இங்கு நான எழுதிய கவிதைகளை, என்னுடைய க(ருத்து)விதைகளை மற்றும் அறிவியல் நிகழ்வுகளை தொகுத்து வழங்கியுள்ளேன். அன்பர்கள் அனைவரும் இவ்வுலகத்தினுள் இன்ப சுற்றுலா சென்று வருக!.
Sep 10, 2006
குருட்டுப்பார்வை
என் கண்கள்
எதையும் கண்டதில்லை
எத்திசையும்
காண்பதேயில்லை
வண்ணங்களில்
சிறைப்பட்டுக்கொண்டதில்லை
வடிவங்களால்
வரையரை யானதில்லை
ஒளியினில்
மயங்கியதில்லை
எவையெல்லாம்
எப்பிடியெப்பிடியெல்லாம்
இருக்குமோ
என்றெண்ணியதில்லை
ஒளி பிரிந்த, தொலைந்த -
அதன்
உருக்குலைந்த ஓசை
நான்
நித்தம்
கேட்பதினால் - நிழல்
படரபயணம் செய்ததில்லை
கடல், இருட்கடல் முழுகி
முத்துக்குளிப்பினும்
கிடைப்பதென்னவோ
கருமுத்து
சிறிதும்
ஒளியில்லா முத்து
என் மனப்பிரபஞ்சத்தில்
ஒளிச்சூரியன்
தினமும்
இறந்தே பிறந்தான் - மறுபடியும்
பிறந்தாலும் இறந்தான்
இருட்சூரியனோ
இறந்தாலும் பிறந்தான் - பின்
இறப்பையே தொலைத்தான்
அதனால்தான்
நான் இருளை
இருளில்
சுவாசிப்பவன் -
என் மனப்பச்சையம் ஒளியில்லா சுவாசத்தில்
அச் சுகமில்லா வாசத்தில் -
உயிரில்லா ஜீவிதம்
அஜ்ஜீவிதததின் கண்களிலோ
வண்ணாமில்லா வாழ்க்கை
வறண்டுபோன வயற்காடு
வெளிச்சமில்லா இடுகாடு
இருப்பினும் செப்பிடுவேன்
ஊன் உறுதியோடு
உள சுருதியோடு
என் மனது
வணண்மயமான தென்று
எச்சூரியனையும்
சுட்டெரிக்குமென்று
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சந்திரசேகரன்....
அடிக்கடி வந்து செல்லவும்....
செந்தில்குமாரன்
Post a Comment