எம் உலகு
ஒரு பிரமாண்டமான
நீர்க்கடல் - பனித்துளி
என்று அதற்கொரு பெயரும் உண்டு.
எம்
உலகமான பனித்துளி
வீற்றிருப்பதோ
நுனிப்புல் எனும்
அண்டவெளியில்
புல்வெளிதான்
எம் பிரபஞ்ச வெளி
யாமே இந்த ஜகத்தினை
ஆட்சி செய்யும்
உயரிய பிறவிகள்.
நுண்ணியிர்கள் நாங்கள்
எம் உலகு
ஒரு பிரமாண்டமான
நீர்க்கடல் - பனித்துளி
என்று அதற்கொரு பெயரும் உண்டு.
2 comments:
வருகைக்கு நன்றி. தாங்கள் பின்னூட்டம் எமக்கு ஒரு ஊட்டம். மிக்க மகிழ்ச்சி.
-செ.கு.
பிரபஞ்ச வெளியான புள்வெளியில் பிரம்மாண்ட நீர்க்கடலான பனித்துளி உலகத்தினுள் குடிக்கொண்டிருக்கும் நுண்ணுயிர்களின் ஆட்சியை விட உமது சொல்லாட்சியும் தமிழ் மொழியாட்சியுமே எமக்கு மிக பிரம்மாண்டமாக தெரிகிறது! மிக்க மகிழ்ச்சி! தொடரட்டும்! உமது கவிதை பாங்கு!
Post a Comment