அப்பாவி சனமே நீங்க அழிஞ்சி போன சேதி
என்நெஞ் சத்துல அரஞ்சதென்ன
உடம்பிலிருந்து உசுர
கொஞ்சங்கொஞ்சமா உறிஞ்சி விட்டதென்ன
ஆறாத புண்ணுல
ஆயிரம்தேளுக - அங்குலஅங் குலமா
கொத்திவிட்டதென்ன
எண்ணக்கொப் பறையில - எரிஞ்சுஎரியாம
எங்கதேகம் கொதிச்சதென்ன ?
கண்ணுக்குள்ள - இரும்புக்குழம்ப
காச்சிஊத்தி விட்டதென்ன
நெஞ்சுக்குள்ள அமிலத்த
நஞ்சுநஞ்சா ஊத்திவிட்டதென்ன
நாளும்பொழுதுமா எங்கண்ணுல
இரத்தம்க சிஞ்சதென்ன
இராத்திரிப கலென்ன... ரணகளமானதென்ன ...
வீச்சருவா வீசி வீசி
ஏம்மூச்ச, பேச்ச - முழுசா
பறிச்சதென்ன
மொட்டக்கத்தி வச்சு வச்சு
பாதியும் மீதியுமா - எம்மனச
அறுத்ததென்ன
மிஞ்சிக்கிடக்கிற கொஞ்ச சனமே
சாஞ்சிக்கிடக்கிற உன்பொழப்பப் பாத்து
சாஞ்சிக்கிடக்கிற உன்பொழப்பப் பாத்து
கொஞ்சகொஞ்சமா - மீதி உசுரு
புரையோடிப் போனதென்ன ?
அப்பாவித்தமிழ்சனங்க
ஆவி அடங்கினதென்ன - அதக்கண்டு
எந்நெஞ்சுக்குலை
எந்நெஞ்சுக்குலை
நித்தம் சுருங்கினதென்ன
சிங்களப்பேய்களெல்லாம் - எங்க ரத்தம்
குடிச்சுக்குடிச்சு
கூத்தாடிக்கும்மி யடிச்சதென்ன
ஒப்பாரிவக்க வழியில்லாம
நாதியத்துப் போனதென்ன?
வீடுவிட்டு நாடுவிட்டு
ஊருவிட்டு உறவுவிட்டு
பந்தம்விட்டு சொந்தம்விட்டு
ஓடிஒளிஞ்சு தொலஞ்ச இந்தக்குலத்த
கடைசி வரை - தலைவிதி
வன்மம் வச்சு வன்மம் வச்சு
சென்மசென்மமா விரட்டுவதென்ன
சரித்திரமே நீ - என்னைக்கும்
தரித்திரமா மாறியதென்ன
எங்க பொழப்பு ஏழு சென்மமும்
நாறிப் போனதென்ன
3 comments:
எல்லா இரவுகளும் விடிகின்றன.
Suriyan
நெஞ்சை....
உறைய வைக்கும்....
கரைய வைக்கும்.....
கவிதை யென்பதைவிட....
கனமான....
வீறியமான வரிகள்!
இதனை
வாசித்து முடிக்கையில்...
கண் கலங்காதவர்
தமிழனே அல்ல என்பதைவிட.....
மனிதரே அல்ல!
ஒவ்வொரு தமிழனும் துப்பாக்கியை ஏந்திக்கொண்டு சிங்களத்தை தாக்குவதைத்தவிற வேறு தீர்வே கிடையாது!
பின்னூட்டம் எழுதிய நண்பருக்கு!
எல்லா இரவுகளும்
விடிகின்ற இரவுகள்தான்...ஆனால் விடியும் பொழுது
அவ் விடியலுக்காக
காலம் காலமாக
காத்திருந்த மனிதக்குலம்
அழிந்துவிட்ட நிலையில்,
விடியலுக்கு பொருளேது?
மண்ணுக்குள் புதைந்துவிட்டதெம்
மனிதக்குலம்...விடியலென்ன அம்
மண்ணுக்கோ?
புதைத்த ஒவ்வொருவரையும்
புதையுண்ட எங்குலத்தவருடன்
புதைத்தாலன்றி எமதுள்ளத்தின்
புண்ணாறாது!
//
எல்லா இரவுகளும்
விடிகின்ற இரவுகள்தான்...ஆனால் விடியும் பொழுது
அவ் விடியலுக்காக
காலம் காலமாக
காத்திருந்த மனிதக்குலம்
அழிந்துவிட்ட நிலையில்,
விடியலுக்கு பொருளேது?!//
நியாயமான கருத்து. விடியலுக்கு காத்திருப்பது சாதா(ரண) நிகழ்வுதான். ஆனால் இது வலிந்து திணிக்கப்பட்ட ஒரு இருட்போர்வை - சிங்களன் போர்த்திய போர்வை. கிழித்தெறியாமல் விடியல் பிறக்கும் என்பது விண்மீன்களை தூண்டில்போட மனப்பால் குடிப்பதையொத்த விசயம்.
Post a Comment