சாஞ்சிக்கிடக்கிற உன்பொழப்பப் பாத்து
எந்நெஞ்சுக்குலை
இங்கு நான எழுதிய கவிதைகளை, என்னுடைய க(ருத்து)விதைகளை மற்றும் அறிவியல் நிகழ்வுகளை தொகுத்து வழங்கியுள்ளேன். அன்பர்கள் அனைவரும் இவ்வுலகத்தினுள் இன்ப சுற்றுலா சென்று வருக!.
இந்த மண்ணுல நம்ம மனுசனோட வளர்ச்சியை நினைச்சு பார்த்தீங்கன்னா தெரியும் அவன் விலங்கிலிருந்து மிகப்பிரம்மாண்டமாக வளர்ந்து இன்னைக்கு உலகத்தில் அங்கிங்கெனாதபடி ஈரேழு திசைகளையும் தன் கட்டுக்குள் வசப்படுத்தியிருகிறான்னு. அதற்கான மூலகாரணமே கற்காலத்து மனிதன் ஆற்றுவெளி சமுதாயத்தை உருவாக்கியதிலிருந்து வந்த வாழ்க்கைமுறைதான். ஆற்றுவெளியின் அவன் ஆரம்பிச்ச உழவுத்தொழில் நாகரீக வளர்ச்சியின் வித்து, அது விருட்சமாகி, பல்கிப்பெருகி விண்ணையே வசப்படுத்தும் அளவிற்கு வளர்ந்திருக்கு.
நம்ம பண்டைய தமிழர்கள் இந்த உழவுத்தொழிலின் முக்கியத்துவம் தெரிஞ்சு வந்ததனாலேயே, அதன் ஆதாரமான இயற்கையை வணங்கி அதோடு ஒன்றினைந்து வாழ்ந்திருக்காங்கன்னு தெரியுது. அறிவியலே வளர்ச்சியடையா அக்காலத்தில் தங்களோட அறிவின் வளர்ச்சியினாலே வானிலை மற்றும் பருவகால மாற்றங்களை தெளிவாக தெரிஞ்சு காலங்களை இளவேனில், முதுவேனில், கார்காலம், கூதிர், முன்பனி, பின்பனி எனப்பகுத்து அதுப்படி உழவுத்தொழிலை செம்மைப்படுத்தி வந்திருக்காங்க. அதுல இளவேனிற் காலம் அவங்களுக்கு முக்கியமான காலம். ஏன்னு பார்த்தீங்கன்னா அப்பதான் அந்த உழவின் பயனை தம் வாழ்வின் வசந்தங்களை மகிழ்ச்சியாக தொடங்குகிற காலம் – அதனால தான் இளவேனிற் காலத்தை அவங்க புத்தாண்டின் தொடக்கமாக தேர்ந்தெடுத்திருக்காங்கன்னு தெரியுது.
தமக்கு உணவுதந்த அந்த ஆதார சக்தியான ஆதவனை வழிபட்டு, இயற்கைக்கு உணவை பொங்கி வரும் பொங்கலாக படையலிட்டு ஒரு விழாவாக அதை நம்ம தமிழ் சமுதாயத்தின் அடையாளமா கொண்டாட ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு நம்ம தமிழர்கள் உலகின் எந்தக்கோடியிலிருந்தாலும் அந்த பொங்கல் திருநாளை கொண்டாடுறது நம்ம பண்பாட்டின் ஒரு அடையாளம்.
அது சரி, பூலோகத்தின் இன்னொரு கோடியில், ஆசுலே மற்றும் கூப்பர் ஆத்துவெளியில, அன்றைய தமிழர்களின் இன்றைய சந்த்திகளான வாழ்ந்து கொண்டிருக்கும் சார்லச்டன் தமிழ்ச் சமுதாயம் தைப்பொங்கல் திருநாளை அன்னிய மண்ணில் எப்படி கொண்டாடி மகிழ்கிறாங்கன்னு வாங்க போயி பார்க்கலாமா ?
