
என் கண்கள்
எதையும் கண்டதில்லை
எத்திசையும்
காண்பதேயில்லை
வண்ணங்களில்
சிறைப்பட்டுக்கொண்டதில்லை
வடிவங்களால்
வரையரை யானதில்லை
ஒளியினில்
மயங்கியதில்லை
எவையெல்லாம்
எப்பிடியெப்பிடியெல்லாம்
இருக்குமோ
என்றெண்ணியதில்லை
ஒளி பிரிந்த, தொலைந்த -
அதன்
உருக்குலைந்த ஓசை
நான்
நித்தம்
கேட்பதினால் - நிழல்
படரபயணம் செய்ததில்லை
கடல், இருட்கடல் முழுகி
முத்துக்குளிப்பினும்
கிடைப்பதென்னவோ
கருமுத்து
சிறிதும்
ஒளியில்லா முத்து
என் மனப்பிரபஞ்சத்தில்
ஒளிச்சூரியன்
தினமும்
இறந்தே பிறந்தான் - மறுபடியும்
பிறந்தாலும் இறந்தான்
இருட்சூரியனோ
இறந்தாலும் பிறந்தான் - பின்
இறப்பையே தொலைத்தான்
அதனால்தான்
நான் இருளை
இருளில்
சுவாசிப்பவன் -
என் மனப்பச்சையம் ஒளியில்லா சுவாசத்தில்
அச் சுகமில்லா வாசத்தில் -
உயிரில்லா ஜீவிதம்
அஜ்ஜீவிதததின் கண்களிலோ
வண்ணாமில்லா வாழ்க்கை
வறண்டுபோன வயற்காடு
வெளிச்சமில்லா இடுகாடு
இருப்பினும் செப்பிடுவேன்
ஊன் உறுதியோடு
உள சுருதியோடு
என் மனது
வணண்மயமான தென்று
எச்சூரியனையும்
சுட்டெரிக்குமென்று