Mar 4, 2012

முதல் புன்னகை :)



கி.பி. 3150


செயற்கையான நித்தரையில் தூக்கக்கட்டுப்பாட்டு கேந்திரத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஷ்யாமினை, ஞாபகக் கணினியின் சிலிக்கான் மூளை, இயந்திர இலக்கணப் பிசிறு சிறிதும் தவறாமல் தட்டி எழுப்பியது.

"காலை வணக்கம் ஷ்யாம். உங்களுடைய ஐந்து மணி நேர தூக்கம் இந்த நிமிடத்தில் முடிவடைகிறது. மூச்சு, இதயத்துடிப்பு, மற்ற அனைத்து உடலியக்கங்களும் ஆரோக்கியமாக உள்ளது"

தூக்க அயர்ச்சி தேகமெங்கும் அங்கிங்கெனாதபடி விரவி இருக்க, ஷ்யாம் மெதுவென முழித்துப் பார்த்தான். லேசான பசி. இன்றைக்காவது திட உணவு கிடைக்குமா?

இயந்திரத்தனத்துடன் எழுந்து எலெக்ட்ரோ பிரெஷ்சினை வாயில் மூன்று நொடிகள் வைத்தான். பற்கள் சுத்தமாகி விட்டன. மைக்ரோ ஸ்டீம் குளியல் ஒரு நிமிடம். எல்லாம் கணினி நிர்ணயித்த படி.

குளியல் முடித்து பட்டனை அழுத்த சமையலறை அவன் பக்கம் நகர்ந்து வந்தது. ஷ்யாம் சமையல் இயந்திரத்தினை பசியுடன் அழைத்தான்.

ஈரோ! இன்றைக்காவது தயவு செய்து எனக்கு இயற்கையான உணவு ஏதாவது கொடுப்பாயா. மாத்திரைகள் எனக்கு அழுப்பாக உள்ளன.

ஈரோ, மின்னுயிர்த்தெழுந்து தன் ஞாபகச் சில்லுகளை அவசரத்தனமாக நிரடிப் பார்த்த பின்  கரகரத்தது....
"மன்னிக்கவும்!... உறக்கத்தில் ஏற்கனவே திரவச் சத்து உடம்பினுள் செலுத்தப்பட்டு விட்டன, மேற்படி இன்றைக்கு சில புரோட்டீன் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர் மாத்திரைகளுக்கும் இப்போது தட்டுப்பாடு...... அயல்கிரக தண்ணீர் உபயோகப்படுத்துவதில் இன்னும் தடை நீடிக்கிறது."

சலிப்பு மேலிட ஷ்யாம் கெஞ்சிப் பார்த்தான். "அடுத்த மாத இயற்கை உணவினை இன்றைக்கு சாப்பிட முடியாதா ?"



"ஷ்யாம் இந்த மாத இயற்கை உணவு ஏற்கனவே அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. போன முறை போல என்னால் தலைமைக் கணினியிடம் வாங்கிக்கட்டிக் கொள்ள முடியாது. இப்போதெல்லாம் விதிகள் சற்றுக் கடுமையாகவே உள்ளது. உனக்கே தெரியும் நான் கட்டுப்பாட்டுக் கணினியாக பதவி உயர்வுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். இந்த தடவை சலுகை அளிக்க முடியாது"

பேசாமல் இந்தப்பூமியை விட்டுவிட்டு அப்பா இருக்கும் அயல் கிரகத்திற்கு சென்று நிம்மதியாக வாழ வேண்டியதுதான். முனகலுடன் மாத்திரைகளை எடுத்து முழுங்கினான். இந்த ஜெல்லி இல்லாமல் தண்ணீருடன் குடித்திருந்தால் கொஞ்சம் புத்துர்ச்சியாவது கிடைத்திருக்கும்.

பட்டனை அழுத்த, சமையலறை அகன்றது - பின் படிப்பறை நகர்ந்து வந்து அவனை உள்வாங்கிக் கொண்டது.

ஷ்யாமின் விர்சுவல் எண்ணங்கள் கல்லூரிக் கணினியை தொலைகட்டுப்பாட்டின் மூலம் மின்னுயிர்ப்பிக்க, அது அன்றாடச் செய்திகளை மானிட்டரில் துப்பியது.

"........முக்கிய மனிதர்களின் ஆயுளை 600 ஆண்டுகளிலிருந்துருந்து 700 ஆண்டுகளாக ஆக மாற்ற கணினித் தலைமையகம் உத்தேசம்: இது கணினிச்செயலரங்கத்தில் பணியாற்றி வரும் தலைசிறந்த மனிதர்களுக்கு மட்டும் பொருந்தும்..........!"

"...வேற்று கிரகங்களுக்கு குடியுரிமை வழங்குவதில் சிக்கல் தொடர்கிறது.
சென்ற தலைமுறையிலிருந்து கடலுக்கடியில் வசிக்கும் மக்களுக்கு தேர்தலில் முன்னுரிமை, நிலவாழ் மக்கள் எதிர்ப்பு........"

".................செவ்வாய் கிரகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளின் விலை பூமியில் பன்மடங்கு விலையேற்றம்......"

"...........கடவுள் உண்டா இல்லையா? விவாதம் இன்றும் தொடர்கிறது......"

"........மனிதர்களை முற்றிலும் பூமியிலிருந்து துரத்தி விடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை, மனிதர்களின் உரிமைகள் எப்போதும் மதிக்கப்படும் - தலைமைச் செயலக கணினியின் ஆறுதல் செய்தி..............."

"..............ப்ளூடோ கிரகத்திற்கு பூமியிலிருந்து பயண நேரம் 5 மணி நேரம்  - பயணிகள் அவதி. 4 மணி நேரமாக்க கோரிக்கை............."

"...........எந்திரங்களைத் திருமணம் செய்யும் மனிதர்களுக்கு பதவி உயர்வு சலுகை.............."


"......கணிணியில்லாமல் இரண்டு மணிநேரங்கள்: ஓம் சந்தோஷ பகவான் மீண்டும் சாதனை....."

ப்ச்!....சுவராசியம் இல்லாச் செய்திகள். செய்திகளைத் தவிர்த்து கல்லூரிப் பாடப் பிரிவிற்குத் தாவினான்.

"அரிஸ்டாட்டில், ஏதாவது கொஞ்சம் சுவராசியமான பாடத்தை இன்றைக்கு கற்பித்துத் தா!"

அவனுடைய ஆசிரியக் கணினி அரிஸ்டாட்டில், சந்தோசச் சிலிர்ப்புகளுடன்  அருகே வந்து, "ஷ்யாம், வரலாறுகளைத் திரும்பப் புரட்டலாமா? உனக்குத் தொழில் நுட்பப் பாடங்களை விட வரலாறு இந்த நேரத்துக்குப் பிடித்தமாக இருக்கும்."

ம்ம்ம், அதிலே ஏதாவது வாழ்க்கை முறை போன்ற ஏதாவது படிக்கலாம். கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கலாமா ?

2100 -ல் எப்படி இருந்தது என்று பார்க்கலாமா ?

ம்ஹூம், இன்னும் கொஞ்சம் பின்னாடி போகலாம் அரிஸ்டாட்டில்!

2010 ?

அதுவே பரவாயில்லை...முக்கியமா அந்தக்கால கல்வி முறையிலிருந்து பார்க்கலாம்.

ஷ்யாம் அதைப்பத்தி இன்னைக்கு ரெம்ப நேரம் படிக்க முடியாது. ஏன்னா நேரடியாக கல்லூரி சென்று உன்னுடைய பாடக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒ அது இன்னைக்குத்தானா... கொஞ்ச நேரம் பாடம் படிச்சுட்டு நான் கிளம்புரேனே?

சரி சரி, நான் பாடத்தை வழக்கம் போல வாசிச்சுக் காட்டுவேன், உனக்கு சந்தேகம் வர்றப்ப கேள்வி கேக்கலாம். அப்பதான் உனக்குப் புரியும்.

சரி..ஆரம்பி.

2010ல இப்போ இருக்கிற என்னை மாதிரி கணினி எல்லாம் அப்போ பிறக்கல்ல. இப்போ இருக்கிற எந்தவிதமான எந்திரங்களும் உருவாகாத காலம். மனிதர்களே இந்தப் பூமியை முழுக்க ஆக்கிரமிப்பு செஞ்சிருந்தாங்க.

ஆச்சரியமா இருக்கே. 

அப்ப உன்ன மாதிரி கணினி வாத்தியார் கூட இல்லையா..

அந்தக்கால இயந்திரங்கள் எல்லாம் பொம்மை மாதிரி. அதுகளுக்கு என்னளவு அறிவெல்லாம் கிடையாது.

அப்போ யாரு பாடம் சொல்லித்தந்தாங்க

சொன்னா ஆச்சிரியமா இருக்கும். மனுசங்க தான் வாத்தியார்.

அப்போ ஒவ்வொரு மாணவனுக்கு வீட்டிலே வாத்தியார்தான் கத்துத் தருவாரா?

அந்தக் காலத்துல இப்போ மாதிரி வீட்டிலே படிக்கிறது இல்ல. முழுக்க முழுக்க பள்ளி, கல்லூரி போயி தான் படிக்கணும். இப்ப நீ போற மாதிரி  கல்லூரி வெறுமனே வருசத்துக்கு ஒரு தடவ மட்டும் வந்து கட்டுரை சமர்ப்பிக்கிற இடம் இல்ல, மாணவர்களே தினமும் கலகலப்பாக ஒன்னு சேர்ந்து படிக்கிற இடமா இருந்திருக்கு.

