Sep 9, 2006

இறை

.

இப்பி ரபஞ்சத்தில்

அங்கிங்கெ னாதபடி விரவி ஒவ்வொரு

அணுவிலும் அணுவாகி

ஆகாச வெளியினுள் வியாபித்து

கோடானுகோடி சூரியன்களை

அத்துணை கோள்களை

அண்ட வெளியிள்

அகண்ட பிரபஞ்சத்தில்

பரப்பி

நம் அத்துணை

ஜீவனிலும் ஜீவனாகி - ஜீனாகி

நம் ஒவ்வொரு பிரேத

செல்லிலும் செயலாகி

உன்றன் -

உயிரணுவினுள்ளும் உயிர்த்தெழுந்து

உன் ஊனுக்குமுயிர் தந்து

உன்னையே உருவகித்து

ஆதர்சனமான சக்தியாகிய

இறை

இப்புவிதனில்

மானிடமாக மட்டும்

உருவு கொண்டதென்ற மாயை

நம் மன வெளிதனில் படர

மானிடனே - நீயே

காரணம்



இப்பிரபஞசத்தில்

எங்கெங்கினும் - இறை

உன்னிலும், என்னிலும்

சக மனிதனும் இறை

சமத்துவமே இறை

அன்பே இறை

.

அவ்விறை மறந்து

மானிடன் கற்பனைவடித்த

இதுகாறும் கதைத்த

இம்மாயையே கிருஷ்ணனனையே

கிருத்துவையே

முஹம்மதுவையே

இறையென்று

உணரும் உன்மனம்

விநோதம் - இப்பிரபஞ்ச உண்மைக்கு

விரோ தம்


முப்பத்துமுக்கோடி தேவர்களும்

எம்மதத்து கடவுளரும்

மானுடவடி வில்

உயிர்த்தெழுவ

இறையென்ற இறவா

வரம் பெற்றனரோ

யாரிடமோ எங்கிருந்தோ

யாமறியோம் பராபரமே



அவர்களையும் படைத்தவன்

ஒருவன் இருப்பனெனில் அவன்

எவனோ

அவன் தான் எப்பிடிப்

பிறந்தானோ


.


இதுகாறும்

நீ கண்ணாறக் கண்டிட

எத்தேவனும்

கிஞ்சித்தும்

இசைந்ததில்லை


அய்யகோ

அத்துணை தேவர்களும்

எப்பழியில்லா பிஞ்சுக்குழந்தைக்கும்

அருட் பாலிக்காத

நெஞ்சு படைத்தவரோ

.

நீ வடித்த இவ்விறை... இதுகாறும்

உன்னிடத்து வந்தது ண்டா.....

நீயுன்

கண்ணால் கண்டதுதா னுண்டா

படைப்பு நோக்கா

படைப்பாளியென்றுன்

இறையிருப்பின்

படைப்பாளி அடையா முக்தி யிலா

தென்று நீ உனையே

தொலைப்பதென்பது

இப்பிரபஞத்தின் விநோத மாயை

இம்மாயை மானிடர்

எழுச்சிக்கு இடர்

அது

என்று தீருமோ, சிந்தை சிறக்குமோ


உன் கைக்காசு

உண்டியலில் - போட்டு

உலகத்தினை கட்டியாளும்

இறையிடத்தில் இறைஞ்சி

கோடானு கோரிக்கைகள்

நித்தம்..

இது உன் இறையை

உன்னிடத்து கிஞ்சித்தும்

கொண்டு சேரா தென்று

அறியாதது

உன் பித்தம்


.


இறையை

உன்னுள் தொலைத்து

இறைவனை, எங்கெங்கோ

தேடித் தொலைக்கிறாய்

உன்னையே, உண்மையையே

இழக்கிறாய்




இதை

உணர்ந்தும் உணரா

இந்நிலை, தன்னிலை கெட்ட

மானுடர்தம் மனம் கண்டு

நெஞ்சு பொருக்குதில்லையே எம்

நெஞ்சு பொறுக்குதில்லையே

.


இம்மாயையே இறையென்று

பொய்யதனை பாரினில் பரப்பி

மதம் என்ற பெயரில்

செப்புவரே

அம்மறை

கழன்ற மானிடர்

கூற்றிய குறைகொண்ட

கூற்றிலக்கியங்கள்


மனமெனும் பாலில்

நம்மனப்பாலில்

விரவியிருக்கும் விஷமென்பேன்

இந்நஞ்சு கண்டு எந்நெஞ்சு

பொருக்குதில்லையே

எந்நெஞ்சு பொருக்கு தில்லையே

.

No comments: