Dec 25, 2008

pongal 2009 skit

பொல்லாதவனும் நொந்தகுமாரனும்


கதாபாத்திரங்கள் : பிரம்மா, நாரதர் மற்றும் தேவேந்திரன்


பிரம்மா லோகத்தில் 



 
பிரம்மர் -- "வா தேவேந்திரா.வாருங்கள் நாரதரே.இருவருக்கும் வணக்கம்.வந்து இங்கே அமருங்கள்."


பிரம்மர் - நாரதரே என்ன ஒரே களைப்பு உம்ம முகத்தில் ....

நாரதர் - எல்லாம் நேரம் தான்..என்ன பண்ணுவது ...நான் விஷ்ணுவின் அன்புக்கு பாதிரப்பட்ட என்னையே இங்கே தேவலோகத்தின் அத்தனை          அமைச்சர்கள் என்னை உண்டு இல்லை என்று பண்ணி விடுகிறார்கள்.

ஒரு வேலை உருப்படியாக முடிப்பதர்ற்குள் என் விழி பிதுங்கி போய் விடுகிரதைய்யயா...

தேவேந்திரன் - என்ன நாரதர் உம்மாலே நமது தேவலோகத்தில் ஒரு வேலை உருப்படியாக முடிக்க முடிவதில்லையா...என்ன கொடுமை இது...

நாரதர் - இதைத்தான் சந்திரமுகி என்னும் படத்தில் ரஜினி உபயோகப்படுத்தி இருக்கிறாரே ....நீர் அதையே இங்கே எடுத்து விடுகிறீர்...

நாரதர் - அந்தக்காலத்திலே நான் விஷ்ணுவை பார்க்க வேண்டும் என்று நினைத்த அடுத்த கணத்திலே எனக்கு பாற்கடல் ஆபிஸ்-ல் அனுமதி கிடைக்கும்...இப்போது என்னவென்றால் இன்று விஷ்ணு பிஸி என்று எனக்கே கதை விடுகிறார்கள். பூலோகத்திற்கு செல்ல ஒரு ரதம் வேண்டும் என்று கேட்டு ஒரு வாரமாகியும் தேவலோக மெக்கானிக் இன்னும் கொண்டு வந்து சேர்க்கவில்லை...

தேவேந்திரன் - அட நீர் வேற...இங்கும் அதே கதைதான் நடக்கிறது....தேவேலோகத்தில் சாம பானம் சப்ளை காலியாகி பல நாட்கள் ஆகி விட்டன....கேட்டால் எல்லாம் தமிழ் நாட்டு டாச்மார்க்கிற்கே போதவில்லை என்று
சோமபான சோம்பேறி அதிகாரி என்னிடமே நக்கலடிக்கிறான். இதை எங்கே போய் செப்புவது...

நாரதர் - இங்கேயே இந்தக் கதியென்றால் பூலோகத்தில் என்னாவதோ ....மனிதர்கள் இந்த அதிகார வர்கங்களிடம் அல்லல் படுவது இங்கு நடப்பதை விட்ட கொடுமையாக இருக்கும்...

பிரம்மன் - நாரதா, தேவேந்திரா...உங்களுடைய கவலை எமக்கு புரிகிறது ... எம்மை போன்றவர்களுக்கே கைலாயத்தில் அவ்வளவு சீக்கிரத்தில் சிவனைப பார்க்க முடிவதில்லை ....எங்கே பார்த்தாலும் சிவனடியார்களின் ஆதிக்கம்...

நாரதர் - உமக்கே இந்த கதியா....நாராயணா நாராயணா ....இதற்கு ஒரு முடிவு கட்ட முடியாதா உம்மால்

பிரம்மா - நம்மைபோன்ற தேவர்களும் ....காலச்சக்கரத்தின் சுழற்சிக்கு அப்பாற்பட்டு எதுவும் செய்ய முடியாது...வேண்டுமென்றால் .....ஒரு சித்து விளையாட்டு நடத்திப் பார்க்கலாம்..