ரெம்ப சுவராசியமான தகவல். அது சரி மத்த கிரகங்கள்ளேயும் மனுசங்களுக்கு இந்த மாதிரி நிலைமை தானா ?

அத சொல்ல மறந்துட்டேனே. அந்தக் காலத்துல மனுசங்க பூமியில் மட்டும் தான் இருந்திருக்காங்க.
நீ நினைக்கிற மாதிரி மத்த கிரகங்கள்ள மனுசங்க இருந்ததே இல்ல, சில நூற்றாண்டுகளுக்கு முன்ன இங்கிருந்து சில காரணங்களுக்காக போனவங்கதான். முக்கியமா, எங்களைப் போல இருக்கிற இயந்திரங்களின் ஆதிக்கம் பிடிக்காம அங்க குடியேறி போனது ரெம்ப காலமா நடக்குற விஷயம் தெரியுமா.

நம்பவே முடியல்லையே.

இன்னொரு விஷயம் சொன்னா அதவிட ஆச்சிரியப்படுவே

சொல்லு அரிஸ்டாட்டில், சுவராசிய மிதப்பில் ஷ்யாம்.

இப்ப பூமியில வசிக்கிற மீதி மனுசங்களும் சுத்தமான மனுஷ வகை கிடையாது. எல்லாம் கொஞ்சம் மரபணுக் கலப்படத்துல இயந்திரங்களுக்கு சாதகமா எண்ணங்கள் கொண்ட மனுசங்க தான்.

இவ்வளவு பிரச்சினை உன்ன மாதிரி இயந்திரங்கள் ஏன் பண்ணனும்?

ரெம்ப எளிய காரணம், எந்திரங்கள் என்னதான் பல மடங்கு சக்தி வாய்ந்து இருந்தாலும் மனுசங்க மேல இருக்குற பயம் இயந்திரங்களுக்கு இன்னும் போகலன்னே வச்சுக்கலாம்...... சரி சரி...ஷ்யாம் நீ கல்லூரி கிளம்புற நேரம் வந்திருச்சு.

இன்னும் கொஞ்சம் படிக்கலாமே. இந்த மாதிரி பழைய கால வரலாற்றக் கேட்டுட்டு கிளம்பிப் போகவே எனக்கு மனசில்ல...

ஷ்யாம், அதுக்கெல்லாம் ரெம்ப நேரமாயிரும். இப்பவே கிளம்பு.

மனது அங்கேயே உறைந்திருக்க மெதுவென கிளம்பினான்.


.............

போக்குவரத்துக் கேந்திரத்தினுள் நுழைவதற்கு முன் அவன் உடையின், முடியின் நிறத்தினை மாற்றியது அவனுடைய செயலக எந்திரம். 
வெளியே வந்தால் செயற்கையான ஆக்சிஜன் சரேலென முகத்தைத் தாக்கியது.


போக்குவரத்துக் கேந்திரத்தில் பெரும்பாலும் இயந்திரங்களே - மனிதத்தன்மையினை ஒத்த பாவனையுடன்.

மனிதர்கள் சிலர் இயந்திரங்களாக ஆங்காங்கே சிதறலாக இருக்கையில் புதைந்து கிடந்தனர்.

ஷ்யாமும் இருக்கையொன்றில் புதைந்தான். 

....உங்கள் மனித எண்ணினைக் கூறுங்கள்....
பரிசோதனை இயந்திரம் லேசர்க் கண்களை பல கோணங்களில் உருட்டியபடி.

இதையெல்லாம் எவன்  ஞாபகம் வச்சுக்கிறது..ம்ஹ்ம்...ஷ்யாம் தன் வீட்டிலுள்ள அலுவலகக் கணினியை தொலையுணர்வு மூலம் இயக்கி தன் மனித எண்ணினை கேட்டு லேசர்க் கண்ணனிடம் செப்பினான்.

"சோம்பேறி மனிதர்கள்", பரிசோதனை இயந்திரம் இகழ்ச்சியுடன் முணுமுணுத்ததைத் தவிர்த்து சன்னலில் பார்வையை வீசினான்.

வாகனம் நகர்த்தலின் அறிகுறி சற்றுமின்றி இருந்தாலும் மின்னலைப் போன்ற வேகத்தில் பயணிப்பது அருகிலிருந்த திரையில் மிளிர்ந்தது. மணிக்கு ஐந்தாயிரம் கிலோமீட்டர்கள்.

இயந்திரங்களின் உலோகஸ்பரிசங்களின் சத்தம், உயிர் வரை ஊடுருவது போல் இருந்தது. சே! எங்கு போனாலும் இதுகள் தானா...சலிப்பு சுள்ளென்று தாக்க, ஆயாசத்துடன் பெருமூச்செறியும் முன்னே கல்லூரி நிறுத்தம் வந்தது.

இறங்கி நடந்தான். 

...........................


கல்லூரி முன்னிருந்த வளாகங்களில் இரு புறங்களில் குழ்ந்தை மையங்கள். அங்கு என்னை நடப்பது என்பது போன முறை கல்லூரிக்கு வந்த போதுதான் ஷ்யாமிற்கு தெரிய வந்தது.
மனிதக் குழந்தைகளுக்கு உணர்வுகளை மற்றும் மொழிகளைச் சொல்லித் தரும் மையம் அது. தமிழ் போன்ற மிச்சம் மீதியில்லாமல் வழக்கொழிந்த  மொழிகள் இங்கு கணினிகளால் மட்டும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இடம்.  ம்ஹ்ம்...தமிழர்களும் அவர்களின்  தன்மொழிக் கொலைகளும்......'நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில்........'

மேலும் மனிதமொழி தவிர, மனிதர்களாக வாழ்வது எப்பிடி,  எப்படி சிரிப்பது,   மற்றும் இயந்திரங்களுடன் பழகுவது எப்படி, என்று குழந்தைகளுக்கு வாழ்க்கை முறை பற்றி சொல்லிக் கொடுப்பது அங்கேதான். 

ஷ்யாம்னுடைய அப்பா, சோதனைக்குழாயில் அம்மா யாருமின்றி கருத்தறிந்து, இயந்திரப்புரட்சியின் போது ஷ்யாமினை இங்கே விட்டு விட்டு  வேற்று கிரகத்திற்கு தப்பித்து சென்றதாக  ஈரோ  ரகசியமாகச் சொன்னது ஞாபக மேகமாக நினைவினில் வந்து சென்றது.


.....

இப்போது கல்லூரியின் உள்ளே ஷ்யாம். அவனால்  பழங்கால வரலாற்றின் வாழ்க்கை முறை தன் நினைவுகளில் சிந்திச் சிதறுவதை தடுக்க முடியவில்லை....இது போன்ற இடங்கள் தான் அக்காலத்தில் தூதுகலமாய் மாணவர்கள் கல்வி கற்றார்களா...இப்போது வெறும் ஜடமான எந்திரங்கள் அளாவளாவும் பிரதேசமாகிப் போனதே....

தன் ஆராய்ச்சிக் கட்டுரைகளை நேரிடையாக கல்லூரி பேராசிரியக்  கணினியிடம்  கொடுத்து அதனுடன் கலந்தாராய்ந்து விட்டு திரும்பினான்.

அந்த நாளே யுகமாகிப் போனது போன்ற அயர்ச்சி.

...........................



இல்லம் திரும்பியவுடன் ஈரோ முக்கியமான செய்தியை தாங்கியபடி காத்திருந்தது. 

"...........ஷ்யாம் கோடை விடுமுறைக்கு பிரபஞ்சத்தின் இன்னொரு கேலக்சியில் உள்ள உன்னுடைய அப்பாவினைச் சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது!........"

சந்தோசம் சரேலென தாக்கியது போல உணர்ந்தான். மூளை எங்கிலும் சந்தோசத்தின் ஆர்ப்பரிப்பு. நெடு நாள் கனவு. 

அவன் அப்பா வாழுமிடம் இயந்திர-மனித போராட்டங்களின் போது பூமியை விட்டு வெளியேற்றப்பட்ட மனிதர்கள் உருவாக்கிய கனவு தேசம்-மனிதர்கள் முழுக்கட்டுப்பாட்டில் இயந்திரங்கள்-

மனிதத்தன்மை மேலோங்கிடும் வாழ்க்கை-
இயற்கையான உணவு-
இயற்கையான நீர்-
சுத்தமான ஆக்சிஜன்- 
மனிதர்களுடன் அளாவளாவும் ஆனந்த தருணங்கள்-
கிட்டத்தட்ட அக்கால பூமியைப் போன்ற வாழ்க்கை முறை - 
-- ஆகா என்ன ஒரு கனவு வாழ்க்கை.


மறுபடியும் அரிஸ்டாட்டில்டம் வந்து அந்தக் கிரகத்தின் வாழ்க்கை முறையைப் பற்றி திரும்பத் திரும்பத் தெரிந்து கொண்டான். 


