பற்றும்பொருள்
பலவற்றை - நோயெனத்
தொற்றும் எனதுளமே
கற்ற செருக்கொண்டு
உற்ற நிலைநோக்கின் -இதுகாறும்
பெற்றதனைத்தும்
குற்றமுற்ற பொருளுலகே!
நெஞ்சத்தக இருளகற்றும்
மாசற்ற
பரம்பொருள்தன்னை - நித்தம்
பற்றற்றுச் சுற்றிட
திக்கற்றுப்
பிதற்றுதே எனதுளமே!
*******************