நாரதர் - என்ன விளையாட்டு

பிரம்மா - இப்பூலோகத்தில் இதே போன்று வெறுத்துப் போயிர்க்கும் சில மனிதர்களை எதிர்காலத்திற்கு கொண்டு சென்று இப்போதைய நிலைமையை அப்பிடியே தலைகீழாக மாற்றினால் என்ன

நாரதர் - இது நடக்கக் கூடிய விஷயமா ...அவர்களே ...விரக்தியுன் உச்ச்யில் ...நிம்மதியாக தூங்க முடியாமல் தவிக்கிறார்கள் ...அப்பிடியே தூங்கினாலும் கனவு கூட வந்து தொலைப்பதில்லை...


பிரம்மா - அதே தான் ....அவர்களை அப்பிடியே எதிர்காலத்திற்கு கொண்டு செல்லவில்லை....அவர்களின் கனவில் அவர்களை எதிர்காலத்திற்குள் தள்ளி விடுகிறோம்...அப்புறம் பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று..

நாரதர் - நானே ஒரு மிகப்பெரிய குழப்பவாதி -- நீர் எம்மை விட ஒரு பெரிய குழப்பவாதியப்பா ...எதோ ஒன்று இன்று எம்முடைய வேலையை நீரே செய்கிறீர் ,,,,நடத்தும் உம்முடைய நாடகத்தை...


பூலோகத்தில்

கதாபாத்திரங்கள் : நொந்தகுமாரன், லொள்ளு பாண்டி, வெட்டி விஜயன், ஜங்கு ஜனா.

வருடத்தின் அத்தனை நாட்களைப் போலவே இந்த நாளிலும், ஒரு நாளின் அத்தனை நிமிடங்களைப் போல இந்த நிமிடத்திலும்...கொஞ்ச நஞ்சம் மிச்சம் மீதியில்லாதவாறு எப்போதும் வேலை வெட்டியில்லாத நொந்த குமாரன் அன்றைய நாளின் அயர்ச்சியின் அத்தனை அழுத்தங்களை தாங்கமுடியாமல் வீடு திரும்பியிருந்தான்... வழக்கம் போல இன்றைக்கும் ஏதாவது சாதித்து வந்தான் என்றால் அது கொஞ்சமும் கலப்படமில்லாத தோல்விதான். நொந்தகுமாரன் - புலம்பியவாறே...
என்ன கொடுமை சரவணன் இது...சே எங்க போனாலும் நம்மள கடிக்கிறானுங்க...ஊருல குப்பை கொட்டுறவன் கூட நம்மள மதிக்க மாட்றான்...ஒரு நாயை விட கேவலமா போயிட்டோமா நம்ம... இந்த ஆர் டி ஒ என்ன பிரம்மலோகத்திலிருந்து நேரடியா குதிச்சு வந்தவனா என்ன...நம்மள ஒரு மனுசனா வே கண்டுக்கற மாட்டிங்கிரானே.... இவனுங்கள எல்லாம் நிக்க வச்சு சுடனும் .....இந்த நிலைமை என்னிக்கு மாறுமோ.... கடவுளே...இதைக்கேட்க நாதியில்லையா.... வெறுப்புடன் நொந்தகுமாரன் தூங்குகிறான்... கனவில்.....