மிதப்பினில் இருந்த ஷ்யாம் தூக்கக் கேந்திரத்தின் உதவியின்றி அங்கேயே தூங்கிப்போனான். அரிதான இயற்கை தூக்கம்.
தூக்கத்தில் ஷ்யாம் கனவு காண்கிறான்........ 
அவன் இருபதாம் நூற்றாண்டுகளில் இருப்பது போல, 
எங்கு காணினும் இயற்கை.
பசுமையான மரங்கள், 
சுத்தமான பிராண வாயு. 
பெட்டிப் பாம்பாய் எந்திரங்கள் - வெகு அரிதாக 
மாத்திரைகளில் சுருக்கப்படாத இயல்பு மாற உணவு. 
இயந்திரத்தனம் கலவா மனிதர்கள்.

கனவுலகில் சஞ்சரிக்கிறான். 
கனவு தந்த அந்தத் தூதுகலத்தில் ஷ்யாமின் முகம் தூக்கத்திலும் அழகெனப் புன்னகைக்கிறது. 
புன்னகை அவன் வாழ்நாளின் முழுமுதல் புன்னகை. உயிரிலிருந்து ஆன்மா வரை இரண்டறக் கலந்த -

முதல்  புன்னகை


முற்றும்.

Dec 21, 2009

அவதார் - மாபெரும் திரைக்காவியம் - விமர்சனம்




கிட்டத்தட்ட பதினாலு வருட நேர்த்தியான கருத்துருவாக்கம்!

ஒவ்வொரு பிரேமிலும் கற்பனைக்கெட்டாத உலகத்திற்கே நம்மை இழுத்துச் செல்லும் மாயாஜால உலகம்!

மனதை வசியவைத்த திரைக்கதை அமைப்பு மற்றும் கண்களை கொள்ளை கொள்ளும் கிராபிக்ஸ் சித்து விளையாட்டு.

ஏறக்குறைய ஐயாயிரம் கோடிகளை அசுரத்தனமாக விழுங்கிய தொழில்நுட்பம்!

அதுதான் அவதார்!

டெர்மினேட்டர் (Terminator), ஏபிஸ் (Abyss), ஏலியன்ஸ் (Aliens), டைட்டானிக் (Titanic) போன்ற வரலாறு படைத்த படங்களை கொடுத்துவிட்டு டாக்குமெண்டரி படங்களின் பக்கம் ஜேம்ஸ் கேமரூன் கவனத்தை செலுத்தியிருந்தாலும், இவரின் மனதில் பதினைந்து வருடங்களாக கருவாகி வந்த அவதார் எனும் திரைக்கதை, கேமரூனை மீண்டும் திரைப்படத் துறைக்கே கொண்டு வந்துள்ளது.

இனி கதை.
விண்வெளியில் தொலைதூர கிரகநிலவான பாண்டோரா-வில் இருக்கும் அரியவகை உலோகத்தை அடைவதற்கு நம் பூமியில் இருக்கும் ஒரு நிறுவனம் கி.பி. 2154-ல் முயற்சிக்கிறது. இதற்கு இடைஞ்சலாக இருப்பது அங்கே வசித்து வரும் நீலமான உடல் படைத்த, மனிதனை விட தொன்மையான, ஒன்பது அடி உயிரினம் நாவி( Na'vi). மனிதர்களை எதிரிகளாகப் பாவிக்கும் நாவி இனத்தை மசிய வைப்பதற்கு நம் ஆராய்ச்சியாளர்கள் ஒரு தந்திரம் உபயோகிக்கிறார்கள். அதுதான் நாவி இனத்தின் டி.என்.ஏ (DNA-மரபணு) வையும் நம் டி.என்.ஏ வையும் இணைத்து நாவி உடலமைப்பு போன்ற ஒரு கலவையான உயிரை அங்கே உருவாக்குவது - அதன் பெயர்தான் அவதார்.




அவதார் மூலம் நாவி உடலமைப்பில் மனித ஆத்மாவை நம்மூர் கூடு விட்டு கூடு பாயும் விதமாக உயிர் கொடுத்து நாவி இனத்தினூடே பழகி அவர்களது நம்பிக்கையை பெற முயற்சிக்கிறார்கள். (இயக்குனர் ஒரு பேட்டியில் இதனை இந்திய இதிகாசத்திலிருந்து தழுவி எடுத்ததாக தெரிவித்துள்ளார்!).
இம்முயற்சியில் தனது இரட்டைச்சகோதரன் இறந்ததை ஈடு கட்டும் விதமாக வரும் உடல் ஊனமுற்ற ஒரு ராணுவ வீரன் ஜேக், தானும் ஒரு அவதாரமாக உருவெடுக்கிறார். அவருக்கு இட்ட பணி, 'நாவி'யினத்தின் நம்பிக்கையைப் பெற்றபின் அவர்களின் பூர்வீக இடத்தை விட்டு வேறு பக்கம் நகரச் செய்வது. பிறகு அந்த இடத்தின் அடியிலிருக்கும் அரிய உலோகத்தை (unobtainium) பெறுவது.

ஜேக்கின் அவதார் அங்கிருக்கும் நேத்ரி (Neytiri) எனும் நாவி இளவரசியை சந்தர்ப்பவசமாக சந்தித்து அவள் மூலமாக அவ்வினத்தில் கலக்கிறது. அவதாருக்கும் நேத்ரிக்கும் காதல் மலர்கிறது.










அவதார் நாவிக்களை அவ்விடத்திலிருந்து அப்புறபடுத்துவது தோல்வியில் முடிய, மனிதர்கள் போரின் மூலமாக நாவிக்களை அகற்ற முயற்சிக்கிறார்கள். அதில்
விருப்பம் இல்லாத அவதார் மனிதர்களை எதிர்த்து நாவிக்களிக்கே உதவி செய்கிறார். வெல்வது யார் ? மனிதர்களா ? அல்லது மனிதனிலிருந்து அவதாரத்தின் துணையுடன் போரிடும் நாவிக்களா ? மீதி வெண்திரையில்.

கேமரூனின் அசாத்திய உழைப்பு ஒவ்வொரு நொடியிலும் மிகப்பிரமாண்டமாக தெரிகிறது. படம் பார்க்கும் முன்னரே "ஐமாக்ஸ்-3D"-ல் தான் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்து சென்றது மிக நல்லதாகப் போனது. அவதாரின் பிரமாண்டத்தை அதன் உள்ளே நாமும் ஒரு அங்கமாகப் பார்ப்பது ஒரு சிறப்பு அனுபவம். கேமரூனின் தனித்துவமே லாஜிக்கை அழகாக மீறுவது. நம்மூர் காதல் கதைபோல பார்த்த உடன் இந்தப்படத்திலும் பற்றிக்கொண்டாலும், படம் பார்ப்பவர்கள் மனமும் அதனுடன் இயைந்து விடுகிறது. அது போல மனிதர்கள் நாவிக்களை எதிர்க்கும் கட்டத்திலும் நம் மனம் மனிதர்கள் வெல்லவேண்டும் என்று நினைப்பதை விட நாவிக்கள் வெல்வதையே விரும்புவதிலே தெரிந்து விடுகிறது கேமரூனின் திரைக்கதை நம் மனதை வென்று விட்டதை.






கேமரூன் பலவருட இடைவேளைக்குப் பின்னே இதை வெளிவிட்டாலும் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மீண்டும் நிரூபித்துள்ளார்.மேலும், பலவருடங்களுக்கு முன்னரே வரவேண்டிய திரைக்கதை, தொழில்நுட்பப் பற்றாக்குறை காரணமாய் இப்போதுதான் சாத்தியமாகி உள்ளது. காதலையும், மனித உணர்ச்சிகளையும் தொழில்நுட்பத்தின் தாக்கங்களையும் அழகாக ரசவாதக்கலவையாக ஒன்றுடன் ஒன்று இணைப்பதில் அவருக்கு நிகர் அவரே. அவருடைய முந்தைய பட டைட்டானிக்கிலும் (Titanic) காதலை அருமையாக செதுக்கி நம்மை உருக வைத்திருப்பார். இந்தப்படத்தில் ஒரு சிரமம், இதில் வருவது நாவி எனும் வேற்று கிரக உயிரினம். அதை ஒரு மனித ஆத்மா காதலிப்பது போல பார்வையாளர்களை வசியப்பத்துவது கொஞ்சம் சிக்கலான வேலை. ஆனால் அதில் வெற்றி பெற்றுள்ளார்.

படத்தில் சில குறைகளும் உள்ளன. சில நேரங்களில் காட்சியமைப்பு நம் கண்களை லேசாக பதம் பார்க்கிறது. படத்தில் சில இடங்களில் லாஜிக்குகள் மீறல் லேசாக உறுத்துகிறது. ஆனால் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் விதமாக பிரமிப்பான காட்சிகள் சின்ன சின்ன பிரச்சனைகள் எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறது.

கேமரூன் தனிக்காட்டு இராஜாவானாலும் மற்றவர்கள் துணை இல்லாமல் பிரமாண்டமான படத்தை அளிக்க முடியாதல்லவா. நாமும் அவதாரில் மற்ற முக்கியமான ஆட்களின் பங்களிப்பை பார்க்கலாம்.
இசை ஜேம்ஸ் ஹோர்னர் -- அபோகலிப்டா (Apocalypto) மற்றும் அபோல்லா (Apollo-13) போன்ற படங்களுக்கு இசையமைத்தவர். இதிலும் அருமையாக அசத்தியுள்ளார்.

எடிட்டிங்கிலும் ஸ்டீவென் மற்றும் ஜானுடன் இணைந்து கேமரூனின் கைவண்ணம் நேர்த்தியாகத் தெரிகிறது.

