Sep 9, 2006

மழலைக்காதல்




தோள் தொட்டுத்தூக்கி

உச்சி முகர்ந்து

உன் குறும்புக்கண்களை

கொஞ்சுகொஞ் சென்று

கொஞ்சநேரம்கா தலித்து

உன்னதரப்புன்ன கையை

அப்படிஅப்பிடியே இரசிக்க

அய்யகோ

எனை நானிழந்தேன்

.

என் கேசம் கலைத்து

காது மடல் வருடி

கன்னம் குழைத்து

முத்தத்தால் மூழ்கியெடுத்து

உன் பிஞ்சுப்பாதங்கள் என் நெஞ்சினை தாக்க

கொஞ்சி மகிழுமுனக்கு

என் நெஞ்சம் உன் மஞசமடா...கண்ணே...

.

கொஞ்சு மொழிகள் உணர்வாய்

கெஞ்சித் தவழும்

அருட்பார்வை அளிப்பாய்

விரல் பிடித்து வீதிதனில்

நடை பயில

இறைவனையே துணைக்கழைப்பாய்


.
என் மனக்கள்ளனே

என்னையே திருடியவனே

உன் மழலை சிரிப்புக்கு

இந்தப்பரபஞ்சத்தையே

தானமளிக்கிறேன்

.


கிள்ளை மொழி மிழற்றி

கொஞ்சு நடைபயின்று

எனை அள்ளிக்கொண்டு

போனதுன் உள்ளம் - மனக்கள்ளம்

.


இத்தனை காலங்களிலும்

எததனை தூரங்களிலும் -

என் மனத்தோடு ஒட்டிய

தொலைதூரச் சுவடுகளிலும்

இப்பொழுதும்

உன்னைத்தவிர

வேறு எவருமில்லை

.

இறை

.

இப்பி ரபஞ்சத்தில்

அங்கிங்கெ னாதபடி விரவி ஒவ்வொரு

அணுவிலும் அணுவாகி

ஆகாச வெளியினுள் வியாபித்து

கோடானுகோடி சூரியன்களை

அத்துணை கோள்களை

அண்ட வெளியிள்

அகண்ட பிரபஞ்சத்தில்

பரப்பி

நம் அத்துணை

ஜீவனிலும் ஜீவனாகி - ஜீனாகி

நம் ஒவ்வொரு பிரேத

செல்லிலும் செயலாகி

உன்றன் -

உயிரணுவினுள்ளும் உயிர்த்தெழுந்து

உன் ஊனுக்குமுயிர் தந்து

உன்னையே உருவகித்து

ஆதர்சனமான சக்தியாகிய

இறை

இப்புவிதனில்

மானிடமாக மட்டும்

உருவு கொண்டதென்ற மாயை

நம் மன வெளிதனில் படர

மானிடனே - நீயே

காரணம்



இப்பிரபஞசத்தில்

எங்கெங்கினும் - இறை

உன்னிலும், என்னிலும்

சக மனிதனும் இறை

சமத்துவமே இறை

அன்பே இறை

.

அவ்விறை மறந்து

மானிடன் கற்பனைவடித்த

இதுகாறும் கதைத்த

இம்மாயையே கிருஷ்ணனனையே

கிருத்துவையே

முஹம்மதுவையே

இறையென்று

உணரும் உன்மனம்

விநோதம் - இப்பிரபஞ்ச உண்மைக்கு

விரோ தம்


முப்பத்துமுக்கோடி தேவர்களும்

எம்மதத்து கடவுளரும்

மானுடவடி வில்

உயிர்த்தெழுவ

இறையென்ற இறவா

வரம் பெற்றனரோ

யாரிடமோ எங்கிருந்தோ

யாமறியோம் பராபரமே



அவர்களையும் படைத்தவன்

ஒருவன் இருப்பனெனில் அவன்

எவனோ

அவன் தான் எப்பிடிப்

பிறந்தானோ


.


இதுகாறும்

நீ கண்ணாறக் கண்டிட

எத்தேவனும்

கிஞ்சித்தும்

இசைந்ததில்லை


அய்யகோ

அத்துணை தேவர்களும்

எப்பழியில்லா பிஞ்சுக்குழந்தைக்கும்

அருட் பாலிக்காத

நெஞ்சு படைத்தவரோ

.