நிம்மதியாக உறங்கிகொண்டிருக்கிறான் நொந்தகுமாரன் .... காலிங்க்பெல் சத்தம் அவனை எழுப்புகிறது டிங் டிங் யாரப்பா இது இந்நேரத்தில... கதவு திறந்து... என்ன வேணுங்க... தாசில்தார் - அய்யா நான் தானுங்க ...என்ன தெரியல்லையா... நொ. கு. - யோவ் ..ஏன்யா காலங்காத்தால வந்து உசுர வாங்குறீங்க...யாருயா நீ.. தாசில்தார் - அய்யா...ரெண்டு வாரமா அலையா அலைஞ்சு உங்கள எப்பிடியாவது பாதுப்போடலாமுன்னு காதுக்கிட்டிருகேம்ம்ன்யா...போன வாரம் வந்து பாத்தப்ப நீங்க தான்யா இந்தவாரம் வந்து மறுபடியும் பாக்க சொன்னீங்க... நொ கு - இந்த வாரம் வேற வேலை வந்திருச்சு...அடுத்த வாரம் வந்து பாரு... தாசில்தார் - அய்யா...கொஞ்சம் பெரிய மனசு பண்ணி கொஞ்சம் பாருங்கையா... நொ கு - யோவ் உங்களோட ஒரே ரோதனையா போச்சு...உங்கள மாதிரி கவேர்மன்ட் ஆளுக ...வரிசையா வந்து அது பண்ணியாச்சு ... இது பண்ணியாச்சு...அதுல சாட்சி கையெழுத்து போடுங்க...இதுல போடுங்கன்னு ஒரே தொல்லை... எல்லாம் நல்ல ஓடிகிட்டு இருந்தாலும் ...ஏதாவது பிரச்சனைன்னா சொல்லுங்க..உடனே முடிச்சு குடுதுடரோம்னு ஒரே வம்பு...இன்னிக்கு உனக்கு என்னைய்யா...

தாசில்தார் - ஒன்னுமில்லங்கைய்யா...அன்னிக்கு இந்த பாத்திரம் சம்பந்தமா ஒரு பிரச்சனைன்னு கேள்விப்பட்டு...அத முடிச்சி கொடுதிடலாமுன்னு ஒடி வந்தேங்க... நோ கு - யோவ்...அந்த பத்திர விஷயமா.... தாசில்தார் - ஆமாங்கய்யா..ஆமா.. நோ கு - அதான்யா...அந்த கலெக்டர் பாவம் ஒரு மாசமா எதாவது முடிச்சு கொடுக்கிற வேலை இருந்தா சொல்லுங்கன்னு ஒரே நச்சரிப்பு...அவருக்கு கொடுக்கலாமுன்னு இருக்கேன்.. தாசில்தார் - அய்யா..இந்த ஒரு தடவ நம்மள கண்டுகிட்டீங்கன்னா ரெம்ப புண்ணியமா போகுங்க... நோ கு - என்னப்பா உன் தொந்தரவு பெரும் தொந்தரவாப் போச்சு...சரி என்ன பண்ணனும்னு சொல்லு... தாசில்தார் - அய்யா..இந்த பாரம்ல நானே எல்லாத்தையும் தயாரா எழுதி வச்சிருக்கேன்யா....நீங்க ஒரு கையெழுத்து மட்டும் போட்டுடீங்கன்ன...நான் மத்தத பாத்துவந்து வேலைய முடிச்சு கொடுதிடுவேங்கைய்யா நோ கு - கையெழுத்தா...அத அங்க வச்சிட்டு போ....அடுத்த வாரம் வந்து பாரு...உனக்காக இந்தத தடவ கலெக்டர் கிட்ட இந்த வேலைய கொடுக்கல்ல.. தாசில்தார் - நெம்ப தேங்க்ச்குங்கோ...அப்புறம் நான் போயிட்டு வர்றேங்கோ...