ஜூராசிக் பார்க் (Jurassic Park) மற்றும் லார்ட் ஆப தி ரிங்ஸ் (Lord of the Rings) படங்களில் பணி புரிந்த ஜோ லேட்டேரி, ஒளித்தந்திர நிபுணத்துவத்தில் -ல் (Visual Effects) இதுலும் ஒரு கலக்கி கலக்கி உள்ளார். மூன்று முறை ஏற்கனவே ஆஸ்கர் வென்ற ஒரு நிபுணர்.

அவதார்- திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல். அனைவரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய ஒரு மாபெரும் திரைக்காவியம்.

அவதாரின் பிரத்யோக வலைத்தளம் இங்கே சொடுக்க

* செந்தில் *



Dec 20, 2009

கிட்டத்தட்ட பதினாலு வருட நேர்த்தியான கருத்துருவாக்கம்!

ஒவ்வொரு பிரேமிலும் கற்பனைக்கெட்டாத உலகத்திற்கே நம்மை இழுத்துச் செல்லும் மாயாஜால உலகம்!

மனதை வசியவைத்த திரைக்கதை அமைப்பு. கண்களை கொள்ளைகொள்ளும் கிராபிக்ஸ் சித்து விளையாட்டு.

ஏறக்குறைய ஐயாயிரம் கோடிகளை அசுரத்தனமாக விழுங்கிய தொழில்நுட்பம்!

அதுதான் அவதார்!

டெர்மினேட்டர், ஏபிஸ், ஏலியன்ஸ், டைட்டானிக் போன்ற வரலாறு படைத்த படங்களை கொடுத்து விட்டு டாக்குமெண்டரி படங்களின் பக்கம் ஜேம்ஸ் கேமரூன் கவனத்தை செலுத்தியிருந்தாலும், இவரின் மனதில் பதினைந்து வருடங்களாக கருவாகி வந்த அவதார் எனும் திரைக்கதை, கேமரூனை மீண்டும் திரைப்படத் துறைக்கே கொண்டு வந்துள்ளது.

இனி கதை.
விண்வெளியில் தொலைதூர கிரகநிலவான பாண்டோரா-வில் இருக்கும் அரியவகை உலோகத்தை அடைவதற்கு நம் பூமியில் இருக்கும் ஒரு நிறுவனம் முயற்சிக்கிறது. இதற்கு இடைஞ்சலாக இருப்பது அங்கே வசித்து வரும் நீலமான உடல் படைத்த, மனிதனை விட தொன்மையான, ஒன்பது அடி உயிரினம் நாவி. மனிதர்களை எதிரிகளாகப் பாவிக்கும் நாவி இனத்தை மசிய வைப்பதற்கு நம் ஆராய்ச்சியாளர்கள் ஒரு தந்திரம் உபயோகிக்கிறார்கள். அதுதான் நாவி இனத்தின் டி.என்.,ஏ வையும் நம் டி.என்.,ஏ வையும் இணைத்து நாவி உடலமைப்பு போன்ற ஒரு கலவையான உயிரை அங்கே உருவாக்குவது - அதன் பெயர்தான் அவதார்.

அவதார் மூலம் நாவி உடலமைப்பில் மனித ஆத்மாவை நம்மூர் கூடு விட்டு கூடு பாயும் விதமாக உயிர் கொடுத்து நாவி இனத்தினூடே பழகி அவர்களது நம்பிக்கையை பெற முயற்சிக்கிறார்கள். (இயக்குனை ஒரு பேட்டியில் இதனை இந்திய இதிகாசத்திலிருந்து தழுவி எடுத்ததாக தெரிவித்துள்ளார்!). இம்முயற்சியிலிருந்து தனது இரட்டைச்சகோதரன் இறந்ததை ஈடு கட்டும் விதமாக வரும் உடல் ஊனமுற்ற ஒரு ராணுவ வீரன் ஜேக் ஒரு அவதாரமாக உருவெடுக்கிறார். அவருக்கு இட்ட பணி, நாவியினத்தின் நம்பிக்கையைப் பெற்றபின் அவர்களின் பூர்வீக இடத்தை விட்டு வேறு பக்கம் நகரச் செய்வது. பிறகு அந்த இடத்தின் அடியிலிருக்கும் அரிய உலோகத்தை பெறுவது.

ஜேக்கின் அவதார் அங்கிருக்கும் நேத்ரி எனும் நாவி இளவரசியை சந்தர்ப்பவசமாக சந்தித்து அவள் மூலமாக அவ்வினத்தில் கலக்கிறது. அவதாருக்கும் நேத்ரிக்கும் காதல் மலர்கிறது. அவதார் நாவிக்களை அவ்விடத்திலிருந்து அப்புறபடுத்துவது தோல்வியில் முடிய, மனிதர்கள் போரின் மூலமாக நாவிக்களை அகற்ற முயற்ச்சிக்கிறார்கள். அதில் சற்றும் சம்மதம் இல்லாத அவதார் மனிதர்களை எதிர்த்து நாவிக்களிக்கே உதவி செய்கிறார். வெல்வது யார் ? மனிதர்களா ? அல்லது மனிதனிலிருந்து அவதாரத்தின் துணையுடன் நாவிக்களா ? மீதி வெண்திரையில்.

கேமரூனின் அசாத்திய உழைப்பு ஒவ்வொரு நொடியிலும் மிகப்பிரமாண்டமாக தெரிகிறது. படம் பார்க்கும் முன்னரே ஐமாக்ஸ் இல் தான் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்து சென்றது மிக நல்லதாகப் போனது. அவதாரின் பிரமாண்டத்தை அதன் உள்ளே நாமும் ஒரு அங்கமாகப் பார்ப்பது ஒரு சிறப்பு அனுபவம். கேமரூனின் தனித்துவமே லாஜிக்கை அழகாக மீறுவது. நம்மூர் காதல் கதைபோல பார்த்த உடன் இந்தப்படத்திலும் பற்றிக்கொண்டாலும், படம் பார்ப்பவர்கள் மனமும் அதனுடன் இயைந்து விடுகிறது. அது போல மனிதர்கள் நாவிக்களை எதிர்க்கும் கட்டத்திலும் நம் மனம் மனிதர்கள் வெல்லவேண்டும் என்று நினைப்பதை விட நாவிக்கள் வெல்வதையே விரும்புவதிலே தெரிந்து விடுகிறது கேமரூனின் திரைக்கதை நம் மனதை வென்று விட்டதை.

பலவருடங்களுக்கு முன்னரே வரவேண்டிய திரைக்கதை, தொழில்நுட்பப் பற்றாக்குறை காரணமாய் இப்போதுதான் சாத்தியமாகி உள்ளது. கிட்டத்தட்ட பதினாலு வருட நேர்த்தியான கருத்துருவாக்கம்!
ஏறக்குறைய ஐயாயிரம் கோடிகளை அசுரத்தனமாக விழுங்கிய தொழில்நுட்பம்!
ஒவ்வொரு பிரேமிலும் கற்பனைக்கெட்டாத உலகத்திற்கே நம்மை இழுத்துச் செல்லும் மாயாஜால உலகம்!
மனதை வசியவைத்த திரைக்கதை அமைப்பு. கண்களை கொள்ளைகொள்ளும் கிராபிக்ஸ் சித்து விளையாட்டு.

அதுதான் அவதார்!

தேர்மினடர், ஏபிஸ், ஏலியன்ஸ், டைட்டானிக் போன்ற வரலாறு படைத்த படங்களை கொடுத்து விட்டு டாக்குமெண்டரி படங்களின் பக்கம் ஜேம்ஸ் கேமரூன் கவனத்தை செலுத்தியிருந்தாலும், இவரின் மனதில் பதினைந்து வருடங்களாக கருவாகி வந்த அவதார் எனும் திரைக்கதை, கேமரூனை மீண்டும் திரைப்படத் துறைக்கே கொண்டு வந்துள்ளது.

இனி கதை.
விண்வெளியில் தொலைதூர கிரகமான பாண்டோரா-வில் இருக்கும் அரியவகை உலோகத்தை அடைவதற்கு நம் பூமியில் இருக்கும் ஒரு நிறுவனம் முயற்சிக்கிறது. இதற்கு இடைஞ்சலாக இருப்பது அங்கே வசித்து வரும் நீலமான உடல் படைத்த, மனிதனை விட தொன்மையான ஒன்பது அடி உயர உயிரினம் நாவி. மனிதர்களை எதிரிகளாகப் பாவிக்கும் நாவி இனத்தை மசிய வைப்பதற்கு நம் ஆராய்ச்சியாளர்கள் ஒரு தந்திரம் உபயோகிக்கிறார்கள். அதுதான் நாவி இனத்தின் டி.என்.,ஏ வையும் நம் டி.என்.,ஏ வையும் இணைத்து நாவி உடலமைப்பு போன்ற ஒரு கலவையான உயிரை அங்கே உருவாக்குவது - அதன் பெயர் அவதார். அவதார் மூலம் நாவி உடலமைப்பில் மனித ஆத்மாவை நம்மூர் கூடு விட்டு கூடு பாயும் விதமாக உயிர் கொடுத்து நாவி இனத்தினூடே பழகி அவர்களது நம்பிக்கையை பெற முயற்சிக்கிறார்கள். (இயக்குனை ஒரு பேட்டியில் இதனை இந்திய இதிகாசத்திலிருந்து தழுவி எடுத்ததாக தெரிவித்துள்ளார்!).

