Sep 27, 2009

பிரளயம் ஒய்ந்திடுமோ ?

இத்தமிழ்த் தளிர்கள்
விதையென
முளைத்தெழா - விறகென
வீதிகளில் வெற்றுயிர்
கருகிச்சரிய !

முழு இனமே
மந்தை மந்தைகளாய்- எட்டுத்திக்கிலும்
சுட்டுத் தெறிக்க
வாசல் வாசலாய் - சனங்கள்
ஈசல் ஈசலாய் சிதறிக்கிடக்க

என்நெஞ்சுத்தசை
அணுஅணுவாய் பிளந்து
கிழிந்தழிந்ததே
உள்ளினும், வெளியினும் ஊனுயிர் தொலைந்ததே !!

இதுகாறும் இச்சமூகம் இவ்விடத்தே
பூத்துக்குலுங்கிய இத்தேசமே
நீ பிணங்களின் விளைநிலமா ?
கொள்ளிவாய்ப் பேய்களினினும் - கொடூர
மனம்கொள் சிங்களர்களின்
கொலைக்களமா?

சூத்திரர்களின் சூழ்ச்சிக்கரங்களில்
சுதந்திரத்தை சுட்டெரிக்கச்
செய்திட்ட சுடுகாடா ?
விதியெல்லாம் விளையாடி - ஒளிந்தோடி
வீழ்ச்சியடைந்த வெருங்காடா?

ஹிட்லரும் முசோலினியும்
சேர்ந்து உருவான ராசபக்சேயின்
சதிராட்டம் தொலைந்தொழியுமோ?
இப்பிணம்தின்னிப் பேய்களின்
குருதித்தாகம் எம் வேகம் தடுத்திடுமோ?

நாட்டாமை நாடுகள் அனைத்தும்
நல்வழி உணர்ந்திடுமோ?
சூதுகொண்ட ஊழிக்காலம்
உருத்தெரியாமல் அழிந்திடுமோ?

நாளொரு பொழுதும் நரகமாகிப்போன
வன்கொடுமையும் கழிந்திடுமோ?
இருள்சூழ் - எம் உலகில்
ஒளிச்சூரியன் ஓரளவேனும்
உதித்திடுமோ?

ஊனுயிர் உருக்குலைத்த இப்பிரளயம்
எப்பிறவியில் ஓய்ந்திடுமோ ?
உண்மை உயிர்த்தெழுமா?
இக்குலம் தழைத்திடுமோ?

5 comments:

Anonymous said...

I don't have words to explain my feelings, once I read it. We have to do something?
Sangamithra

காயத்ரி said...

ஓர் தமிழனின் உள்ளக்குமுறலை இதைவிட கோபமாக வெளிப்படுத்த முடியாது செந்தில்!

ராஜபக்சே மட்டுமல்ல, அங்கு வேறு யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழனுக்கு இதே நிலைதான்....

வலிமைமிக்க நாடுகளுக்கு நம்மைப்பற்றிய கவலை எதற்கு? சொல்லு?

நம் அரசு முதலில் உள்ளன்போடு நினைத்துப்பார்க்கவேண்டும்!

நாட்டைப்பிடிக்க வருகிறார்கள் என்றால்தான் நடவடிக்கை எடுப்பார்கள்...இது வெறும் ஒரு மாநிலம்தானே?

பாக்கிஸ்தான் படையெடுத்தால் மட்டும் ராணுவத்தைக் குவிப்பார்கள்....ஏனென்றால் அவர்கள் தீவிரவாதிகளாம்....எனில் இவர்கள் யார்? ராஜபக்சேதான் கொடூரமான தீவிரவாதி!

நம் நாட்டைப் பொறுத்தவரை அவரவர் தங்கள் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள என்ன வழி என்று திட்டம்போடுவதற்கே ஐந்தாண்டுகளை செலவழித்து விடுகின்றனர்....இவர்களுக்கெல்லாம் தமிழனென்ன? அவனது உயிரென்ன?

- செகு - said...

//ராஜபக்சே மட்டுமல்ல, அங்கு வேறு யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழனுக்கு இதே நிலைதான்....//

உண்மை. அங்கு இலங்கையில் மட்டுமல்ல, இங்கு இந்தியாவிலும். இதைத்தான் தமிழனின் தனிச்சிறப்பு என்று தெரியாமல் சொன்னாங்களோ!!என்ன கொடுமை சரவணன் (தமிழ்க்கடவுளச்சொன்னேன்) இது.

- செகு - said...

//I don't have words to explain my feelings, once I read it. We have to do something?
Sangamithra//

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. மிகத்தாமதமாக என் பின்னூட்டம். ஆனால் காலங்கள் மாறினாலும் காட்சிகள் இலங்கையில் இன்னும் மாறவில்லை.

- செகு - said...

//Anonymous said...
great//

நன்றி நண்பரே...