நீர் அருந்தும
நீர் இருந்தும் - நீந்தமுடியா
மீன் அவனே
.
தேன் எனவிருந்தும்
தேனிருந்தும்
தேற்றவியலா
வண்ணத்துபூச்சியானவன் அவனே
.
சிறகு இருந்தும்
சிறகென உருவமிருந்தும்
பறக்கவியலா சிறு
பறவை அவனே
.
வெளிதனில் தவழ்ந்தும்
ஒளியினையுண்டும்
காணவியலாக் காட்சி்
அவன்
.
காற்றில் பிறந்தும்
காற்றிருந்தும்
சுவாசம் தொலைத்த
அபலை அவனே
.
நினைவாய் இருந்தும்
நினவினைச்சுகித்தும்
நிந்திக்கத்தெரியாதவன்
அவன்
.
உணர விருந்தும்
உணர்விருந்தும்
உண்மை தொலைத்த
பேதையவனே
.
இறையே
நீ அவனுக்கு
ஒளி யளித்தாய்
அவனோ
அதை இருள் -
வெளியினில் தொலைத்தான்
அவனும்
இருளெனத் தொலைந்தான்
.
நீ
அவனுக்குத்தாய் -
உயிரெனச் சுகித்தாய்
அவனோ
மரணத்தை
துணைக்கழைத்திருந்தான்
அதனையே
மணந்திருந்தான்
அதனுள்ளே
என்றென்றும் உறைந்தான்
.
செந்தில்குமாரன்
2 comments:
உங்கள் கவிதைகளில் வார்த்தைப்பிரயோகம் மிக நன்றாக இருக்கிறது!
வாழ்த்துக்கள்!
அதுசரி கடிகாரம் இன்னுமா ஜெர்மனியிலேயே ஓடிகிட்டிருக்கு?!
Post a Comment