இங்கு நான எழுதிய கவிதைகளை, என்னுடைய க(ருத்து)விதைகளை மற்றும் அறிவியல் நிகழ்வுகளை தொகுத்து வழங்கியுள்ளேன். அன்பர்கள் அனைவரும் இவ்வுலகத்தினுள் இன்ப சுற்றுலா சென்று வருக!.
Dec 31, 2015
Dec 30, 2015
Dec 29, 2015
Jan 17, 2015
பேதையென ஒரு பெண்மேகம்
ஓ மேகமே
நீயொரு
பேதைப்பெண்தான்
புகுந்த வானவீட்டில்
மின்னல் சாட்டைகளால்
நிதம்தோறும் வதைபட்டு
மழையெனக்கண்ணீர் வடித்து
கோபம் கொண்டு
பிறந்த பூமி வீட்டிற்கு வந்தாலும்
சூரியக் கணவன்
சுட்டெரித்து அழைத்த கணத்தில்
பழையன மறந்து
காற்றில் பறந்து
வான வீட்டிற்கு
சென்று விடுகிறாயே
ஓ மேகமே
நீயும் ஒரு பேதைப் பெண்தான்!
*******************************
*******************************
என் திருஉளமே
பாரெங்கிலும்
குப்பை குப்பை என்று
பகுமானமாய்த் தூற்றி
அதைப்பகுத்தாய்ந்து
ஊரெங்கிலும் உறவெங்கிலும்
துப்புரவாக்கிட
முனைப்புடன் சென்றுபின்
யாக்கை சுருக்கிட
வெறுமையுடன் திரும்பும்
ஒரு பிரேதகணத்தில் -
குப்பைகள் ஓரிடத்தில்
குவிந்து கிடக்க
எவ்விடமென
நோக்கியபின் தெரிந்தது
அவ்விடம் என் உளமே
என் திரு உளமே
********************************************
********************************************
மூளையின் மீது ஒரு யுத்தம்

போதைப்பொருள் என்றால் ஏதோ நமக்கும் அதற்கும் ரொம்ப தூரம்னு பலர் நினைக்கிறோம். ஆனால், நம் அன்றாட வாழ்க்கையில் புழங்கக்கூடிய காபி, பணம், சில விளையாட்டுக்கள், மற்றும் சூதாட்டம் இவையெல்லாம் அளவுமீறும் போது போதைப்பொருள்கள்தான். நம்ம சாதாரணமா நினைக்கக்கூடிய இந்த விஷயங்கள் நம்மை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்தறது மட்டுமில்லாம நம் மூளையை எவ்வளவு பாதிக்குதுன்றதும் தெரியுறது இல்ல. நீண்ட காலம் மது மற்றும் போதைமருந்து மட்டுமே மூளையை தன் வசப்படுத்தி பாதிக்கச் செய்யும் வித்தையை செய்வதாக நம்பப்பட்டது. சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் காபி, பணம், சில விளையாட்டுக்கள், மற்றும் சூதாட்டம் போன்றவைகளும் மூளையை அடிமைப்படுத்தும் வகையே. சரி, என்ன பார்க்குறீங்க. நம்ப முடியல்லையா? வாங்க மூளைக்குள்ள என்ன நடக்குதுன்னு போய் பாக்கலாம்.