இம்முயற்சியிலிருந்து தனது இரட்டைச்சகோதரன் இறந்ததை ஈடு கட்டும் விதமாக வரும் உடல் ஊனமுற்ற ஒரு ராணுவ வீரன் ஜேக் ஒரு அவதாரமாக உருவெடுக்கிறார். அவருக்கு இட்ட பணி, நாவியினத்தின் நம்பிக்கையைப் பெற்றபின் அவர்களின் பூர்வீக இடத்தை விட்டு வேறு பக்கம் நகரச் செய்வது. பிறகு அந்த இடத்தின் அடியிலிருக்கும் அரிய உலோகத்தை பெறுவது.

ஜேக்கின் அவதார் அங்கிருக்கும் நேத்ரி எனும் நாவி இளவரசியை சந்தர்ப்பவசமாக சந்தித்து அவள் மூலமாக அவ்வினத்தில் கலக்கிறார். அவதாருக்கும் நேத்ரிக்கும் காதல் மலர்கிறது. அவதார் நாவிக்களை அவ்விடத்திலிருந்து அப்புறபடுத்துவது தோல்வியில் முடிய, மனிதர்கள் போரின் மூலமாக நாவிக்களை அகற்ற முயற்ச்சிக்கிறார்கள். அதில் சற்றும் சம்மதம் இல்லாத அவதார் மனிதர்களை எதிர்த்து நாவிக்களிக்கே உதவி செய்கிறார். வெல்வது யார் ? மனிதர்களா ? அல்லது மனிதனிலிருந்து அவதாரத்தின் துணையுடன் நாவிக்களா ? மீதி வெண்திரையில்.

கேமரூனின் அசாத்திய உழைப்பு ஒவ்வொரு நொடியிலும் மிகப்பிரமாண்டமாக தெரிகிறது. படம் பார்க்கும் முன்னரே ஐமாக்ஸ் இல் தான் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்து சென்றது மிக நல்லதாகப் போனது. அவதாரின் பிரமாண்டத்தை அதன் உள்ளே நாமும் ஒரு அங்கமாகப் பார்ப்பது ஒரு சிறப்பு அனுபவம். கேமரூனின் தனித்துவமே லாஜிக்கை அழகாக மீறுவது. நம்மூர் காதல் கதைபோல பார்த்த உடன் இந்தப்படத்திலும் பற்றிக்கொண்டாலும், படம் பார்ப்பவர்கள் மனமும் அதனுடன் இயைந்து விடுகிறது. அது போல மனிதர்கள் நாவிக்களை எதிர்க்கும் கட்டத்திலும் நம் மனம் மனிதர்கள் வெல்லவேண்டும் என்று நினைப்பதை விட நாவிக்கள் வெல்வதையே விரும்புவதிலே தெரிந்து விடுகிறது கேமரூனின் திரைக்கதை நம் மனதை வென்று விட்டதை.

கேமரூன் பலவருட இடைவேளைக்குப் பின்னே இதை வெளிவிட்டாலும் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மீண்டும் நிரூபித்துள்ளார்.மேலும், பலவருடங்களுக்கு முன்னரே வரவேண்டிய திரைக்கதை, தொழில்நுட்பப் பற்றாக்குறை காரணமாய் இப்போதுதான் சாத்தியமாகி உள்ளது. காதலையும், மனித உணர்ச்சிகளையும் தொழில்நுட்பத்தின் தாக்கங்களையும் அழகாக ரசவாதக்கலவையாக ஒன்றுடன் ஒன்று இணைப்பதில் அவருக்கு நிகர் அவரே. அவருடைய முந்தைய பட டைட்டானிக்கிலும் காதலை அருமையாக செதுக்கி நம்மை உருக வைத்திருப்பார். இந்தப்படத்தில் ஒரு சிரமம், இதில் வருவது நாவி எனும் வேற்று கிரக உயிரினம். அதை ஒரு மனித ஆத்மா காதலிப்பது போல பார்வையாளர்களை வசியப்பத்துவது கொஞ்சம் சிக்கலான வேலை. ஆனால் அதில் வெற்றி பெற்றுள்ளார்.

கேமரூன் தனிக்காட்டு இராஜாவானாலும் மற்றவர்கள் துணை இல்லாமல் பிரமாண்டமான படத்தை அளிக்க முடியாதல்லவா. நாமும் அவதாரில் மற்ற முக்கியமான ஆட்களின் பங்களிப்பை பார்க்கலாம்.
இசை ஜேம்ஸ் ஹோர்னர் -- அபோகலிப்டா மற்றும் அபோல்லா போண்டா படங்களுக்கு இசையமைத்தவர்தான். இதிலும் அருமையாக அசத்தியுள்ளார்.

எடிட்டிங்கிலும் ஸ்டீவென் மற்றும் ஜானுடன் இணைந்து கேமரூனின் கைவண்ணம் நேர்த்தியாகத் தெரிகிறது.

ஜோராச்சிக் பார்க் மற்றும் லார்ட் ஆப தி ரிங் படங்களில் பணி புரிந்த ஜோ லேட்டேரி, விசுவல் எபிபிச்ட்-ல் இதுலும் ஒரு கலக்கி கலக்கி உள்ளார். மூன்று முறை ஏற்கனவே ஆஸ்கர் வென்ற ஒரு நிபுணர்.







Sep 27, 2009

நீ சாஞ்சு போன சேதி

அப்பாவி சனமே நீங்க அழிஞ்சி போன சேதி
என்நெஞ் சத்துல அரஞ்சதென்ன
உடம்பிலிருந்து உசுர
கொஞ்சங்கொஞ்சமா உறிஞ்சி விட்டதென்ன

ஆறாத புண்ணுல
ஆயிரம்தேளுக - அங்குலஅங் குலமா
கொத்திவிட்டதென்ன
எண்ணக்கொப் பறையில - எரிஞ்சுஎரியாம
எங்கதேகம் கொதிச்சதென்ன ?
கண்ணுக்குள்ள - இரும்புக்குழம்ப
காச்சிஊத்தி விட்டதென்ன

நெஞ்சுக்குள்ள அமிலத்த
நஞ்சுநஞ்சா ஊத்திவிட்டதென்ன
நாளும்பொழுதுமா எங்கண்ணுல
இரத்தம்க சிஞ்சதென்ன
இராத்திரிப கலென்ன... ரணகளமானதென்ன ...

வீச்சருவா வீசி வீசி
ஏம்மூச்ச, பேச்ச - முழுசா
பறிச்சதென்ன
மொட்டக்கத்தி வச்சு வச்சு
பாதியும் மீதியுமா - எம்மனச
அறுத்ததென்ன

மிஞ்சிக்கிடக்கிற கொஞ்ச சனமே
சாஞ்சிக்கிடக்கிற உன்பொழப்பப் பாத்து
கொஞ்சகொஞ்சமா - மீதி உசுரு
புரையோடிப் போனதென்ன ?

அப்பாவித்தமிழ்சனங்க
ஆவி அடங்கினதென்ன - அதக்கண்டு
எந்நெஞ்சுக்குலை
நித்தம் சுருங்கினதென்ன

சிங்களப்பேய்களெல்லாம் - எங்க ரத்தம்
குடிச்சுக்குடிச்சு
கூத்தாடிக்கும்மி யடிச்சதென்ன
ஒப்பாரிவக்க வழியில்லாம
நாதியத்துப் போனதென்ன?

வீடுவிட்டு நாடுவிட்டு
ஊருவிட்டு உறவுவிட்டு
பந்தம்விட்டு சொந்தம்விட்டு
ஓடிஒளிஞ்சு தொலஞ்ச இந்தக்குலத்த
கடைசி வரை - தலைவிதி
வன்மம் வச்சு வன்மம் வச்சு
சென்மசென்மமா விரட்டுவதென்ன

சரித்திரமே நீ - என்னைக்கும்
தரித்திரமா மாறியதென்ன
எங்க பொழப்பு ஏழு சென்மமும்
நாறிப் போனதென்ன




பிரளயம் ஒய்ந்திடுமோ ?

இத்தமிழ்த் தளிர்கள்
விதையென
முளைத்தெழா - விறகென
வீதிகளில் வெற்றுயிர்
கருகிச்சரிய !

முழு இனமே
மந்தை மந்தைகளாய்- எட்டுத்திக்கிலும்
சுட்டுத் தெறிக்க
வாசல் வாசலாய் - சனங்கள்
ஈசல் ஈசலாய் சிதறிக்கிடக்க

என்நெஞ்சுத்தசை
அணுஅணுவாய் பிளந்து
கிழிந்தழிந்ததே
உள்ளினும், வெளியினும் ஊனுயிர் தொலைந்ததே !!

இதுகாறும் இச்சமூகம் இவ்விடத்தே
பூத்துக்குலுங்கிய இத்தேசமே
நீ பிணங்களின் விளைநிலமா ?
கொள்ளிவாய்ப் பேய்களினினும் - கொடூர
மனம்கொள் சிங்களர்களின்
கொலைக்களமா?

சூத்திரர்களின் சூழ்ச்சிக்கரங்களில்
சுதந்திரத்தை சுட்டெரிக்கச்
செய்திட்ட சுடுகாடா ?
விதியெல்லாம் விளையாடி - ஒளிந்தோடி
வீழ்ச்சியடைந்த வெருங்காடா?

