாதான் தெரியுது - இது நம்ம லட்சுமி-கவுசிக்தான்னு. அவங்க போனபிறகு குங்குமப்பூவா கொஞ்சுப்புறாவா கொஞ்சி கொஞ்சி செந்தில் – வினு ஜோடி ஒரு கலக்கல் நடனம், அதுக்குப்பிறகு வந்தது அமிர்தா அவங்கப்பா சந்தோசோட வந்து அவரோட காதல்கதையை கேட்டு தெரிஞ்சுகிட்டாங்க. பிறகு வர்றது வா வாத்தியாரே ஊட்டாண்டன்னு சென்னைத்தமிழ் வச்சு மனோரமா – சோ ஆடுன ஆட்டம் கலகலப்பா இருக்கு. ஒரு பெண்ணைப்பார்த்து நிலவை பார்த்தேன் – செந்தில் – வினு ஜோடி இந்தப்பாட்டுக்கு ஆட ஒரே அசத்தல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். மொத்தத்தில இந்த அக்கால நடன நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் மத்தியில் கைத்தட்டல், தூதுகலம், உற்சாகம், பார்க்கிறவங்க எல்லாம் அந்தக்காலத்துக்கே போயிட்டாங்க.

 

இப்போ வந்திருக்கிறது யுவராசு, செந்தில், குமரன், சந்தோசு நண்பர்கள் சமய நல்லிணக்கத்தை ஒரு இசை நாடகமா அருமையா நடத்தியிருக்காங்க. மனுசங்க மதங்களால பிரிஞ்சு அடிச்சுகிட்டு மனிதத்தையே தன் புனிதத்தையே தொலைச்சுடறான் அப்பிடிங்கிறத அற்புதமாக நடிச்சு காட்டுனாங்க. மனம் நிறைய வைத்த ஒரு நெகிழ்வான நிகழ்வா இருந்தது.