Jan 17, 2015

மூளையின் மீது ஒரு யுத்தம்


போதைப்பொருள் என்றால் ஏதோ நமக்கும் அதற்கும் ரொம்ப தூரம்னு பலர் நினைக்கிறோம். ஆனால், நம் அன்றாட வாழ்க்கையில் புழங்கக்கூடிய காபிபணம், சில விளையாட்டுக்கள், மற்றும் சூதாட்டம் இவையெல்லாம் அளவுமீறும் போது போதைப்பொருள்கள்தான். நம்ம சாதாரணமா நினைக்கக்கூடிய இந்த விஷயங்கள் நம்மை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்தறது மட்டுமில்லாம நம் மூளையை எவ்வளவு பாதிக்குதுன்றதும் தெரியுறது இல்ல. நீண்ட காலம் மது மற்றும் போதைமருந்து மட்டுமே மூளையை தன் வசப்படுத்தி பாதிக்கச் செய்யும் வித்தையை செய்வதாக நம்பப்பட்டது. சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் காபிபணம், சில விளையாட்டுக்கள், மற்றும் சூதாட்டம் போன்றவைகளும் மூளையை அடிமைப்படுத்தும் வகையே.  சரிஎன்ன பார்க்குறீங்க. நம்ப முடியல்லையா? வாங்க மூளைக்குள்ள என்ன நடக்குதுன்னு போய் பாக்கலாம்.  

போதைபொருள்  மூளையை எப்படி ஆட்டுவிக்கிறது என்பது திரைப்படத்தில் வரும் காட்சிகளையும் மிஞ்சக்கூடிய அளவில் சுவராசியாமானது. போதைப்பொருள் முதலில் ரத்தத்தில் கலந்து மூளையை அடையுது. அங்கு நரம்புகடத்திகளைச் சுரக்கச் செய்து மூளையைத் தூண்டுகிறது. நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக மூளையில் ஒரு இயங்குதளத்தை மூளையைக் கொண்டே உருவாக்கச்செய்கிறது. இவ்வாறு உருவான இயங்குதளத்தின் முதல் வேலை என்ன தெரியுமா ?  இந்த போதைப்பொருள் ஒரு அடிப்படையான உயிர்ப்பொருள் என்ற மாயையை மூளைக்கு செலுத்துவதுதான். இவ்வாறு மூளையின் அமைப்பு மட்டுமின்றி அதன் இயக்கத்தையே தன  சுயவிருப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் வசப்படுத்துவதுதான். இந்த நிலை இது மூளையின் நோய்த்தன்மையாகவே மாற்றிவிடுகிறது என்பதை சமீபத்தியல் ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது

வாங்க இன்னும் கொஞ்சம் ஆழமா மூளைக்குள்ள போகலாம். 100 பில்லியன் நரம்புச்செல்களினாலான இந்த தகவல் கட்டமைப்பு இந்தப்பிரபஞ்சத்திலேயே  மிகச்சிக்கலான மற்றும் பிரமாண்டமான ஒன்று. இந்த நரம்புச் செல்களின் தகவல் பரிமாற்றமின்றி  நாம் உட்பட எந்த உயிரினமும் உணர்வுகளாக, செயல்களாக, சிந்தனைகளாக மற்றும் பல்வேறு இயக்கங்களாக  இயங்க முடியாது. தூக்கத்தில கூட இவை இயங்கவேண்டியிருக்கும். கோமா நிலையில் கூட நரம்புச் செல்கள் இடையறாது இயங்க வேண்டியிருக்கும்னா இதனோட முக்கியத்துவம் பத்தி சொல்லவே தேவையில்லை. நரம்புச்செல்கள் தான் அருகாமையிலிருக்கும் மற்ற செல்களோட எப்படி பேசிக்கிறது? நமக்கு பேச்சு எப்படியோநரம்புச்செல்களுக்கு அவைகள் சுரக்கிற சுரப்பிகள்  மூலமா வேதியியல் மொழியில தங்களுக்குள்ள பேசிக்கிறது. அவைகல் பேசுவது மனித மனத்திற்கு உணர்வுகளாக உணர்த்தப்படுகின்றது. அதுல டோபமைன் நமக்கு பிடிச்சமான ஒரு நரம்புச்சுரப்பி  ஏன்னா அவைதான் மூளையிலுள்ள  மகிழ்ச்சி மையங்களை இயக்குகிறது. இது எப்படின்னாடோபமைன் தூண்டப்படும் போதெல்லாம்
அதை மகிழ்ச்சியாக மூளை உணர்ந்து கொள்கிறது. அது மட்டுமில்லாம . டோபமைன் ஒரு உயிரியக்கத்தின் இன்றியமையாத உணவு, இனப்பெருக்கம், ஞாபகம் சம்பந்தமான விசயங்களை
உணரவைக்கும் ஆதார அமைப்பும் கூட.  மகிழ்ச்சி காரணிகள் அல்லது விசயங்கள் நடைபெறும் பொது இயற்கை டோபமைனை தேவையானஅளவிலேயே மூளையில் சுரக்கச் செய்கிறது, நமக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டு இருக்குஇதில் சிக்கல் எங்கிருந்து வருகிறது ? இந்தத் தூண்டல் இயற்கையான காரணங்கள் மட்டுமின்றி வேறு சில பொருட்களால் கூட நடைபெறலாம் என்பதில் தான்