ஹிட்லரும் முசோலினியும்
சேர்ந்து உருவான ராசபக்சேயின்
சதிராட்டம் தொலைந்தொழியுமோ?
இப்பிணம்தின்னிப் பேய்களின்
குருதித்தாகம் எம் வேகம் தடுத்திடுமோ?

நாட்டாமை நாடுகள் அனைத்தும்
நல்வழி உணர்ந்திடுமோ?
சூதுகொண்ட ஊழிக்காலம்
உருத்தெரியாமல் அழிந்திடுமோ?

நாளொரு பொழுதும் நரகமாகிப்போன
வன்கொடுமையும் கழிந்திடுமோ?
இருள்சூழ் - எம் உலகில்
ஒளிச்சூரியன் ஓரளவேனும்
உதித்திடுமோ?

ஊனுயிர் உருக்குலைத்த இப்பிரளயம்
எப்பிறவியில் ஓய்ந்திடுமோ ?
உண்மை உயிர்த்தெழுமா?
இக்குலம் தழைத்திடுமோ?

Feb 6, 2009

pongal 2009

சிந்து சமவெளி நாகரீகத்தில் ஜல்லிக்கட்ட

ஆனால் சிந்து சமவெளி நாகரீகத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்முத்திரையில் இதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

தமிழர் இலக்கியத்தில் ‘கொல்லேறு தழுவல
்’என்று பெயர் கூறி காளை அடக்குவது வெகுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆளை கொன்று தூக்கி எறியும் வகையில் வளர்க்கப்பட்ட காளையை, வீரம் சொரிந்த காளையர்கள் அடக்குவதை தழுவல் என்று வீரத்தையே மென்மையான வார்த்தையைக் கொண்டு தமிழ் இலக்கியம் சித்தரிக்கிறது.

இன்றளவும் இப்படிப்பட்ட முறையில்தான் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கொல்லேறு தழுவல் நிகழ்த்தப்படுகிறது. ஜல்லிக்கட்டில் இறக்கப்படும் காளைகளை அதற்கென்றே வளர்க்கின்றனர். ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காளையர்க்களுக்கும், அவர்களை தூக்கியெறிய முற்படும் காளைக்கும் இடையிலான சம வாய்ப்புடைய வீர சோதனைதான். 



 

இந்த மண்ணுல நம்ம மனுசனோட வளர்ச்சியை நினைச்சு பார்த்தீங்கன்னா தெரியும் அவன் விலங்கிலிருந்து மிகப்பிரம்மாண்டமாக வளர்ந்து இன்னைக்கு உலகத்தில் அங்கிங்கெனாதபடி ஈரேழு திசைகளையும் தன் கட்டுக்குள் வசப்படுத்தியிருகிறான்னு. அதற்கான மூலகாரணமே கற்காலத்து மனிதன் ஆற்றுவெளி சமுதாயத்தை உருவாக்கியதிலிருந்து வந்த வாழ்க்கைமுறைதான். ஆற்றுவெளியின் அவன் ஆரம்பிச்ச உழவுத்தொழில் நாகரீக வளர்ச்சியின் வித்து, அது விருட்சமாகி, பல்கிப்பெருகி விண்ணையே வசப்படுத்தும் அளவிற்கு வளர்ந்திருக்கு.

 

நம்ம பண்டைய தமிழர்கள் இந்த உழவுத்தொழிலின் முக்கியத்துவம் தெரிஞ்சு வந்ததனாலேயே, அதன் ஆதாரமான இயற்கையை வணங்கி அதோடு ஒன்றினைந்து வாழ்ந்திருக்காங்கன்னு தெரியுது. அறிவியலே வளர்ச்சியடையா அக்காலத்தில் தங்களோட அறிவின் வளர்ச்சியினாலே வானிலை மற்றும் பருவகால மாற்றங்களை தெளிவாக தெரிஞ்சு காலங்களை இளவேனில், முதுவேனில், கார்காலம், கூதிர், முன்பனி, பின்பனி எனப்பகுத்து அதுப்படி உழவுத்தொழிலை செம்மைப்படுத்தி வந்திருக்காங்க. அதுல இளவேனிற் காலம் அவங்களுக்கு முக்கியமான காலம். ஏன்னு பார்த்தீங்கன்னா அப்பதான் அந்த உழவின் பயனை தம் வாழ்வின் வசந்தங்களை மகிழ்ச்சியாக தொடங்குகிற காலம் – அதனால தான் இளவேனிற் காலத்தை அவங்க புத்தாண்டின் தொடக்கமாக தேர்ந்தெடுத்திருக்காங்கன்னு தெரியுது.

தமக்கு உணவுதந்த அந்த ஆதார சக்தியான ஆதவனை வழிபட்டு, இயற்கைக்கு உணவை பொங்கி வரும் பொங்கலாக படையலிட்டு ஒரு விழாவாக அதை நம்ம தமிழ் சமுதாயத்தின் அடையாளமா கொண்டாட ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு நம்ம தமிழர்கள் உலகின் எந்தக்கோடியிலிருந்தாலும் அந்த பொங்கல் திருநாளை கொண்டாடுறது நம்ம பண்பாட்டின் ஒரு அடையாளம்.

 

அது சரி, பூலோகத்தின் இன்னொரு கோடியில், ஆசுலே மற்றும் கூப்பர் ஆத்துவெளியில, அன்றைய தமிழர்களின் இன்றைய சந்த்திகளான வாழ்ந்து கொண்டிருக்கும் சார்லச்டன் தமிழ்ச் சமுதாயம் தைப்பொங்கல் திருநாளை அன்னிய மண்ணில் எப்படி கொண்டாடி மகிழ்கிறாங்கன்னு வாங்க போயி பார்க்கலாமா ?

 

 

 

பொங்கல் விழா அன்னைக்கு வர்ற பார்வையாளர்களுக்கு அந்த ஒரு நாள்-திருநாள், ஆனா அன்றைய விழாக்கலைஞர்களுக்கு அன்னைக்கு மட்டுமில்ல கடந்த பல வாரங்களாகவே கொண்டாட்டமான நாட்கள். எப்பிடின்னு கேட்டீங்கன்னா, விழாவிற்காக ஆறேழு வாரங்களுக்கு முன்னாலே பயிற்சி மற்றும் ஒத்திகைக்காக கூடி, மத்தவங்க ஒத்திகையில பண்ற தப்ப பார்த்து சிரிச்சு, தாமே பண்ற தப்பை சமாளிச்சு, எல்லாரும் சமைச்சு கொண்டு வர்ற அத்தனை சாப்பாட்டு வகைகளையும் ஒரு கட்டு கட்டிட்டு, சுகமா கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சு, மத்தவங்கள கேலி பண்ணி், அதகளம் பண்ணி- மொத்தத்தில பல வாரக்கடைசி நாட்கள் கலாட்டா கச்சேரியாத்தான் இருந்துச்சு.

 

 சங்கத்தலைவர் சுந்தர்தான் அயராத வேலைப்பளுவிற்கு மத்தியில் பல நாட்களாக அத்தனை ஆட்களையும் இழுத்துப் பிடிச்சு பல கலை நிகழ்ச்சிகள் உருவாகக் காரணமா இருந்தார்.

 

இந்த தடவை டேனியல் தீவுப் பள்ளி அரங்கையே தேர்ந்தெடுத்தி்ருந்தோம், அருமையான இடம்…மேடை அமைப்பு, பார்வையாளர்களுக்கான் வசதி, ஒலி, ஒளி  அமைப்பு, உணவரங்க வசதிகள் அத்தனைகளும் அருமையா அமைந்த இடம்ன்னு நீங்க பார்த்தாலே தெரியும். வாங்க உள்ளே போகலாம்.

 

ஆகா….இதென்ன தப்பித்தவறி தமிழ் நாட்டுக்குள்ளேயே வந்திட்டோமா ?....எங்க பார்த்தாலும் கண்ணைப்பறிக்கிற மாதிரி பட்டுப்புடவை, வெள்ளையும் சொள்ளையுமா வேட்டி சட்டையில நம்ம மக்கள் – ஒரு கலக்கு கலக்கிட்டாங்க போங்க. விழா ஏற்பாடுகளை அரக்க பரக்க ஏற்பாடு பண்ற மக்கள் சில பேர், ஒத்திகைகளை மனசில பார்த்துகிட்டே வெளியே பரபரப்பு தெரியாம நண்பர்கள் கிட்ட பேசிகிட்டு இருக்கிற சில பேர், சுத்தி சுத்தி ஓடியாடி உற்சாகமா அரங்கத்தையே அதிர வைக்கிற சுட்டிப்பசங்க சில பேர், பல நாட்கள் கழிச்சு பார்க்கிற சில நண்பர்களோட அரட்டை அடிக்கிற மக்கள் சில பேர், உள்ள வர்ற நம்ம மக்களை வரவேற்கிற மாதிரி…அவங்க கொண்டு வர்ற உணவு பதார்த்தங்கள அப்பிடியே மோப்பம் பார்க்கிற இளவட்டங்கள் சில பேர், - இப்படி பல வித நண்பர்களை பார்க்கிறதே கண்கொள்ளா காட்சியா இருக்கு, இல்லையா.

 

சிறுமி இனியாவின் நடனம் பார்வையாளர்களுக்கு அருமையான விருந்து – பார்த்துகிட்டிருந்த சின்னப்பசங்களும் ஆட்டம் போட ஆரம்பிச்சுட்டாங்க.

