May 1, 2019

'அ' வில் உதித்து 'ஃ' ல் உருப்பெற்ற எம்தமிழே!

வனி, அனைத்துலகு, அண்டமெங்கிலும் மூத்தமொழியென உதித்தெழுந்து - பின் 
றுமுக வல்லின, இடையின,  ஆரணங்குகளாய்ச் செழித்த
ன்தமிழே இசைத்தமிழே, இன்னிசையே, இறைவா மொழியே - உன் 
ராறு உயிரெழுத்தால் மூவாறு மெய் கொண்டு என்னுள் இசைந்திருந்து 
யிர்மெய்யென பாகுப்பாடின்றி, களமாடி, கவிபாடி, களவாடி, 
ம்தம் அங்கத்தின்  அணுவரை ஊடுருவி ஈர்த்தெம்மை ஆட்க்கொண்ட அருங்காப்பியமே, பேரின்பக்கடலே! 
ட்டுத்திக்கிலும் ஏழுகடல்சூழ் புவிதனில்  அங்கிங்கெனாதபடி பீடுற்றிப் பரவி 
ழிசைத் தமிழென இவ்வையகத்தே வான் புகழ் கொண்ட தனித்தமிழே! 
யமில்லை நீ தன்னிகரில்லாப் பெட்டகமே, தெள்ளிய அமுதே, திகட்டாத தேன் சுவையே! 
ப்பிலா அணிகலனே, ஒளிகுன்றா சுடர்நுதலே, ஓங்கார இசையழகே! 
ராயிரம் சூரியன்கள் ஒன்றெனவே உதித்திடுமே - ஒய்யார மொழிநடை காண 
தெனவே நற்றமிழாய் நானிலத்தில் என்றென்றும் வாழிய வாழிய வாழியவே!! 

2 comments:

Anonymous said...

test

காயத்ரி said...

அழகு தமிழ்- எங்கள்
ஆதியந்தமான தமிழ்
இன்றமிழ், இன்னிசைத்தமிழ்
ஈசன் கொண்ட தமிழ் தனை
உணர்ந்து உவந்தார்க்கும்
ஊருக்கு உரைத்தார்க்கும்
எண்ணி திளைத்தார்க்கும்
ஏற்றம் கண்டார்க்கும்
ஐயமற கற்றார்க்கும் ஞான
ஒளிதனை பரப்பி
ஓங்கி நிற்கும் தமிழெங்கள்
ஔவை மூதாட்டி கண்ட தமிழ்
அஃதுவே உன்னுள்ளத்தினுள் இசைந்திருந்து

என்றும் திகட்டாத உன் தெள்ளு தமிழ்நடையில் நீ இயற்றும் நற்றமிழ் கவிதைகள் யாவும் தித்திக்கும் தேன் துளிகளே !!!