பொங்கல் விழா அன்னைக்கு வர்ற பார்வையாளர்களுக்கு அந்த ஒரு நாள்-திருநாள், ஆனா அன்றைய விழாக்கலைஞர்களுக்கு அன்னைக்கு மட்டுமில்ல கடந்த பல வாரங்களாகவே கொண்டாட்டமான நாட்கள். எப்பிடின்னு கேட்டீங்கன்னா, விழாவிற்காக ஆறேழு வாரங்களுக்கு முன்னாலே பயிற்சி மற்றும் ஒத்திகைக்காக கூடி, மத்தவங்க ஒத்திகையில பண்ற தப்ப பார்த்து சிரிச்சு, தாமே பண்ற தப்பை சமாளிச்சு, எல்லாரும் சமைச்சு கொண்டு வர்ற அத்தனை சாப்பாட்டு வகைகளையும் ஒரு கட்டு கட்டிட்டு, சுகமா கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சு, மத்தவங்கள கேலி பண்ணி், அதகளம் பண்ணி- மொத்தத்தில பல வாரக்கடைசி நாட்கள் கலாட்டா கச்சேரியாத்தான் இருந்துச்சு.
சங்கத்தலைவர் சுந்தர்தான் அயராத வேலைப்பளுவிற்கு மத்தியில் பல நாட்களாக அத்தனை ஆட்களையும் இழுத்துப் பிடிச்சு பல கலை நிகழ்ச்சிகள் உருவாகக் காரணமா இருந்தார்.
இந்த தடவை டேனியல் தீவுப் பள்ளி அரங்கையே தேர்ந்தெடுத்தி்ருந்தோம், அருமையான இடம்…மேடை அமைப்பு, பார்வையாளர்களுக்கான் வசதி, ஒலி, ஒளி அமைப்பு, உணவரங்க வசதிகள் அத்தனைகளும் அருமையா அமைந்த இடம்ன்னு நீங்க பார்த்தாலே தெரியும். வாங்க உள்ளே போகலாம்.
ஆகா….இதென்ன தப்பித்தவறி தமிழ் நாட்டுக்குள்ளேயே வந்திட்டோமா ?....எங்க பார்த்தாலும் கண்ணைப்பறிக்கிற மாதிரி பட்டுப்புடவை, வெள்ளையும் சொள்ளையுமா வேட்டி சட்டையில நம்ம மக்கள் – ஒரு கலக்கு கலக்கிட்டாங்க போங்க. விழா ஏற்பாடுகளை அரக்க பரக்க ஏற்பாடு பண்ற மக்கள் சில பேர், ஒத்திகைகளை மனசில பார்த்துகிட்டே வெளியே பரபரப்பு தெரியாம நண்பர்கள் கிட்ட பேசிகிட்டு இருக்கிற சில பேர், சுத்தி சுத்தி ஓடியாடி உற்சாகமா அரங்கத்தையே அதிர வைக்கிற சுட்டிப்பசங்க சில பேர், பல நாட்கள் கழிச்சு பார்க்கிற சில நண்பர்களோட அரட்டை அடிக்கிற மக்கள் சில பேர், உள்ள வர்ற நம்ம மக்களை வரவேற்கிற மாதிரி…அவங்க கொண்டு வர்ற உணவு பதார்த்தங்கள அப்பிடியே மோப்பம் பார்க்கிற இளவட்டங்கள் சில பேர், - இப்படி பல வித நண்பர்களை பார்க்கிறதே கண்கொள்ளா காட்சியா இருக்கு, இல்லையா.
சிறுமி இனியாவின் நடனம் பார்வையாளர்களுக்கு அருமையான விருந்து – பார்த்துகிட்டிருந்த சின்னப்பசங்களும் ஆட்டம் போட ஆரம்பிச்சுட்டாங்க.