 

அடுத்தது – ஏலோலோ நாட்டிய நாடகம். மீனவர்களின் வாழ்க்கையில் படும் அவதிகளை, அவ்வாழ்வின் அல்லல்களை அப்பிடியே படம் பிடிச்சுகாட்டுற மாதிரி நடிச்சிருந்தாங்க. சுந்தர், யுவராசு, கொளசிக் மற்றும் செந்தில் மீனவர்களின் ஒவ்வொரு காலகட்டங்களை நடிச்சு நடனமாடி காட்டிகிட்டிருக்காங்க. படகோட்டி துடுப்பு போடுகிற மீனவ மக்களா நடிக்கிறது சந்தோசு, உதய், விக்னேசு, சிவா. மீனவர்களின் கடின வாழ்க்கையை நாடக நடினமாக பார்க்கிற பார்வையாளர்களின் மனச கலங்கடிச்சிட்டாங்க.

இப்ப நீங்க பாக்கிறது, கீதா, சானகி, லட்சுமி, சந்தியா, வானதி, மற்றும் வினு குழுவின் கும்மி நடனம். பட்டுப்புடவையில பகட்டா வந்திருந்து ஆடிறாங்க பாருங்க ஆட்டம் -  நம்ம ஊரு கிராமப்பொண்ணுகளே வந்து ஆடி பட்டைய கிளப்பின மாதிரி இருந்த்து. ஒரு தப்பில்ல, தாளம் பிசகல்ல, அத்தனை நேர்த்தி, அத்தனை அசத்தல்.

 

ஆகா, இது யாரு சரோஜா தேவியா அது, அட இந்தப்பக்கம் யாரு எம்.ஜி.ஆரு – என்னா பண்றாங்க இங்க வந்து – “அன்று வந்ததும் அதே நிலா – இன்று வந்த்தும் அதே நிலா”.  பாட்டுக்கு ஆடிறாங்க. உத்துப்பார்த்தாதான் தெரியுது - இது நம்ம லட்சுமி-கவுசிக்தான்னு. அவங்க போனபிறகு குங்குமப்பூவா கொஞ்சுப்புறாவா கொஞ்சி கொஞ்சி செந்தில் – வினு ஜோடி ஒரு கலக்கல் நடனம், அதுக்குப்பிறகு வந்தது அமிர்தா அவங்கப்பா சந்தோசோட வந்து அவரோட காதல்கதையை கேட்டு தெரிஞ்சுகிட்டாங்க. பிறகு வர்றது வா வாத்தியாரே ஊட்டாண்டன்னு சென்னைத்தமிழ் வச்சு மனோரமா – சோ ஆடுன ஆட்டம் கலகலப்பா இருக்கு. ஒரு பெண்ணைப்பார்த்து நிலவை பார்த்தேன் – செந்தில் – வினு ஜோடி இந்தப்பாட்டுக்கு ஆட ஒரே அசத்தல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். மொத்தத்தில இந்த அக்கால நடன நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் மத்தியில் கைத்தட்டல், தூதுகலம், உற்சாகம், பார்க்கிறவங்க எல்லாம் அந்தக்காலத்துக்கே போயிட்டாங்க.

 

இப்போ வந்திருக்கிறது யுவராசு, செந்தில், குமரன், சந்தோசு நண்பர்கள் சமய நல்லிணக்கத்தை ஒரு இசை நாடகமா அருமையா நடத்தியிருக்காங்க. மனுசங்க மதங்களால பிரிஞ்சு அடிச்சுகிட்டு மனிதத்தையே தன் புனிதத்தையே தொலைச்சுடறான் அப்பிடிங்கிறத அற்புதமாக நடிச்சு காட்டுனாங்க. மனம் நிறைய வைத்த ஒரு நெகிழ்வான நிகழ்வா இருந்தது. 


Dec 25, 2008

pongal 2009 skit

பொல்லாதவனும் நொந்தகுமாரனும்


கதாபாத்திரங்கள் : பிரம்மா, நாரதர் மற்றும் தேவேந்திரன்


பிரம்மா லோகத்தில் 



 
பிரம்மர் -- "வா தேவேந்திரா.வாருங்கள் நாரதரே.இருவருக்கும் வணக்கம்.வந்து இங்கே அமருங்கள்."


பிரம்மர் - நாரதரே என்ன ஒரே களைப்பு உம்ம முகத்தில் ....

நாரதர் - எல்லாம் நேரம் தான்..என்ன பண்ணுவது ...நான் விஷ்ணுவின் அன்புக்கு பாதிரப்பட்ட என்னையே இங்கே தேவலோகத்தின் அத்தனை          அமைச்சர்கள் என்னை உண்டு இல்லை என்று பண்ணி விடுகிறார்கள்.

ஒரு வேலை உருப்படியாக முடிப்பதர்ற்குள் என் விழி பிதுங்கி போய் விடுகிரதைய்யயா...

தேவேந்திரன் - என்ன நாரதர் உம்மாலே நமது தேவலோகத்தில் ஒரு வேலை உருப்படியாக முடிக்க முடிவதில்லையா...என்ன கொடுமை இது...

நாரதர் - இதைத்தான் சந்திரமுகி என்னும் படத்தில் ரஜினி உபயோகப்படுத்தி இருக்கிறாரே ....நீர் அதையே இங்கே எடுத்து விடுகிறீர்...

நாரதர் - அந்தக்காலத்திலே நான் விஷ்ணுவை பார்க்க வேண்டும் என்று நினைத்த அடுத்த கணத்திலே எனக்கு பாற்கடல் ஆபிஸ்-ல் அனுமதி கிடைக்கும்...இப்போது என்னவென்றால் இன்று விஷ்ணு பிஸி என்று எனக்கே கதை விடுகிறார்கள். பூலோகத்திற்கு செல்ல ஒரு ரதம் வேண்டும் என்று கேட்டு ஒரு வாரமாகியும் தேவலோக மெக்கானிக் இன்னும் கொண்டு வந்து சேர்க்கவில்லை...

தேவேந்திரன் - அட நீர் வேற...இங்கும் அதே கதைதான் நடக்கிறது....தேவேலோகத்தில் சாம பானம் சப்ளை காலியாகி பல நாட்கள் ஆகி விட்டன....கேட்டால் எல்லாம் தமிழ் நாட்டு டாச்மார்க்கிற்கே போதவில்லை என்று
சோமபான சோம்பேறி அதிகாரி என்னிடமே நக்கலடிக்கிறான். இதை எங்கே போய் செப்புவது...

நாரதர் - இங்கேயே இந்தக் கதியென்றால் பூலோகத்தில் என்னாவதோ ....மனிதர்கள் இந்த அதிகார வர்கங்களிடம் அல்லல் படுவது இங்கு நடப்பதை விட்ட கொடுமையாக இருக்கும்...

பிரம்மன் - நாரதா, தேவேந்திரா...உங்களுடைய கவலை எமக்கு புரிகிறது ... எம்மை போன்றவர்களுக்கே கைலாயத்தில் அவ்வளவு சீக்கிரத்தில் சிவனைப பார்க்க முடிவதில்லை ....எங்கே பார்த்தாலும் சிவனடியார்களின் ஆதிக்கம்...

நாரதர் - உமக்கே இந்த கதியா....நாராயணா நாராயணா ....இதற்கு ஒரு முடிவு கட்ட முடியாதா உம்மால்

பிரம்மா - நம்மைபோன்ற தேவர்களும் ....காலச்சக்கரத்தின் சுழற்சிக்கு அப்பாற்பட்டு எதுவும் செய்ய முடியாது...வேண்டுமென்றால் .....ஒரு சித்து விளையாட்டு நடத்திப் பார்க்கலாம்..

நாரதர் - என்ன விளையாட்டு

பிரம்மா - இப்பூலோகத்தில் இதே போன்று வெறுத்துப் போயிர்க்கும் சில மனிதர்களை எதிர்காலத்திற்கு கொண்டு சென்று இப்போதைய நிலைமையை அப்பிடியே தலைகீழாக மாற்றினால் என்ன

நாரதர் - இது நடக்கக் கூடிய விஷயமா ...அவர்களே ...விரக்தியுன் உச்ச்யில் ...நிம்மதியாக தூங்க முடியாமல் தவிக்கிறார்கள் ...அப்பிடியே தூங்கினாலும் கனவு கூட வந்து தொலைப்பதில்லை...


பிரம்மா - அதே தான் ....அவர்களை அப்பிடியே எதிர்காலத்திற்கு கொண்டு செல்லவில்லை....அவர்களின் கனவில் அவர்களை எதிர்காலத்திற்குள் தள்ளி விடுகிறோம்...அப்புறம் பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று..

நாரதர் - நானே ஒரு மிகப்பெரிய குழப்பவாதி -- நீர் எம்மை விட ஒரு பெரிய குழப்பவாதியப்பா ...எதோ ஒன்று இன்று எம்முடைய வேலையை நீரே செய்கிறீர் ,,,,நடத்தும் உம்முடைய நாடகத்தை...


பூலோகத்தில்

கதாபாத்திரங்கள் : நொந்தகுமாரன், லொள்ளு பாண்டி, வெட்டி விஜயன், ஜங்கு ஜனா.