அடுத்த தடவ இந்ந்த மாதிரி சொல்லிகிராம வந்து இந்த மாதிரி தொல்லை பண்ணுன அப்புறம் நடக்கிறதே வேற.. தாசில்தார் - மவராசா அந்த மாதிரி ஏதும் பண்ண மாட்டேன், --------------------------------------------- கொடுமை கந்தசாமி - அப்பனே முருகா ,.,,,என்னை மட்டும் ஏம்பா இந்த மாதி சோதிக்கிறே ....நான் என்ன பாவம் பண்ணுனேன். இன்னிக்கு சரியா போய்க்கிட்டிருந்த என்ன அந்த சாவு கிராக்கி டிராபிக் போலீஸ் பிடிச்சு ...௫00 rupaa குடுத்தா தான் விடிவேன்னு ஒரே வம்பு....மருத்துவ செலவுக்கு வச்சிருந்த அத்தனையையும் அழுத்தும் விடல்ல ....இவனுங்களுக்கு ஒரு கேடு வராத ...என்னைக்கு வருமோ நிம்மதியான சுதந்திரம் ... ---------------------------------------------- டிராபிக் கான்ஸ்டபிள் - ஸார் இருக்காங்களா ...உள்ள வரலாங்கள கோசா --...அதான் உள்ளேயே வந்திட்டீங்களே கூச்சப்படாம வீட்டுக்குள்ளரே .... டிராபிக் கான்ஸ்டபிள் - - சொன்னா தப்பா நினச்சிறாதீங்க.. கோசா -- சொல்லியாச்சு ...பேச்சர்றதும் தப்பு தப்பா தான் இருக்கு ....பெறகென்ன இந்த வார்த்தைகளுக்கொன்னும் குறைச்சல் இல்ல... டிராபிக் கான்ஸ்டபிள் --- அது ஒன்னும் இல்ல.. kosaa - ஒன்னும் இல்லையா ..அப்ப நீங்க போயிட்டு இன்னொரு நாளைக்கு வந்து எண்ணப் பாருங்க... டிராபிக் கான்ஸ்டபிள் - - ஸார் நான் வந்த விஷயம் வந்து...போன வாரம் டிராபிக் சிக்னல்ல ரெட் இருக்கும் போதே தப்ப கொஞ்சம் போய்ட்டீங்க ...அதான்... கோசா -- அதுக்கென்ன இப்போ... டிராபிக் கான்ஸ்டபிள் - ஸார் நீங்க சும்மா வந்து ஒரு தடவ சாலை பாதுகாப்பு பத்தி ஒரு வகுப்புக்கு வந்து இர்ந்தீங்கன்ன அது போதுங்க....நாங்க இந்த மாதிரி சாலை பாதுகாப்பு முக்கியத்துவம் பத்தி விளக்கமா வகுப்புல உங்களுக்கு புரிய வச்சு ....இது மாதிரி இனிமே நீங்க பண்ணாம இருக்க உங்களுக்கு ஒரு ஹெல்ப் தான்....அதில நல்ல மார்க் எடுத்தா ஒரு கார் வேற இலவசமா தருவோம்.. கோசா- கேக்க நல்லாத்தான் இருக்கு.,.என்னக்கு நேரமில்லையே.... டிராபிக் கான்ஸ்டபிள் - தயவு செஞ்சு வந்திட்டு போனா ரெம்ப நல்லா இருக்கும்... கோசா - ஒரு தடவ சொன்ன நோக்கு புரியாதேன்னோ...பேசாம அது பத்தி எதாவது டிவிடி ஏதாவது இருந்தா அங்க வச்சிட்டு போப்பா.. டிராபிக் கான்ஸ்டபிள் - ஸார்....நீங்க ரெம்ப பிசி ....அதனால் இப்போ உங்கள தொந்தரவு பண்ண விரும்பல... இந்த டிவிடி வேணும்னா வச்சிட்டு போய்டுறேன்....இதக் கண்டிப்பா பாருங்க ஸார் ...மறந்திராதீங்க... கோசா -- ஆளு பாத்தா ரெம்ப டிசென்ட் ஆ இருக்கீங்க....இனிமேல இந்த மாதிரி வந்து தொந்தரவு பண்ணாம இருந்தாலே நல்லது....புரியிதா...