அடுத்தது – ஏலோலோ நாட்டிய நாடகம். மீனவர்களின் வாழ்க்கையில் படும் அவதிகளை, அவ்வாழ்வின் அல்லல்களை அப்பிடியே படம் பிடிச்சுகாட்டுற மாதிரி நடிச்சிருந்தாங்க. சுந்தர், யுவராசு, கொளசிக் மற்றும் செந்தில் மீனவர்களின் ஒவ்வொரு காலகட்டங்களை நடிச்சு நடனமாடி காட்டிகிட்டிருக்காங்க. படகோட்டி துடுப்பு போடுகிற மீனவ மக்களா நடிக்கிறது சந்தோசு, உதய், விக்னேசு, சிவா. மீனவர்களின் கடின வாழ்க்கையை நாடக நடினமாக பார்க்கிற பார்வையாளர்களின் மனச கலங்கடிச்சிட்டாங்க.
இப்ப நீங்க பாக்கிறது, கீதா, சானகி, லட்சுமி, சந்தியா, வானதி, மற்றும் வினு குழுவின் கும்மி நடனம். பட்டுப்புடவையில பகட்டா வந்திருந்து ஆடிறாங்க பாருங்க ஆட்டம் - நம்ம ஊரு கிராமப்பொண்ணுகளே வந்து ஆடி பட்டைய கிளப்பின மாதிரி இருந்த்து. ஒரு தப்பில்ல, தாளம் பிசகல்ல, அத்தனை நேர்த்தி, அத்தனை அசத்தல்.
ஆகா, இது யாரு சரோஜா தேவியா அது, அட இந்தப்பக்கம் யாரு எம்.ஜி.ஆரு – என்னா பண்றாங்க இங்க வந்து – “அன்று வந்ததும் அதே நிலா – இன்று வந்த்தும் அதே நிலா”. பாட்டுக்கு ஆடிறாங்க. உத்துப்பார்த்தாதான் தெரியுது - இது நம்ம லட்சுமி-கவுசிக்தான்னு. அவங்க போனபிறகு குங்குமப்பூவா கொஞ்சுப்புறாவா கொஞ்சி கொஞ்சி செந்தில் – வினு ஜோடி ஒரு கலக்கல் நடனம், அதுக்குப்பிறகு வந்தது அமிர்தா அவங்கப்பா சந்தோசோட வந்து அவரோட காதல்கதையை கேட்டு தெரிஞ்சுகிட்டாங்க. பிறகு வர்றது வா வாத்தியாரே ஊட்டாண்டன்னு சென்னைத்தமிழ் வச்சு மனோரமா – சோ ஆடுன ஆட்டம் கலகலப்பா இருக்கு. ஒரு பெண்ணைப்பார்த்து நிலவை பார்த்தேன் – செந்தில் – வினு ஜோடி இந்தப்பாட்டுக்கு ஆட ஒரே அசத்தல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். மொத்தத்தில இந்த அக்கால நடன நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் மத்தியில் கைத்தட்டல், தூதுகலம், உற்சாகம், பார்க்கிறவங்க எல்லாம் அந்தக்காலத்துக்கே போயிட்டாங்க.
இப்போ வந்திருக்கிறது யுவராசு, செந்தில், குமரன், சந்தோசு நண்பர்கள் சமய நல்லிணக்கத்தை ஒரு இசை நாடகமா அருமையா நடத்தியிருக்காங்க. மனுசங்க மதங்களால பிரிஞ்சு அடிச்சுகிட்டு மனிதத்தையே தன் புனிதத்தையே தொலைச்சுடறான் அப்பிடிங்கிறத அற்புதமாக நடிச்சு காட்டுனாங்க. மனம் நிறைய வைத்த ஒரு நெகிழ்வான நிகழ்வா இருந்தது.
விமானங்கள் எலிகள் மாதிரி ஊர்ந்து செல்லும் காட்சி....