வருடத்தின் அத்தனை நாட்களைப் போலவே இந்த நாளிலும், ஒரு நாளின் அத்தனை நிமிடங்களைப் போல இந்த நிமிடத்திலும்...கொஞ்ச நஞ்சம் மிச்சம் மீதியில்லாதவாறு எப்போதும் வேலை வெட்டியில்லாத நொந்த குமாரன் அன்றைய நாளின் அயர்ச்சியின் அத்தனை அழுத்தங்களை தாங்கமுடியாமல் வீடு திரும்பியிருந்தான்... வழக்கம் போல இன்றைக்கும் ஏதாவது சாதித்து வந்தான் என்றால் அது கொஞ்சமும் கலப்படமில்லாத தோல்விதான். நொந்தகுமாரன் - புலம்பியவாறே...
என்ன கொடுமை சரவணன் இது...சே எங்க போனாலும் நம்மள கடிக்கிறானுங்க...ஊருல குப்பை கொட்டுறவன் கூட நம்மள மதிக்க மாட்றான்...ஒரு நாயை விட கேவலமா போயிட்டோமா நம்ம... இந்த ஆர் டி ஒ என்ன பிரம்மலோகத்திலிருந்து நேரடியா குதிச்சு வந்தவனா என்ன...நம்மள ஒரு மனுசனா வே கண்டுக்கற மாட்டிங்கிரானே.... இவனுங்கள எல்லாம் நிக்க வச்சு சுடனும் .....இந்த நிலைமை என்னிக்கு மாறுமோ.... கடவுளே...இதைக்கேட்க நாதியில்லையா.... வெறுப்புடன் நொந்தகுமாரன் தூங்குகிறான்... கனவில்.....


நிம்மதியாக உறங்கிகொண்டிருக்கிறான் நொந்தகுமாரன் .... காலிங்க்பெல் சத்தம் அவனை எழுப்புகிறது டிங் டிங் யாரப்பா இது இந்நேரத்தில... கதவு திறந்து... என்ன வேணுங்க... தாசில்தார் - அய்யா நான் தானுங்க ...என்ன தெரியல்லையா... நொ. கு. - யோவ் ..ஏன்யா காலங்காத்தால வந்து உசுர வாங்குறீங்க...யாருயா நீ.. தாசில்தார் - அய்யா...ரெண்டு வாரமா அலையா அலைஞ்சு உங்கள எப்பிடியாவது பாதுப்போடலாமுன்னு காதுக்கிட்டிருகேம்ம்ன்யா...போன வாரம் வந்து பாத்தப்ப நீங்க தான்யா இந்தவாரம் வந்து மறுபடியும் பாக்க சொன்னீங்க... நொ கு - இந்த வாரம் வேற வேலை வந்திருச்சு...அடுத்த வாரம் வந்து பாரு... தாசில்தார் - அய்யா...கொஞ்சம் பெரிய மனசு பண்ணி கொஞ்சம் பாருங்கையா... நொ கு - யோவ் உங்களோட ஒரே ரோதனையா போச்சு...உங்கள மாதிரி கவேர்மன்ட் ஆளுக ...வரிசையா வந்து அது பண்ணியாச்சு ... இது பண்ணியாச்சு...அதுல சாட்சி கையெழுத்து போடுங்க...இதுல போடுங்கன்னு ஒரே தொல்லை... எல்லாம் நல்ல ஓடிகிட்டு இருந்தாலும் ...ஏதாவது பிரச்சனைன்னா சொல்லுங்க..உடனே முடிச்சு குடுதுடரோம்னு ஒரே வம்பு...இன்னிக்கு உனக்கு என்னைய்யா...

தாசில்தார் - ஒன்னுமில்லங்கைய்யா...அன்னிக்கு இந்த பாத்திரம் சம்பந்தமா ஒரு பிரச்சனைன்னு கேள்விப்பட்டு...அத முடிச்சி கொடுதிடலாமுன்னு ஒடி வந்தேங்க... நோ கு - யோவ்...அந்த பத்திர விஷயமா.... தாசில்தார் - ஆமாங்கய்யா..ஆமா.. நோ கு - அதான்யா...அந்த கலெக்டர் பாவம் ஒரு மாசமா எதாவது முடிச்சு கொடுக்கிற வேலை இருந்தா சொல்லுங்கன்னு ஒரே நச்சரிப்பு...அவருக்கு கொடுக்கலாமுன்னு இருக்கேன்.. தாசில்தார் - அய்யா..இந்த ஒரு தடவ நம்மள கண்டுகிட்டீங்கன்னா ரெம்ப புண்ணியமா போகுங்க... நோ கு - என்னப்பா உன் தொந்தரவு பெரும் தொந்தரவாப் போச்சு...சரி என்ன பண்ணனும்னு சொல்லு... தாசில்தார் - அய்யா..இந்த பாரம்ல நானே எல்லாத்தையும் தயாரா எழுதி வச்சிருக்கேன்யா....நீங்க ஒரு கையெழுத்து மட்டும் போட்டுடீங்கன்ன...நான் மத்தத பாத்துவந்து வேலைய முடிச்சு கொடுதிடுவேங்கைய்யா நோ கு - கையெழுத்தா...அத அங்க வச்சிட்டு போ....அடுத்த வாரம் வந்து பாரு...உனக்காக இந்தத தடவ கலெக்டர் கிட்ட இந்த வேலைய கொடுக்கல்ல.. தாசில்தார் - நெம்ப தேங்க்ச்குங்கோ...அப்புறம் நான் போயிட்டு வர்றேங்கோ...

அடுத்த தடவ இந்ந்த மாதிரி சொல்லிகிராம வந்து இந்த மாதிரி தொல்லை பண்ணுன அப்புறம் நடக்கிறதே வேற.. தாசில்தார் - மவராசா அந்த மாதிரி ஏதும் பண்ண மாட்டேன், --------------------------------------------- கொடுமை கந்தசாமி - அப்பனே முருகா ,.,,,என்னை மட்டும் ஏம்பா இந்த மாதி சோதிக்கிறே ....நான் என்ன பாவம் பண்ணுனேன். இன்னிக்கு சரியா போய்க்கிட்டிருந்த என்ன அந்த சாவு கிராக்கி டிராபிக் போலீஸ் பிடிச்சு ...௫00 rupaa குடுத்தா தான் விடிவேன்னு ஒரே வம்பு....மருத்துவ செலவுக்கு வச்சிருந்த அத்தனையையும் அழுத்தும் விடல்ல ....இவனுங்களுக்கு ஒரு கேடு வராத ...என்னைக்கு வருமோ நிம்மதியான சுதந்திரம் ... ---------------------------------------------- டிராபிக் கான்ஸ்டபிள் - ஸார் இருக்காங்களா ...உள்ள வரலாங்கள கோசா --...அதான் உள்ளேயே வந்திட்டீங்களே கூச்சப்படாம வீட்டுக்குள்ளரே .... டிராபிக் கான்ஸ்டபிள் - - சொன்னா தப்பா நினச்சிறாதீங்க.. கோசா -- சொல்லியாச்சு ...பேச்சர்றதும் தப்பு தப்பா தான் இருக்கு ....பெறகென்ன இந்த வார்த்தைகளுக்கொன்னும் குறைச்சல் இல்ல... டிராபிக் கான்ஸ்டபிள் --- அது ஒன்னும் இல்ல.. kosaa - ஒன்னும் இல்லையா ..அப்ப நீங்க போயிட்டு இன்னொரு நாளைக்கு வந்து எண்ணப் பாருங்க... டிராபிக் கான்ஸ்டபிள் - - ஸார் நான் வந்த விஷயம் வந்து...போன வாரம் டிராபிக் சிக்னல்ல ரெட் இருக்கும் போதே தப்ப கொஞ்சம் போய்ட்டீங்க ...அதான்... கோசா -- அதுக்கென்ன இப்போ... டிராபிக் கான்ஸ்டபிள் - ஸார் நீங்க சும்மா வந்து ஒரு தடவ சாலை பாதுகாப்பு பத்தி ஒரு வகுப்புக்கு வந்து இர்ந்தீங்கன்ன அது போதுங்க....நாங்க இந்த மாதிரி சாலை பாதுகாப்பு முக்கியத்துவம் பத்தி விளக்கமா வகுப்புல உங்களுக்கு புரிய வச்சு ....இது மாதிரி இனிமே நீங்க பண்ணாம இருக்க உங்களுக்கு ஒரு ஹெல்ப் தான்....அதில நல்ல மார்க் எடுத்தா ஒரு கார் வேற இலவசமா தருவோம்.. கோசா- கேக்க நல்லாத்தான் இருக்கு.,.என்னக்கு நேரமில்லையே.... டிராபிக் கான்ஸ்டபிள் - தயவு செஞ்சு வந்திட்டு போனா ரெம்ப நல்லா இருக்கும்... கோசா - ஒரு தடவ சொன்ன நோக்கு புரியாதேன்னோ...பேசாம அது பத்தி எதாவது டிவிடி ஏதாவது இருந்தா அங்க வச்சிட்டு போப்பா.. டிராபிக் கான்ஸ்டபிள் - ஸார்....நீங்க ரெம்ப பிசி ....அதனால் இப்போ உங்கள தொந்தரவு பண்ண விரும்பல... இந்த டிவிடி வேணும்னா வச்சிட்டு போய்டுறேன்....இதக் கண்டிப்பா பாருங்க ஸார் ...மறந்திராதீங்க... கோசா -- ஆளு பாத்தா ரெம்ப டிசென்ட் ஆ இருக்கீங்க....இனிமேல இந்த மாதிரி வந்து தொந்தரவு பண்ணாம இருந்தாலே நல்லது....புரியிதா...