Oct 16, 2008

சார்லஸ்டன் போ.வி.த

--என்னடா பழசெல்லாம் எடுத்து தூசி தட்டி இங்க பதிப்பிச்சு இருக்கேனேன்னு பார்கிறீங்களா.... நம்மளோட ஞாபக மறதி நம்மளையே அப்பப்ப கவுத்து விட்டுரும்....போன வாரம் எங்க இருந்தேன்றதில இருந்து நேத்து என்ன சாபிட்டோம் வரைக்கும் நம்ம ஞாபகத்துக்கு சிக்காம கண்ணா மூசி விளையாடுறது தினசரி விளையாட்டா போச்சு... ம்ம்ம்.... அதான் ....ரெம்ப நாளா நினச்ச விசயத்த...மத்த இடங்கள்ல ஏற்கனவே எழுதி வச்ச நம்மளோட பொக்கிஷ பதிப்புகளை இங்க போட்டிருக்கேன்...-- 

(இது SATURDAY, AUGUST 18, ௨008 அன்னிக்கு பனைநிலம் வலை தளத்தில எழுதுனது....)  

சார்லஸ்டன் போர் விமானப்படை தளம். அதுதான் சார்லஸ்டன் போ.வி.த.

எல்லோரும் பூங்கா, அருங்காட்சி, விழா, அது இதுன்னு என்னன்னமோ எழுதுறாங்க.....ம்ம்ம்ம், நம்ம எதையாவது எழுதி வைக்கலாம்னுதான். ஹிஹி.. கொஞ்சம் வித்தியாசமான இடத்துக்கு போய் பார்ப்போமா. அப்பிடியே நம்ம வண்டியில ஏறுங்க! இப்போ நம்ம 26 ஹைவே வழியா போய்க்கிட்டிருக்கோம். அப்பிடியே போனா நார்த் சார்லஸ்டன் கொஞ்சம் கடந்தா விமான நிலையமே வந்துரும்...ஆனா இப்போ 642 ரூட் பாதையிலே டாச்செஸ்டர் பாதையிலே போய்க்கிட்டிருக்கோம்.....ரெண்டே நிமிசம்தான. இதோ வந்திட்டோம், எல்லாம் இறங்குங்க.

நம்ம ஊரு பஸ்டாண்ட் மாதிரி.....

விமானங்கள் எலிகள் மாதிரி ஊர்ந்து செல்லும் காட்சி....


என்ன எல்லாரும் அப்படி பார்க்கிறீங்க....இப்போ நீங்க பார்கிறதுதான் சார்லஸ்டன் போர் விமானப்படை தளம். அதுதான் சார்லஸ்டன் போ.வி.த. அமெரிக்காவிலே பழைய விமான தளங்களில் இதுவும் ஒண்ணு..கிழக்கு அமெரிக்காவிலே முதல் மூணு பெரிய விமான தளத்திலே இதுவும் ஒண்ணு......ஊரிலிருந்து 10 மைல் தள்ளியிருக்கு....கொஞ்ச நஞ்சமில்ல கிட்டத்தட்ட 3700 ஏக்கர் நிலம் இதுக்கு....6000 பேர் வேலை பார்க்கிற இடம் வேற....  


அப்பாடி எம்மாம் பெருசு......C17 முன்னே ராணுவ வீரர் வாக்கிங் போறாரோ ?



1931 லே இதுக்கான இடம் வாங்கியிருந்தாலும்.....இரண்டாம் உலகப்போரில தான் 1941 லே சார்லஸ்டனோட புவிதள மதிப்பு தெரிஞ்சு போர்விமான தளத்தை நிர்மாணிச்சாங்க......1951 லதான் இதுக்கு சார்லஸ்டன் ஏர் பேஸ் பேர் வச்சாங்க. இன்னொரு விசயம் என்னான்னா, நம்ம இப்ப பயன்படுத்துகிற பொது விமான ஓடுபாதை ராணுவத்துக்கு சொந்தமாகத்தான் இருந்தது.... 1952 லிருந்து பொதுஜன விமானசேவைக்கும் பகிர்ந்தளிக்க சம்மதிச்சாங்க. இதோட 2007 பட்ஜெட் தெரியுமா..அதிகமில்லை ஜென்டில்மேன், 3.3 பில்லியன் டாலர்...அதாவது 3,300,000,000 டாலர்கள்.....யாரும் உணர்ச்சிவசப்பட்டு போய் உடனே வாங்கிட வேணாம்....அமெரிக்கா கொஞ்சம் பிழைச்சிட்டு போகட்டும்.... 