அப்பாடி எம்மாம் பெருசு......C17 முன்னே ராணுவ வீரர் வாக்கிங் போறாரோ ?



முன்னுரை
மருத்துவ உலகில் கிட்டத்தட்ட எல்லா வியாதிகளுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டேயிருந்தாலும், தண்டுவட மற்றும் மூளை, சில விநோத இதய, கல்லீரல் வியாதிகள் மருத்துவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மாபெருரும் சவாலாக கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தது. இந்த உடல் உறுப்புகள் சேதாரமடைந்தால் அதை எப்பாடுபட்டாலும் சரிப்படுத்தி உயிர்காக்க முடியாமல் போனது.
இந்நிலையில் 1998 நவம்பர் மாதம் ஒரு அற்புத வரப்பிரசாதமாக ஜேம்ஸ் தாம்ஸன், விஸ்காஸ்டின் யுனிவெர்சிடி (Wisconsin university) மற்றும் ஜான் கீர்கார்ட், ஜான் ஹாப்கின்ஸ் மெடிசின் ஸ்கூல் (John Hopkins School of Medicine)ஆராய்ச்சியாளர்கள் ஸ்டெம்செல் மகத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள். அதற்கு முன்பே (Ernest A. McCulloch and James E. Till - 1960) அது பற்றிய ஆராய்ச்சிகள் வந்திருந்தாலும் மனித கருமுட்டையிலிருந்து ஸ்டெம் செல்லை உருவாக்கும் அற்புதத்தை முதலில் கண்டுபிடித்தது அவர்கள் தான்.
ஸ்டெம் செல் - விளக்கம்
இப்போது ஸ்டெம் செல் தனித்தன்மையை, அது எவ்வாறு மற்ற செல்களிடமிருந்து மாறுபடுகிறது என்பதை பார்த்து விடலாமா..
நம்மூர் மாயாஜாலக்கதைகளில் படித்திருப்பீர்கள் மந்திரக்குள்ளனின் சுண்டு விரல் துண்டுபட்ட மறு நிமிடமே அது மாயமாக வளர்ந்து மற்றொரு குள்ளனாக உருவெடுப்பதாக. அது போன்று நம் உடம்பில் செல்களுக்கு மந்திரத்தன்மை கிடையாது. நம் உடம்பு மிகச்சிக்கலான, உயிர் மூலக்க்கூறுகளினால் உருவாக்கப்பட்ட உயிரினமானதினால் இது போன்ற வளர்ச்சியடையும் சிறப்புத்தன்மைகள் அதற்கு கிடையாது.
ஆனால் இந்த ஆராய்ச்சியாளர்கள் விடாத முயறசியாக நம் உடம்பில் உள்ள சில வகை செல்களை இந்த வகையான தன்மை கொண்டதாக தூண்ட முடியும் என்று கண்டறிந்தார்கள். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகின் ஒரு மகத்தான மைல்கல். இவ்வகை செல்கள் பல்வேறு கூறுகளாய் பிளவடைந்து அதே போன்ற செல்களை உருவாக்கும் தன்மையையும் (Proliferation), தூண்டல்களுக்கு ஏற்றவாறு சிலவகை சிறப்பு செல்களாகவும் (differentiation) உருவாக்க முடியும் என்றும் கண்டறிந்தார்கள். இவ்வித சிறப்பு செல்கள் பல்கி பெருகி பல்வேறு உறுப்பாக உருவெடுக்கச் செய்யலாம். அங்கனம் இச்செல்கள் எந்த மனித உடம்பின் எந்த பாகமாகவும் உருவாக்கம் செய்து விட சாத்தியமுண்டு. கரு வகை ஸ்டெம் செல்கள் (Embryonic Stem Cells) கரு உருவாகி ஒரளவு வளர்ச்சியடந்த நிலையில் உள்ள செல்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஸ்டெம் செல்களாகும்.
இம்முறையில் உருவான உறுப்புகள் காலகாலமாக தீராத நோய்களுக்கு அருமருந்தாகவும், விபத்துக்களில் பாதிக்கப்பட்ட மற்றும் செயலிலந்த மனிதனுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் அமைந்து விடுகிறது. இம்மருத்துவத்தின் மகத்துவம் அளவிடமுடியாத மற்றும் ஆச்சரியப்படத்தக்க ஒன்றாகும்.
ஸ்டெம் செல் உருவாக்கம் படத்தில்
1) கரு 2) 5-7 நாட்களான கரு 3) ப்ளாஸ்டோசிஸ்ட் நிலை கரு 4) இளநிலை ஸ்டெம் செல்கள் 5) இரத்த, நரம்பு மற்றும் இதய செல்கள்
இது க்ளோனிங் (cloning) எனப்படும் நகல்தன்மையிடமிடந்து மாறுபட்ட ஒன்றாகும். க்ளோனிங்கின் மூலம் உங்கள் உடல் செல்லின் மரபுத்தன்மையை மட்டும் எடுத்து, மரபுத்தன்மை நீக்கப்பட்ட கருவினுள் செலுத்தி அக்கருவை முழு உயிரினமாக வளரச்செய்தால் அது அச்சு அசலாக உங்களைப் போன்ற ஒருவரை உருவாக்கி விடலாம். இம்முறையில் பல நகல் மனிதர்களை உறுவாக்குவது சுவராசியத்தினை விட சமூகக்குழப்பங்களையும் மனக்குழப்பங்களையும் உண்டாக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம்.
ஆனால் ஸ்டெம் செல் உடம்பிலிருந்தே உள்ள செல்களைக்கொண்டு உடல் பாகங்களை உருவாக்கி உயிர்காத்து மற்றும் நோய் தீர்ப்பதால் அதை ஒப்பிலா மருத்துவம் என்றே கூறவேண்டும்.
ஸ்டெம் செல்லிருந்து பல்வேறு உடல் பாகங்கள் உருவாவதை விளக்கும் படம்
இவற்றையும் மீறி விபரம் தெரியாத சில அரைவேக்காட்டு அரசியல்வாதிகள் இவ்வித ஆராய்ச்சிகளை முடக்கிவிட முயற்சிக்கிறார்கள். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் அமெரிக்க சனாதிபதி ஜார்ஜ் புஷ், ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கான பண ஒதுக்கீட்டை முடக்கிவைத்து ஆணையிட்டது. இது இத்துறையில் உள்ள அமெரிக்க ஆராய்ச்சியாளர்க்கு ஒரு பேரிடியாக அமைந்தது (செய்தி இங்கே http://news.bbc.co.uk/2/hi/science/nature/5197926.stm).
ஸ்டெம் செல் பற்றிய ஜார்ஜ் புஷ் மீதான கேலிச்சித்திரம
ஆனால் அறிவியலின் வளர்ச்சியை இது போன்ற சிந்தனையில்லா முயற்சிகளால் தடுக்க முடிந்ததாக சரித்திரம் இல்லை.
ஸ்டெம் செல் வளரும்....அறிவியலும் வளரும்.....
மேல் விபரங்கள்.
http://www.dnalc.org/stemcells.html
http://www.cnn.com/interactive/health/0107/stem.cell/frameset.exclude.html
http://www.stemcellresearchfoundation.org/WhatsNew/EmbryonicStemCells.htm
http://stemcells.nih.gov/info/basics
http://ec.europa.eu/research/quality-of-life/stemcells.html
http://www.newscientist.com/channel/sex/stem-cells
செந்தில்குமார்
(புத்தக விமர்சனம்)ரிச்சர்ட் டாவ்கின்ஸ் -- இன்றைய தலைமுறையின் தலை சிறந்த அராய்ச்சியாளர் சிந்தனைவாதிகளில் ஒருவர்.








