யாராவது என் மனதிற்கு
தீ வைத்து விடுங்களேன்
என் மனது
பல்லாண்டு பல்லாண்டு
பல கோடி நூற்றாண்டு - என்னைக்
கொன்று கொண்டே இருக்கிறது - பசியாய்
தின்று கொண்டே இருக்கிறது -
.
என்னில் உருவகித்து - என்னையே
முடமாக்கியது
எனக்காக உயிர்த்து
என்னையே நீர்த்தது
.
அதற்கு நீரூற்றி வளர்த்தவன் நான்
விஷ வித்துக்களையே அளித்தது அது !
தீபமேற்றி வளர்த்தவன் நான்
என் கைகளை கருக்கி விட்டது அது
காறறு் வீசியவன் நான் - என்
சுவாசத்தையே சுருக்கியது அது
அதனைக் கண்டறிந்தவன் நான்
என்னையே தொலைத்து விட்டது அது
பறக்கக் கற்றுத்தந்தவன் நான்
என் சிறகுகளையே வெட்டிவிட்டதே!
விழி தந்தவன் நான் - என் வாழ்வதனின்
ஒளியணைத்து விட்டது அது !
.
எனவே
என்
அடையாளங்களின் மிச்சங்களை
எந்தன் வாழ்வின் எச்சங்களை
அதன் உச்சங்களை - எவ்வித
அச்சங்களின்றி
நிரட
யாராவது என் மனதிற்கு
தீ வைத்து விடுங்களேன்
2 comments:
// தாங்கள் புரிந்தக் குற்றங்கள் பின்வருமாறு;
மனதை பறக்கவிட்டீர்களே
அது எங்கு
பறந்து செல்கிறதென்பதை
கூர்ந்து...உற்று
கவனிக்கவில்லையா?
நீர் ஊற்றினீர்களே
வளர்வது விஷச்செடியென்பது
தங்களுக்குத் தெரியவில்லையா?
முடமாகும்வரை
தாங்களென்ன
பூப்பறித்துக் கொண்டிருந்தீர்களா?
இதிலும் ஓர் ஆச்சர்யம்
வாழ்வில் ஒளியிழந்தப்பின்
தங்களுக்கு மட்டும்
கண் தெரிந்திருக்கிறது!
ஓஹோ!
குருடனுக்குதான்
(இருளிலும்) இரவிலும்
கண் தெரியுமாம்!
பிறருக்குத்தான்
பகலிலும்
விழிகள் ஊமையாகிவிடுகிறதாம்!
இதெல்லாம் பரவாயில்லை
போனால் போகட்டும்
“ தாங்கள் அதனை
கண்டுப்பிடித்தீர்- ஆனால்
அது தங்களையே
தொலைத்துவிட்டது”
இது என்னக் கூற்று?
தங்கள் மனதைத் தாங்கள்
கண்டறிந்தப்பின்
தாங்கள் எப்படித் தொலைந்தீர்?
ஆக
அது இருந்தால்
தாங்கள் இருப்பதில்லை
தாங்கள் இருந்தால்
அது இருப்பதில்லை
தாங்கள் இருவரும்
ஒன்றாய் சேரும்- அத்
திருநாள் பெருநாள் !
வரக்கூடுமா?
இப்படியே
தொலைத்துவிட்டும்
தொலைந்துவிட்டும்
எத்த்னைக் காலம்
புலம்புவீர்?
பல்லாண்டு பல்லாண்டு?
பலக்கோடி நூற்றாண்டு?
தங்கள் பாடு
பெரும்பாடு !
அய்யகோ !
இவர்
என்செய்குவார்?
அந்தோ !
பரிதாபம் ! //
கவிதைக்கு ஒரு கவிதையே பின்னூட்டம். அருமை.
//
ஏழ்க்கடல் ஏழுலகென
அனைத்தயும் கட்டியாள்பவனைவிட
தன் மனதைக்கட்டியாள்பவனே
இப்புவியில்
மிகச்சிறந்த மனிதன்!
மாமேதை! ஞானி!//
காயத்ரி நீங்க ஞானியா இல்ல ஞானியில்லையா..
Post a Comment