Sep 5, 2013

பைந்தமிழ்ப் பயிர்த்து



புற்றீசல்போல்
பல்கிப்பல்கிப்பெருகிப் 
பரிணமிக்கும்
சில தமிழ்இலக்கிய 
வியாதிகள்!
விரசமாய் விடவித்துக்களை 
விதைக்கும் 
தமிழ்இலக்கிய 
வியாதிகள் - அவ்வாறே
சமீபத்திய வரவென
சில படைப்பாளிகள்
தமிழ்ச்சோலையில் 
எங்குகாணினும்
அவர்தம் எடுத்தவாந்திகள்!

ஆம், அங்கிங்கெனாதபடி
எங்கெங்கிலும்
வீர்யம் நீர்த்துப்போன
நொள்ளைச்சந்ததிகளாய்
சவலைக்குழந்தைகளாய்ப்பிறந்த
இதுகள்தான்
செந்தமிழ் அழிக்கும் 
சாத்தான்கள்.

அருந்தமிழ் மத்தினைத்துறந்து
சல்லிக்கற்களைக்கொண்டு 
தமிழ்ப்பாற்கடலிலிருந்து 
அமிர்தம்தனை கறந்திடத்துடிக்கும்
போலி இலக்கியநச்சினை 

நம் மனத்தினுள் 
புகுத்திடத்துடிக்கும் 
தமிழ்க்கொலைஞர்களின்
கலிகாலம் இது
அய்யகோ –
கலிகாலம் இது!

எம்மொழிச்சத்து - நீர்த்துப்போய்
தமிழ்தம் வீர்யம்
குறைகுறையென
குறையாதிருக்க
அருந்தமிழ்ச்சூல் தரித்
நற்றமிழ் இலக்கியங்கள் –
தமிழ்அகமெங்கிலும் 
பிறக்கக்கடவதாக!

அங்கனமே
தமிழ்கூறும் யுகமெங்கிலும்-
செவ்வனே இப்பைந்தமிழைப்
பயிர்த்திருப்பதாக! பயிர்த்திருப்பதாக!!
நம்மனச்செழுமைஏற்றும்
தமிழ்ப்படைப்பாளிகள் - அவர்தம்படைப்புக்கள்
இம்மானுடம் உள்ளவரை
உயிர்த்திருப்பதாக! உயிர்த்திருப்பதாக!!

6 comments:

காயத்ரி said...

"அருந்தமிழ்ச்சூல் தரித்த
நற்றமிழ் இலக்கியங்கள் –
தமிழ்அகமெங்கிலும்
பிறக்கக்கடவதாக!" என்றால் செந்தில்.... என் அகத்திலும் அவ்வாறான இலக்கியங்கள் பிறக்குமா? "உனக்கு எதற்கு இந்த பேராசை" என்கிறாயா? ஹ்ம் இறைவன் மேல் எனக்கு கோபம்தான் வருகிறது! தமிழ்பற்றை கொடுத்தால் புலமையை கொடுப்பதில்லை...தமிழ் புலமையை கொடுத்தால் பற்றை கொடுப்பதில்லை! இரண்டுமே அமைய பெற்றவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்! கலிகாலம்தான் நீ சொல்வதுபோல்!

காயத்ரி said...

"நம்மனச்செழுமைஏற்றும்
தமிழ்ப்படைப்பாளிகள் - அவர்தம்படைப்புக்கள்
இம்மானுடம் உள்ளவரை
உயிர்த்திருப்பதாக! உயிர்த்திருப்பதாக!!" தங்களை போன்ற மாபெரும் கவிஞர்கள் உரைத்தால் கண்டிப்பாக நிகழும்! இம்மானுடம் உள்ளவரை தமிழ் படைப்பாளிகள் உயிர்த்திருப்பர்! அவர்தம் படைப்புகளும் உயிர்த்திருக்கும்! மிக முக்கியமாக கணிணியில் வலம் வர வேண்டும்! இனி வரப்போகும் எந்த ஒரு அறிவியல் புதுமையிலும் தமிழ் இடம்பெற வேண்டும்! இடம்பெறும்! அதில் எந்தவித ஐயப்பாடும் தேவையில்லை! அச்சமும் தேவையில்லை! ஏனென்றால் நம்போன்றோரது மனக்குமுறல்களை இறைவன் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறான்! :-))

- செகு - said...
This comment has been removed by the author.
- செகு - said...

//
"அருந்தமிழ்ச்சூல் தரித்த
நற்றமிழ் இலக்கியங்கள் –
தமிழ்அகமெங்கிலும்
பிறக்கக்கடவதாக!" என்றால் செந்தில்.... என் அகத்திலும் அவ்வாறான இலக்கியங்கள் பிறக்குமா? "உனக்கு எதற்கு இந்த பேராசை" என்கிறாயா? ஹ்ம் இறைவன் மேல் எனக்கு கோபம்தான் வருகிறது! தமிழ்பற்றை கொடுத்தால் புலமையை கொடுப்பதில்லை...தமிழ் புலமையை கொடுத்தால் பற்றை கொடுப்பதில்லை! //

-- காயத்ரி, அடக்கத்துடன் நீ கூறியிருந்தாலும் மறுக்கிறேன். நீ எழுதும் கவிதைகள் நான் கண்ட பலகவிதைகளை விட நன்றாக இருந்தது உண்மை.

மொழிரசனை இல்லாவிடின் படைப்புக்கள் மட்டும் தழைத்திருக்காது .

- செகு - said...

// தங்களை போன்ற மாபெரும் கவிஞர்கள் உரைத்தால் கண்டிப்பாக நிகழும்! இம்மானுடம் உள்ளவரை தமிழ் படைப்பாளிகள் உயிர்த்திருப்பர்! அவர்தம் படைப்புகளும் உயிர்த்திருக்கும்! மிக முக்கியமாக கணிணியில் வலம் வர வேண்டும்! இனி வரப்போகும் எந்த ஒரு அறிவியல் புதுமையிலும் தமிழ் இடம்பெற வேண்டும்! இடம்பெறும்! அதில் எந்தவித ஐயப்பாடும் தேவையில்லை! அச்சமும் தேவையில்லை! //


-- பாரதி கண்ட புதுமைப்பெண்ணின் வாக்கு பலிக்கும். உன்னுடைய ஆழ்ந்த கருத்துக்களுக்கும், அவாக்களுக்கும் பாராட்டுக்கள்.

காயத்ரி said...


தங்கள் பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த நன்றி
செந்தில்! மிக்க மகிழ்ச்சி! நெகிழ்ச்சியுடன்!!