Jan 23, 2016

உன்னுள்





கல்லில் கிடந்ததை கருத்தினில்  ஏற்றினாய் 

உள்ளில் கிடந்ததை மறுத்தே தூற்றினாய் 

காயத்தினுள் சூத்திரமிருக்க, மாயத்தினுள் தரித்திரம் கொண்டாய் 

பாற்கடல் பருகக்கிடக்க, சேற்றுக்கடல் அருந்திடத்துடித்தாய் 

மேகமது பொழிந்திருக்க, தாகத்துடன் தனித்திருந்தாய் 

சூரியனே உதித்திருக்க விளக்கதனை தேடியலைந்தாய்

மெய்ஞானம் உணராமல் பொய்ஞானம் ஏற்றித்தொழுதாய்

உன்னுள் தொலைத்தபின் விண்ணில் எப்படி தேடிப்பிடிப்பாய் ?!







**************************************

2 comments:

Anonymous said...

Look superb gratified

காயத்ரி said...

ஆம்! அது ....
காயத்தினுள் காயம் கொண்ட
மனிதனின் பேதை மனம்...
ஞானம் பெறும் வரையிலும்
சூத்திரம் அறிந்திடாது
தன்னை தெரிந்திடாது
தன்னிலும் உணர்ந்திடாது
தேடினும் கண்டிடாது....