இதில முக்கியமான வெளிக்காரணி போதைப்பொருள்போதைப் பொருட்கள் மூளையினத் தூண்டி டோபமைனை பலமடங்கு சுரக்கச்செய்கிறது. நாளடைவில் இந்த அதீத டோபமைன் சுரப்பு மூளை பழகி அல்லது சகித்துக்கொள்வதால், தேவையான மகிழ்ச்சியை மூளை உணர்வதில்லை.முதலில் போதையூட்டிய டோபமின் அளவு பின்னொரு
சமயத்தில் போதை உண்டாக்கிய மகிழ்ச்சியை  உணர்வதில்லை. இதனால் போதைக்கு வழக்கமானவர்கள் நாளடைவில் வெறுமையை, மனச் சோர்வை உணர்கிறார்கள். சாதாரணமாக மகிழ்ச்சியூட்டும் விசயங்கள் இப்போது வரட்சியையே உருவாக்குகிறது. அது மட்டுமல்ல, இன்னொரு விசயத்தையும் மூளை செய்கிறது இந்த இழப்பை ஈடு செய்வதற்கு அவர்கள் அதிகமாகபோதைப்பொருளை எடுத்துக் கொள்ள அவரர்களின் மூளை தூண்டுகிறது.
அந்த மகிழ்ச்சி ஒரு விருப்ப நிகழ்வாக மட்டுமின்றி கட்டாயத்தன்மையாகவும் பதிவு செய்து விடுகிறதுஅது நாளடைவில் கட்டுபடுத்த முடியாத ஏக்கமாகவே மாறிவிடுகின்றது. எனவே, அடிமைப்பட்ட ஒருவர்அதிலிருந்து விடுபட நினைத்தாலும் ஒரு மிகச்சிறிய சலனமே அவரை மீண்டும் போதைப்பாதைக்கு இழுத்துச்செள்ளக்க் கூடிய அளவிற்கு மூளை பழக்கப்படுத்திக் கொள்ளும். இது மூளையின் மீது நடத்தப்படும் பலமுனைத் தாக்குதல்.  

நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் காபி, மிதமான அளவைத் தாண்டினால் கோகைன் போன்ற போதை வஸ்துவே. குடித்த சில மணித்துளிகளில் ரத்தத்தின் வழியாக காபி மூளைக்குள் சென்று விடுகிறதுஇவை உடனடி டோபமினை தூண்டி, மற்றும் மூளையின் களைப்பை உண்டாக்கும் மூலக்கூறுகளை செயல்படாமல் தடுத்து,  மகிழ்ச்சி உணர்வினை மூளையை உணரச்செய்கிறது. இயற்கையான டோபமின அளவினை விட கிட்டத்தட்ட் இரண்டு மடங்கிலிருந்து, 10 மடங்கு இன்பத்தை ஊட்டுவிப்பதால் நம்மை அறியாமல் சிலர் ஒரே நாளில் பலமுறை குடிப்பதற்கு தயாராகி விடுகிறார்கள். அதீதமான காபி பழக்கம் விட முடியாதவர்கள், நாளடைவில் மிக அதிகளவு குடித்தால் மட்டுமே தேவையான திருப்தி அடைகிறார்கள்.  

பணத்தின் மீது நம் அனைவருக்கும் ஆசை உண்டு. அது அளவுக்கு மீறும் போதுநம் மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாட்டினை பாதிக்கும் என்பது தான் சமீபத்திய ஆராய்ச்சி சொல்லும் சேதி. பணமே வாழ்க்கை என்று மனம் மாறிப்போனால் கிட்டத்தட்ட கோகைன் போன்ற மிக சக்தி வாய்ந்த போதைபொருள் அளவிற்கு சுரப்பிகளை மூளையில் தூண்டி பாதிக்கச்செய்யும் என்பது தான் சுவராசியமான தகவல். அது உடல் வழியை மறக்கச் செய்யும் அளவிற்கு போதைத்தன்மையை தூண்டுவதாக கண்டறிந்துள்ளனர்.

பணம், பொருள்,  இவைகளை நமக்கு ஓரளவு மகிழ்ச்சி தரக்கூடிய அளவில்
வச்சுக்கிட்டா நமக்கு நல்லது. அளவு மீறும் போது மருந்து நஞ்சாவது போல இவையும் அளவுக்கு மீறி ஆசைப்படும்போது அவதியில் தான் முடியும். அது மட்டுமில்ல, நமக்கு முழுமையான மற்றும் நிம்மதியான மகிழ்ச்சி கிடைக்கணும்னாவெளிப்பொருட்கள், தூண்டல் தேவையில்லை, தியானம் பண்ணிப்பாருங்க. அதுவே நம் மனதின் ஆழத்திலிருந்து பரிபூரண சந்தோசத்தை தரும்நம் வாழ்வும் மென்மேலும் அர்த்தமாக மற்றும் அழகாக மாறும் ரகசியம் உங்களுக்குத் புரிந்து விடும்



1 comment:

காயத்ரி said...

தெளிவான விளக்கம்!!
நிச்சயமாக அனைவரும் தியானம் செய்ய கற்று கொள்ளத்தான் வேண்டும்!!