சார்லஸ்டன் தொங்குபாலத்தின் மேலே


இங்கே இயங்குகிற முதன்மையான விமானம்னு சொன்னா...C 17 தான்....இந்த ரக போர் விமானம் 585,000 பவுண்ட் எடையோட 500 மைல் வேகத்தில 6000 மைல் தூரத்துக்கு மேல ஒரே மூச்சுல பறக்கும்... இது நவீனமான அதிவிரைவு வீரர்கள் மற்றும் சரக்குகளை போர்ததளத்திறகு கொண்டு சேர்க்கும் விமானமாகவும் பயன்படுத்தலாம். விகிமேபியாவின் ஏரியல் வ்யூ http://wikimapia.org/#lat=32.899768&lon=-80.057373&z=15&l=0&m=s&v=௨ 


ராணுவ வீரர்கள் ஈராக் பயணம்....நரகத்தை நோக்கி......

நீங்க இப்ப நிற்கிற இடம்....சார்லஸ்டன் விமானநிலையத்திலிருந்து....நம்ம ஊரு பாஷையில சொல்லனும்னா...நடக்கிற தூரந்தான. அப்பிடியே வடமேற்கு வழியா வந்தா C4 இயங்குதளம் இருக்கும், அதுக்கு வடக்கில நீங்க இப்ப பார்க்கிறீங்களே அதுதான் KC10 எக்ஸ்டெண்டர் பேஸ். அதுக்கும் வடக்கில நம்ம ஊரு பஸ்டாண்ட் மாதிரி வரிசையா C17 ஐ நிறுத்தி வச்சிருக்காங்க. அப்பப்ப பொழுது போகலன்னா இங்க இருக்கிற விமானிகள் பயிற்சி பண்றென்னு சொல்லிக்கிட்டு போர் விமானத்தில மின்னல் வேகத்தில ஊர சுத்திப்பாக்க போய்க்கிட்டு இருப்பாங்க..நம்ம காதுக்குதான் பிடிச்சது கேடு! 

சர்லச்டன் மேலே சுற்றும் இராணுவ வல்லூறு


போருக்குத் கிளம்பும் வீரர்கள்....மரணப் பய(ண)ம் ?!!





வலிமையை பறை சாற்றும் ராணுவ விமானங்கள்.....விமான அணி வகுப்பில்

கொசுறு தகவல்:

163 நாடுகள்ள அமெரிக்க ராணுவத்தோட 470,000 ராணுவ வீரர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலை பாத்துக்கிட்டிருக்காங்க. உள்நாட்டையும் சேர்த்து மொத்தம் 1.3 மில்லியன் பேர்.

இன்னிக்கு நிலவரப்படி கிட்டத்தட்ட ௩௯ நாடுகளில் இருக்கிற ௮௨0 இராணுவ தளங்களில் இருந்து தன்னுடைய நேரடி மற்றும் மறைமுகமான ஆதிக்கத்தை உலகமெங்கும் செலுத்தி வருகிறது... அமெரிக்கா ராணுவத்தோட மொத்த செலவு $431.7 பில்லியன் டாலர்கள் ஒவ்வொரு வருசத்துக்கும்....(இந்திய ரூபாய்க்கு மாத்தி பாத்து வயித்தெரிச்சல கூட்டிக்க வேண்டாம். )
-----------------------------------------------------------------------
அமெரிக்கா ராணுவ விமானங்கள் பற்றிய சில வீடியோ படங்கள்