
யாராவது என் மனதிற்கு
தீ வைத்து விடுங்களேன்
என் மனது
பல்லாண்டு பல்லாண்டு
பல கோடி நூற்றாண்டு - என்னைக்
கொன்று கொண்டே இருக்கிறது - பசியாய்
தின்று கொண்டே இருக்கிறது -
.
என்னில் உருவகித்து - என்னையே
முடமாக்கியது
எனக்காக உயிர்த்து
என்னையே நீர்த்தது
.
அதற்கு நீரூற்றி வளர்த்தவன் நான்
விஷ வித்துக்களையே அளித்தது அது !
தீபமேற்றி வளர்த்தவன் நான்
என் கைகளை கருக்கி விட்டது அது
காறறு் வீசியவன் நான் - என்
சுவாசத்தையே சுருக்கியது அது
அதனைக் கண்டறிந்தவன் நான்
என்னையே தொலைத்து விட்டது அது
பறக்கக் கற்றுத்தந்தவன் நான்
என் சிறகுகளையே வெட்டிவிட்டதே!
விழி தந்தவன் நான் - என் வாழ்வதனின்
ஒளியணைத்து விட்டது அது !
.
எனவே
என்
அடையாளங்களின் மிச்சங்களை
எந்தன் வாழ்வின் எச்சங்களை
அதன் உச்சங்களை - எவ்வித
அச்சங்களின்றி
நிரட
யாராவது என் மனதிற்கு
தீ வைத்து விடுங்களேன்