Oct 15, 2006

STEM CELLன்னா என்னாங்க

நம்மூர் பொதுசனங்கள், தொன்று தொட்டு அந்தக்கால நாடகங்களாகட்டும்...இடைக்கால மற்றும் இந்தக்கால சினிமாவாகட்டும்... அத்தனையையும் வரையரையில்லாமல் ரசிக்க தெரிந்து கொண்டிருக்கும் அளவிற்கு, அறிவியலை சிறிதேனும் ரசிக்க முயன்றதில்லை...எல்லாவையும் தெரிந்து கொண்டிருக்காவிடினும்...மிகச்சிறந்த....நம் வாழ்வை அன்றாடம் பாதிக்கக்கூடிய அறிவியலை தெரிந்துகொண்டிருப்பதில் எந்த தவறும் இல்லை.
மேலும் அதற்கேற்றார் போல தமிழில் அறிவியல் கட்டுரைகளும் அதன் சமூகத்தாக்கங்களும் மிகக்குறைவு என்பது மறுக்க முடியாத உண்மை.
இப்பகுதியில் அறிவியலின் சில சுவராசியமான விஷயங்களை தமிழ்ப்படுத்த, எளிமைப்படுத்த முயன்றுள்ளேன். முதல் பகுதியில் ஸ்டெம் செல்லைப்பற்றி சிறிது பார்ப்போமா



...........................

ஸ்டெம் செல் (stem cell)

முன்னுரை

மருத்துவ உலகில் கிட்டத்தட்ட எல்லா வியாதிகளுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டேயிருந்தாலும், தண்டுவட மற்றும் மூளை, சில விநோத இதய, கல்லீரல் வியாதிகள் மருத்துவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மாபெருரும் சவாலாக கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தது. இந்த உடல் உறுப்புகள் சேதாரமடைந்தால் அதை எப்பாடுபட்டாலும் சரிப்படுத்தி உயிர்காக்க முடியாமல் போனது.

இந்நிலையில் 1998 நவம்பர் மாதம் ஒரு அற்புத வரப்பிரசாதமாக ஜேம்ஸ் தாம்ஸன், விஸ்காஸ்டின் யுனிவெர்சிடி (Wisconsin university) மற்றும் ஜான் கீர்கார்ட், ஜான் ஹாப்கின்ஸ் மெடிசின் ஸ்கூல் (John Hopkins School of Medicine)ஆராய்ச்சியாளர்கள் ஸ்டெம்செல் மகத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள். அதற்கு முன்பே (Ernest A. McCulloch and James E. Till - 1960) அது பற்றிய ஆராய்ச்சிகள் வந்திருந்தாலும் மனித கருமுட்டையிலிருந்து ஸ்டெம் செல்லை உருவாக்கும் அற்புதத்தை முதலில் கண்டுபிடித்தது அவர்கள் தான்.

ஸ்டெம் செல் - விளக்கம்

இப்போது ஸ்டெம் செல் தனித்தன்மையை, அது எவ்வாறு மற்ற செல்களிடமிருந்து மாறுபடுகிறது என்பதை பார்த்து விடலாமா..

நம்மூர் மாயாஜாலக்கதைகளில் படித்திருப்பீர்கள் மந்திரக்குள்ளனின் சுண்டு விரல் துண்டுபட்ட மறு நிமிடமே அது மாயமாக வளர்ந்து மற்றொரு குள்ளனாக உருவெடுப்பதாக. அது போன்று நம் உடம்பில் செல்களுக்கு மந்திரத்தன்மை கிடையாது. நம் உடம்பு மிகச்சிக்கலான, உயிர் மூலக்க்கூறுகளினால் உருவாக்கப்பட்ட உயிரினமானதினால் இது போன்ற வளர்ச்சியடையும் சிறப்புத்தன்மைகள் அதற்கு கிடையாது.

