Sep 6, 2006

நிஜமான நிஜம்




நேற்றிரவு ஓர் கனா கண்டேன்

நிஜமாகவே நிஜமில்லாத ஒரு கனா...

உருவமில்லா ஒரு உருவம் –

தெளிவான ஆன்மாவோடு

உரையாடிது....

நான் அதனிடத்தில் வினா எழுப்பினேன்

பதில்கள் பக்குவமாக...பாங்காக...அங்கிருந்து

நீ யார் ? , என்று வினவினேன்

நான் நானில்லை! என்றது..அது

எங்கிருந்து வருகிறாய்.??? ..நான்

உண்மையிலிருந்து!...என்று இயம்பியது...

நான் ஏன் பிறந்தேன் ? என்று மதிக்குழப்பத்தினிடையே - என் கேள்வி..

இறப்பதற்காக !!!

பிறப்பது இறப்பதற்கெனில் - இறப்பது பிறப்பதெற்கெனில் - இடையில் வாழ்வதெற்கு...

வாழ்வது வாழ்விழப்பதெற்கு ! - என்றது மொளனமாக

கடவுள் எங்கே ? _ நான்


உனக்குள்! _ அது

நீ அழிந்து விடுவாயா ! - வினையமுடன் வினவினேன்...

உருவால்தானே அழிவதெற்கு !

நான் என்பது எதுவரை ?

இறையை அடையும் வரை !!

உயிர் எங்கே ??? உயிர்த்துடிப்புடன் என் கேள்வி..

உனக்குள் எங்கும் உயிர்...ஒவ்வோர் அங்கத்திலும் ...உயிர் வீச்சாய் பதில் அங்கிருந்து

பிரபஞத்துடன் கலப்பதெப்போது? இது நான்

நான் என்பதை ஒழித்து...! அதன் பதில்

ஞானம் பெருவது எபபடி ??? ஞானக்குழப்பத்தினிடையே நான்

பதில் செப்பாது என்னிடத்தில் எதிர் கேள்வி வீசியது...

நீ யார்...???

யுக யுகமாய் சிந்தித்து பார்த்தேன்...

நான் யார்,,,,. நான் யார்

பதில் வரவில்லை எனக்குள்

கேள்வியை கேள்விப்பட்டதே யில்லையோ... ??

ஒரு வேளை பதிலோ இல்லையோ... ????

அதனிடத்திலே தஞ்சமடைந்தேன்...

நீ யார் என்று அறியாத வரை_ ஞானம் பெற வழியில்லை...


இறை என்பது என்ன ? என் கேள்வி

இறை என்பது இருளானது...ஒளியானது...இரண்டும் கலந்தது...இரண்டும் இல்லாதது...எதுவுமானது.....எதுவுமில்லாதது...எல்லாமுமானது...முடிவில்லாதது.....என்றது ஆன்மா

அயர்ச்சியுடன்...முடித்து விடலாமா ? என்றேன்...

ஆரம்பித்தால்தானே முடிப்பதற்கு!!! என்றது மெதுவாக...

அந்த திடுக்கிடலுடன் என் கனவு கலைந்தது....

கனவு என்பது நிஜமில்லாத நிஜம்

ஆனால் நான் கண்ட கனா

நிஜமான நிஜம்...


செந்தில் குமாரன்

No comments: