Sep 10, 2006

வண்ணத்துப்பூச்சியானதென் மனம்





வண்ணத்துப்பூச்சியின்

வண்ணத்தினுள்ளே

உறைந்துதொ லைந்திருந்த என் மனம்

அன்றொரு நாள்

என் விழிகள்தனை

மற்றுமொருமுறை

தானமாக கேட்டது

அய்யகோ

நான் இம்முறைஎன் செய்குவேன்

விழிகள் தான்

எப்பொழுதோ ஒருமுறை

வண்ணத்தினுள்ளே

தொலைந்து விட்டதே



இம்முறை

என்மனப்பிரபஞ்சத்தில் மொளனவீச்சாய்

விரவியிருந்த

மதியென்னும் மாயவலைகளை

ஒன்றிணத்து

விழிகளுக்கு -

அதன் மொழிகளுக்கு

பதிலீடு செய்திருந்தேன்



இப்போதெல்லாம்

தினமும்

கனவுச்சோலைதனில்

வண்ணத்துப்பூச்சிகளை காண்கிறேன்


ஆனால்

அதன்

வண்ணங்களை

காண முடிவதில்லை


என் மன

எண்ணங்களை

காண முடிவதில்லை

1 comment:

காயத்ரி said...

வண்ணத்துப்பூச்சி நின்
மனம் மயங்கியதேனோ!
விழிகள் தொலைந்த பின்
வண்ணங்களைத் தேடுதல் முறையோ!
மனம் தொலைந்த பின்
எண்ணங்களும் வரக்௬டுமோ!

தொலைந்த நின்
மனதையும் விழிகளையும்
கண்டறிய விழைவதில்லையோ!
தொலைவதும் சரிதானோ?
தொலைந்ததில் சுகம்தானோ? !