Sep 27, 2014



நான் எழுதுவது கவிதை இல்லை!




சிந்தனைச் சத்தின்றி 
வெற்று 
வார்த்தை 
ஜாலங்கள் கொண்டு 

அடுக்கு மொழி 
சொற்றொடர்களால் 
கண்ணாமூச்சி நடத்தி 

கன்னியர் கவர 
அபத்தங்களால் 
தமிழை நிரப்பி 
தமிழைத் தரகு மொழியாக்கி 

போகப்பொருளாய் தமிழ் 
விற்றுப் போசிக்கும் 

கவிதை போன்ற ஒன்றை 
கவிதையே இல்லாத ஒன்றை 
கவிதையென படைத்தும் 
கவி கவி என சிலாகித்தும் 

திண்ணைப் பேச்சை 
திகட்ட திகட்ட இனிப்பூட்டி 
இலக்கிய கவிதையென  போற்றும் 

இப்பேதையர்தம் 
படைப்புக்கள்தான் 
தமிழ்கூறும்கவிதை என்றால் 
நான் எழுதுவது கவிதை இல்லை!
நான் கவிதை எழுதுவது இல்லை!!

2 comments:

காயத்ரி said...

நண்பரே! தாங்கள் எழுதுவது கவிதை இல்லை என்றால்..... ???? !!!!! எம்போன்றோரது நிலவரத்தை கொஞ்சம் யோசித்து பாருங்கள்! ஏனிந்த கொலைவெறி?! அமைதி செந்தில்! அமைதி! :-) தாங்கள்தான் பொறுமையின் சிகரமாயிற்றே! :-)

காயத்ரி said...

அவரவர் தாமாகத்தான் திருந்தியாக வேண்டும்! தமிழறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும்! அதுவும் நிகழுமென்று நம்புவோம்!