நீ வடித்த இவ்விறை... இதுகாறும்

உன்னிடத்து வந்தது ண்டா.....

நீயுன்

கண்ணால் கண்டதுதா னுண்டா

படைப்பு நோக்கா

படைப்பாளியென்றுன்

இறையிருப்பின்

படைப்பாளி அடையா முக்தி யிலா

தென்று நீ உனையே

தொலைப்பதென்பது

இப்பிரபஞத்தின் விநோத மாயை

இம்மாயை மானிடர்

எழுச்சிக்கு இடர்

அது

என்று தீருமோ, சிந்தை சிறக்குமோ


உன் கைக்காசு

உண்டியலில் - போட்டு

உலகத்தினை கட்டியாளும்

இறையிடத்தில் இறைஞ்சி

கோடானு கோரிக்கைகள்

நித்தம்..

இது உன் இறையை

உன்னிடத்து கிஞ்சித்தும்

கொண்டு சேரா தென்று

அறியாதது

உன் பித்தம்


.


இறையை

உன்னுள் தொலைத்து

இறைவனை, எங்கெங்கோ

தேடித் தொலைக்கிறாய்

உன்னையே, உண்மையையே

இழக்கிறாய்




இதை

உணர்ந்தும் உணரா

இந்நிலை, தன்னிலை கெட்ட

மானுடர்தம் மனம் கண்டு

நெஞ்சு பொருக்குதில்லையே எம்

நெஞ்சு பொறுக்குதில்லையே

.


இம்மாயையே இறையென்று

பொய்யதனை பாரினில் பரப்பி

மதம் என்ற பெயரில்

செப்புவரே

அம்மறை

கழன்ற மானிடர்

கூற்றிய குறைகொண்ட

கூற்றிலக்கியங்கள்


மனமெனும் பாலில்

நம்மனப்பாலில்

விரவியிருக்கும் விஷமென்பேன்

இந்நஞ்சு கண்டு எந்நெஞ்சு

பொருக்குதில்லையே

எந்நெஞ்சு பொருக்கு தில்லையே

.

Sep 6, 2006

நிஜமான நிஜம்




நேற்றிரவு ஓர் கனா கண்டேன்

நிஜமாகவே நிஜமில்லாத ஒரு கனா...

உருவமில்லா ஒரு உருவம் –

தெளிவான ஆன்மாவோடு

உரையாடிது....

நான் அதனிடத்தில் வினா எழுப்பினேன்

பதில்கள் பக்குவமாக...பாங்காக...அங்கிருந்து

நீ யார் ? , என்று வினவினேன்

நான் நானில்லை! என்றது..அது

எங்கிருந்து வருகிறாய்.??? ..நான்

உண்மையிலிருந்து!...என்று இயம்பியது...

நான் ஏன் பிறந்தேன் ? என்று மதிக்குழப்பத்தினிடையே - என் கேள்வி..

இறப்பதற்காக !!!

பிறப்பது இறப்பதற்கெனில் - இறப்பது பிறப்பதெற்கெனில் - இடையில் வாழ்வதெற்கு...

வாழ்வது வாழ்விழப்பதெற்கு ! - என்றது மொளனமாக

கடவுள் எங்கே ? _ நான்


உனக்குள்! _ அது

நீ அழிந்து விடுவாயா ! - வினையமுடன் வினவினேன்...

உருவால்தானே அழிவதெற்கு !

நான் என்பது எதுவரை ?

இறையை அடையும் வரை !!

உயிர் எங்கே ??? உயிர்த்துடிப்புடன் என் கேள்வி..

உனக்குள் எங்கும் உயிர்...ஒவ்வோர் அங்கத்திலும் ...உயிர் வீச்சாய் பதில் அங்கிருந்து

பிரபஞத்துடன் கலப்பதெப்போது? இது நான்

நான் என்பதை ஒழித்து...! அதன் பதில்

ஞானம் பெருவது எபபடி ??? ஞானக்குழப்பத்தினிடையே நான்

பதில் செப்பாது என்னிடத்தில் எதிர் கேள்வி வீசியது...

நீ யார்...???

யுக யுகமாய் சிந்தித்து பார்த்தேன்...

நான் யார்,,,,. நான் யார்

பதில் வரவில்லை எனக்குள்

கேள்வியை கேள்விப்பட்டதே யில்லையோ... ??