ஆனால் இந்த ஆராய்ச்சியாளர்கள் விடாத முயறசியாக நம் உடம்பில் உள்ள சில வகை செல்களை இந்த வகையான தன்மை கொண்டதாக தூண்ட முடியும் என்று கண்டறிந்தார்கள். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகின் ஒரு மகத்தான மைல்கல். இவ்வகை செல்கள் பல்வேறு கூறுகளாய் பிளவடைந்து அதே போன்ற செல்களை உருவாக்கும் தன்மையையும் (Proliferation), தூண்டல்களுக்கு ஏற்றவாறு சிலவகை சிறப்பு செல்களாகவும் (differentiation) உருவாக்க முடியும் என்றும் கண்டறிந்தார்கள். இவ்வித சிறப்பு செல்கள் பல்கி பெருகி பல்வேறு உறுப்பாக உருவெடுக்கச் செய்யலாம். அங்கனம் இச்செல்கள் எந்த மனித உடம்பின் எந்த பாகமாகவும் உருவாக்கம் செய்து விட சாத்தியமுண்டு. கரு வகை ஸ்டெம் செல்கள் (Embryonic Stem Cells) கரு உருவாகி ஒரளவு வளர்ச்சியடந்த நிலையில் உள்ள செல்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஸ்டெம் செல்களாகும்.




இம்முறையில் உருவான உறுப்புகள் காலகாலமாக தீராத நோய்களுக்கு அருமருந்தாகவும், விபத்துக்களில் பாதிக்கப்பட்ட மற்றும் செயலிலந்த மனிதனுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் அமைந்து விடுகிறது. இம்மருத்துவத்தின் மகத்துவம் அளவிடமுடியாத மற்றும் ஆச்சரியப்படத்தக்க ஒன்றாகும்.

ஸ்டெம் செல் உருவாக்கம் படத்தில்

1) கரு 2) 5-7 நாட்களான கரு 3) ப்ளாஸ்டோசிஸ்ட் நிலை கரு 4) இளநிலை ஸ்டெம் செல்கள் 5) இரத்த, நரம்பு மற்றும் இதய செல்கள்

இது க்ளோனிங் (cloning) எனப்படும் நகல்தன்மையிடமிடந்து மாறுபட்ட ஒன்றாகும். க்ளோனிங்கின் மூலம் உங்கள் உடல் செல்லின் மரபுத்தன்மையை மட்டும் எடுத்து, மரபுத்தன்மை நீக்கப்பட்ட கருவினுள் செலுத்தி அக்கருவை முழு உயிரினமாக வளரச்செய்தால் அது அச்சு அசலாக உங்களைப் போன்ற ஒருவரை உருவாக்கி விடலாம். இம்முறையில் பல நகல் மனிதர்களை உறுவாக்குவது சுவராசியத்தினை விட சமூகக்குழப்பங்களையும் மனக்குழப்பங்களையும் உண்டாக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

ஆனால் ஸ்டெம் செல் உடம்பிலிருந்தே உள்ள செல்களைக்கொண்டு உடல் பாகங்களை உருவாக்கி உயிர்காத்து மற்றும் நோய் தீர்ப்பதால் அதை ஒப்பிலா மருத்துவம் என்றே கூறவேண்டும்.





ஸ்டெம் செல்லிருந்து பல்வேறு உடல் பாகங்கள் உருவாவதை விளக்கும் படம்
இவற்றையும் மீறி விபரம் தெரியாத சில அரைவேக்காட்டு அரசியல்வாதிகள் இவ்வித ஆராய்ச்சிகளை முடக்கிவிட முயற்சிக்கிறார்கள். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் அமெரிக்க சனாதிபதி ஜார்ஜ் புஷ், ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கான பண ஒதுக்கீட்டை முடக்கிவைத்து ஆணையிட்டது. இது இத்துறையில் உள்ள அமெரிக்க ஆராய்ச்சியாளர்க்கு ஒரு பேரிடியாக அமைந்தது (செய்தி இங்கே http://news.bbc.co.uk/2/hi/science/nature/5197926.stm).


ஸ்டெம் செல் பற்றிய ஜார்ஜ் புஷ் மீதான கேலிச்சித்திரம



ஆனால் அறிவியலின் வளர்ச்சியை இது போன்ற சிந்தனையில்லா முயற்சிகளால் தடுக்க முடிந்ததாக சரித்திரம் இல்லை.

ஸ்டெம் செல் வளரும்....அறிவியலும் வளரும்.....

மேல் விபரங்கள்.

http://www.dnalc.org/stemcells.html

http://www.cnn.com/interactive/health/0107/stem.cell/frameset.exclude.html

http://www.stemcellresearchfoundation.org/WhatsNew/EmbryonicStemCells.htm

http://stemcells.nih.gov/info/basics

http://ec.europa.eu/research/quality-of-life/stemcells.html

http://www.newscientist.com/channel/sex/stem-cells

செந்தில்குமார்