அதை மகிழ்ச்சியாக மூளை உணர்ந்து கொள்கிறது. அது மட்டுமில்லாம . டோபமைன் ஒரு உயிரியக்கத்தின் இன்றியமையாத உணவு, இனப்பெருக்கம், ஞாபகம் சம்பந்தமான விசயங்களை
உணரவைக்கும் ஆதார அமைப்பும் கூட. மகிழ்ச்சி காரணிகள் அல்லது விசயங்கள் நடைபெறும் பொது இயற்கை டோபமைனை தேவையானஅளவிலேயே மூளையில் சுரக்கச் செய்கிறது, நமக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டு இருக்கு, இதில் சிக்கல் எங்கிருந்து வருகிறது ? இந்தத் தூண்டல் இயற்கையான காரணங்கள் மட்டுமின்றி வேறு சில பொருட்களால் கூட நடைபெறலாம் என்பதில் தான்.
இதில முக்கியமான வெளிக்காரணி போதைப்பொருள். போதைப் பொருட்கள் மூளையினத் தூண்டி டோபமைனை பலமடங்கு சுரக்கச்செய்கிறது. நாளடைவில் இந்த அதீத டோபமைன் சுரப்பு மூளை பழகி அல்லது சகித்துக்கொள்வதால், தேவையான மகிழ்ச்சியை மூளை உணர்வதில்லை.முதலில் போதையூட்டிய டோபமின் அளவு பின்னொரு
சமயத்தில் போதை உண்டாக்கிய மகிழ்ச்சியை உணர்வதில்லை. இதனால் போதைக்கு வழக்கமானவர்கள் நாளடைவில் வெறுமையை, மனச் சோர்வை உணர்கிறார்கள். சாதாரணமாக மகிழ்ச்சியூட்டும் விசயங்கள் இப்போது வரட்சியையே உருவாக்குகிறது. அது மட்டுமல்ல, இன்னொரு விசயத்தையும் மூளை செய்கிறது இந்த இழப்பை ஈடு செய்வதற்கு அவர்கள் அதிகமாகபோதைப்பொருளை எடுத்துக் கொள்ள அவரர்களின் மூளை தூண்டுகிறது.

அந்த மகிழ்ச்சி ஒரு விருப்ப நிகழ்வாக மட்டுமின்றி கட்டாயத்தன்மையாகவும் பதிவு செய்து விடுகிறது. அது நாளடைவில் கட்டுபடுத்த முடியாத ஏக்கமாகவே மாறிவிடுகின்றது. எனவே, அடிமைப்பட்ட ஒருவர்அதிலிருந்து விடுபட நினைத்தாலும் ஒரு மிகச்சிறிய சலனமே அவரை மீண்டும் போதைப்பாதைக்கு இழுத்துச்செள்ளக்க் கூடிய அளவிற்கு மூளை பழக்கப்படுத்திக் கொள்ளும். இது மூளையின் மீது நடத்தப்படும் பலமுனைத் தாக்குதல்.


பணம், பொருள், இவைகளை நமக்கு ஓரளவு மகிழ்ச்சி தரக்கூடிய அளவில்
வச்சுக்கிட்டா நமக்கு நல்லது. அளவு மீறும் போது மருந்து நஞ்சாவது போல இவையும் அளவுக்கு மீறி ஆசைப்படும்போது அவதியில் தான் முடியும். அது மட்டுமில்ல, நமக்கு முழுமையான மற்றும் நிம்மதியான மகிழ்ச்சி கிடைக்கணும்னா, வெளிப்பொருட்கள், தூண்டல் தேவையில்லை, தியானம் பண்ணிப்பாருங்க. அதுவே நம் மனதின் ஆழத்திலிருந்து பரிபூரண சந்தோசத்தை தரும். நம் வாழ்வும் மென்மேலும் அர்த்தமாக மற்றும் அழகாக மாறும் ரகசியம் உங்களுக்குத் புரிந்து விடும்.
வச்சுக்கிட்டா நமக்கு நல்லது. அளவு மீறும் போது மருந்து நஞ்சாவது போல இவையும் அளவுக்கு மீறி ஆசைப்படும்போது அவதியில் தான் முடியும். அது மட்டுமில்ல, நமக்கு முழுமையான மற்றும் நிம்மதியான மகிழ்ச்சி கிடைக்கணும்னா, வெளிப்பொருட்கள், தூண்டல் தேவையில்லை, தியானம் பண்ணிப்பாருங்க. அதுவே நம் மனதின் ஆழத்திலிருந்து பரிபூரண சந்தோசத்தை தரும். நம் வாழ்வும் மென்மேலும் அர்த்தமாக மற்றும் அழகாக மாறும் ரகசியம் உங்களுக்குத் புரிந்து விடும்.
Subscribe to:
Posts (Atom)