ஒரு வேளை பதிலோ இல்லையோ... ????

அதனிடத்திலே தஞ்சமடைந்தேன்...

நீ யார் என்று அறியாத வரை_ ஞானம் பெற வழியில்லை...


இறை என்பது என்ன ? என் கேள்வி

இறை என்பது இருளானது...ஒளியானது...இரண்டும் கலந்தது...இரண்டும் இல்லாதது...எதுவுமானது.....எதுவுமில்லாதது...எல்லாமுமானது...முடிவில்லாதது.....என்றது ஆன்மா

அயர்ச்சியுடன்...முடித்து விடலாமா ? என்றேன்...

ஆரம்பித்தால்தானே முடிப்பதற்கு!!! என்றது மெதுவாக...

அந்த திடுக்கிடலுடன் என் கனவு கலைந்தது....

கனவு என்பது நிஜமில்லாத நிஜம்

ஆனால் நான் கண்ட கனா

நிஜமான நிஜம்...


செந்தில் குமாரன்

Nov 20, 2005

மானுடம்.....




மனங்களை மானுடர்கள்

எங்கெங்கோ எதற்காகவோ

தொலைந் தெறித்து விட்டார்கள - பாவம்

மானுடத் தன்மையும், மானுடத் துண்மையும்

மனித சீவராசிகளால் -

யுக யுகங்களாக உருக் குலைந்து உரு தொலைந்து விட்டதே......!!!

அற்றொழிந்த மானுடர்களே - தாங்கள்

ஆற்று நீரில் அடித்து செல்லப்படுவதை

அவ்வப்போது கூட உணர்வதில்லையா....

அய்யகோ...

எங்கே, எதற்கு, ஏன்

கொண்டு செல்லப்படுகிறோம்- என்று அறியாப பிண்டங்கள்

ஓட்டைச் சடலம், உப்பில்லா பாண்டம்

என்றெவனோ- பாடித்

தொலைத்ததை

உண்மையாக்கும் ஈனப்பிறவிகள்...

என் மானுட மன்னர்களே... கனவான்களே! - நீங்கள்

காரல் மார்க்ஸினை அறிந்ததுண்டா

டால்ச்டாயின் தத்துவ நெறியை மேய்ந்த துண்டா.... ?

நிகொலாச்கோயின் இடர்பாடுகளை உணர்ந்ததுண்டா - லெனினின்

சமத்துவ புரட்சிகளுடன் புரட்சி செய்ததுண்டா....

தாகோரின் கவிதாஞ்சலியில் முத்தெடுத்தது உண்டா...

பாரதியை உரசியதுண்டா....நீட்சேயினை நிந்தித்ததுண்டா...

ஷெல்லியின் வரிகளை சுவாசித்ததுண்டா......ஷேக்ஷ்பியரினுள் சென்றது உண்டா...

வேர்ட்ஸ்வெர்த்திடம் விளையாடி யதுண்டா....

புத்தனை புரிந்ததுண்டா....புதுமைப்- புத்தனை புரட்டியதுண்டா.....

ஜெயகாந்தனை...ஜெகத்தினை... அளாவளாவியது உண்டா....

ஒஷோவின் உயர்த்த சிந்தனைகளை உண்ர்ந்ததுண்டா...

ஜென் துற வறங்களை ஒரளவு உரசியதுண்டா....

ஆரோக்கியமான சிந்தனைகளிலாவது வலம் வந்ததுண்டா.....

நீங்கள் பிறக்கிறீர்கள் . என்ன வென்று உணராமலே....

நீங்கள் வளர்கிறீர்கள்.....எப்படி யென்று தெரியாமலே....

பின்

இறந்து விடுகிறீர்கள்....எதற் கென்று புரியாமலே....

மானிட்ர்களே வாழ்வை, அதன் பிரபஞ்ச உண்மையை,

அறிந்து புரிந்து உணர்ந்து கொள்ளுங்கள்....

இயற்கையின் இறையை - இரசிக்கக்

கற்றுக்கொள்ளுங்கள்....

அன்பே இறையென்றுணருங்கள்


இதெல்லாம் முடியா விடில் ......

இன்றைக்கே......

இறந்து விடுங்கள்....

- செந்தில் குமாரன்