Sep 27, 2014

வாழ்வியலின் சூத்திரம்




ஆசிரியர்கள் பலர் 
புத்தி சொல்லியும் 

நன்னெறி நூல்கள் 
நலம்பட உரைத்தும் 

நல்லோர் பலப்பல காலம் 
பகுத்தறிவூட்டியும் 

இதிகாசங்கள் 
இடித்துரைத்தும் 

காதலி கசிந்து 
உருகிக்கேட்டும் 

திருந்தாத 
திருந்தவே திருந்தாத 
என் மனம் 

என் குழந்தைச்செல்லம் 
குற்றம் சுட்டி 
அழகென 
அதட்டி  மிரட்டியதும் 

ஞான மின்னல்கள்  பல 
புத்திக்குள் ஊடுருவி 
ஆன்மாவின் அங்கங்களை உலுக்கி 
என்னை முக்தியாக்கியதே!

ஏ இயற்கை பிரம்மமே 
எங்கு போய் 
வாழ்வியலின் சூத்திரத்தை 
சூட்சுமமாய் 
ஒளித்து வைத்தாய். 

சூத்திரத்தின் பாத்திரமாய் 
உன்னையே எனக்குள் 
முழுமுதலாய் 
தெரிய வைத்தாய் !
தெளிய வைத்தாய் !!

3 comments:

Yarlpavanan said...

ஆகா
அழகான வரிகள்
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்

எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

- செகு - said...

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, யாழ்பாவாணன்.
தங்கள் மின்னூலை படித்த்ததுப் பார்க்கிறேன்.
-செ.கு.

காயத்ரி said...

பரவாயில்லை! ஞானோதயம் வந்துவிட்டது! க்ரிஷ்க்கு மிக்க நன்றி! :-)