நாரதர் - எல்லாம் நேரம் தான்..என்ன பண்ணுவது ...நான் விஷ்ணுவின் அன்புக்கு பாதிரப்பட்ட என்னையே இங்கே தேவலோகத்தின் அத்தனை அமைச்சர்கள் என்னை உண்டு இல்லை என்று பண்ணி விடுகிறார்கள்.
ஒரு வேலை உருப்படியாக முடிப்பதர்ற்குள் என் விழி பிதுங்கி போய் விடுகிரதைய்யயா...
தேவேந்திரன் - என்ன நாரதர் உம்மாலே நமது தேவலோகத்தில் ஒரு வேலை உருப்படியாக முடிக்க முடிவதில்லையா...என்ன கொடுமை இது...
நாரதர் - இதைத்தான் சந்திரமுகி என்னும் படத்தில் ரஜினி உபயோகப்படுத்தி இருக்கிறாரே ....நீர் அதையே இங்கே எடுத்து விடுகிறீர்...
நாரதர் - அந்தக்காலத்திலே நான் விஷ்ணுவை பார்க்க வேண்டும் என்று நினைத்த அடுத்த கணத்திலே எனக்கு பாற்கடல் ஆபிஸ்-ல் அனுமதி கிடைக்கும்...இப்போது என்னவென்றால் இன்று விஷ்ணு பிஸி என்று எனக்கே கதை விடுகிறார்கள். பூலோகத்திற்கு செல்ல ஒரு ரதம் வேண்டும் என்று கேட்டு ஒரு வாரமாகியும் தேவலோக மெக்கானிக் இன்னும் கொண்டு வந்து சேர்க்கவில்லை...
தேவேந்திரன் - அட நீர் வேற...இங்கும் அதே கதைதான் நடக்கிறது....தேவேலோகத்தில் சாம பானம் சப்ளை காலியாகி பல நாட்கள் ஆகி விட்டன....கேட்டால் எல்லாம் தமிழ் நாட்டு டாச்மார்க்கிற்கே போதவில்லை என்று
சோமபான சோம்பேறி அதிகாரி என்னிடமே நக்கலடிக்கிறான். இதை எங்கே போய் செப்புவது...
நாரதர் - இங்கேயே இந்தக் கதியென்றால் பூலோகத்தில் என்னாவதோ ....மனிதர்கள் இந்த அதிகார வர்கங்களிடம் அல்லல் படுவது இங்கு நடப்பதை விட்ட கொடுமையாக இருக்கும்...
பிரம்மன் - நாரதா, தேவேந்திரா...உங்களுடைய கவலை எமக்கு புரிகிறது ... எம்மை போன்றவர்களுக்கே கைலாயத்தில் அவ்வளவு சீக்கிரத்தில் சிவனைப பார்க்க முடிவதில்லை ....எங்கே பார்த்தாலும் சிவனடியார்களின் ஆதிக்கம்...
நாரதர் - உமக்கே இந்த கதியா....நாராயணா நாராயணா ....இதற்கு ஒரு முடிவு கட்ட முடியாதா உம்மால்
பிரம்மா - நம்மைபோன்ற தேவர்களும் ....காலச்சக்கரத்தின் சுழற்சிக்கு அப்பாற்பட்டு எதுவும் செய்ய முடியாது...வேண்டுமென்றால் .....ஒரு சித்து விளையாட்டு நடத்திப் பார்க்கலாம்..
நாரதர் - என்ன விளையாட்டு
பிரம்மா - இப்பூலோகத்தில் இதே போன்று வெறுத்துப் போயிர்க்கும் சில மனிதர்களை எதிர்காலத்திற்கு கொண்டு சென்று இப்போதைய நிலைமையை அப்பிடியே தலைகீழாக மாற்றினால் என்ன
நாரதர் - இது நடக்கக் கூடிய விஷயமா ...அவர்களே ...விரக்தியுன் உச்ச்யில் ...நிம்மதியாக தூங்க முடியாமல் தவிக்கிறார்கள் ...அப்பிடியே தூங்கினாலும் கனவு கூட வந்து தொலைப்பதில்லை...
பிரம்மா - அதே தான் ....அவர்களை அப்பிடியே எதிர்காலத்திற்கு கொண்டு செல்லவில்லை....அவர்களின் கனவில் அவர்களை எதிர்காலத்திற்குள் தள்ளி விடுகிறோம்...அப்புறம் பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று..
நாரதர் - நானே ஒரு மிகப்பெரிய குழப்பவாதி -- நீர் எம்மை விட ஒரு பெரிய குழப்பவாதியப்பா ...எதோ ஒன்று இன்று எம்முடைய வேலையை நீரே செய்கிறீர் ,,,,நடத்தும் உம்முடைய நாடகத்தை...
என்ன கொடுமை சரவணன் இது...சே எங்க போனாலும் நம்மள கடிக்கிறானுங்க...ஊருல குப்பை கொட்டுறவன் கூட நம்மள மதிக்க மாட்றான்...ஒரு நாயை விட கேவலமா போயிட்டோமா நம்ம... இந்த ஆர் டி ஒ என்ன பிரம்மலோகத்திலிருந்து நேரடியா குதிச்சு வந்தவனா என்ன...நம்மள ஒரு மனுசனா வே கண்டுக்கற மாட்டிங்கிரானே.... இவனுங்கள எல்லாம் நிக்க வச்சு சுடனும் .....இந்த நிலைமை என்னிக்கு மாறுமோ.... கடவுளே...இதைக்கேட்க நாதியில்லையா.... வெறுப்புடன் நொந்தகுமாரன் தூங்குகிறான்... கனவில்.....





















