Oct 16, 2013

ஒரு பிரபஞ்சச்சுவராசியம்

மேகங்களை
துவைத்து து-வைத்து
மழையெனச்
சாறுபிழிந்து - பச்சிளம்
புவியதனனின் 
பசிதணித்து-வெளி
 எங்கெங்கினும் 
செழித்துயிர்த்திருக்கும்-பசுந்தாவரப்
 பாலகன்களுக்கு
சூரியத்தந்தையாய்-வெளிச்சப் 
பாலமுதம் ஊட்டி

தாவரங்கள்
பலகோடி
விலங்கினங்கள்
பலப்பல கோடி
புவியெங்கும் பூச்சியினங்கள்
பல்லாயிரம் கோடி
இவையனைத்தும்
உருக்கொடுத்து
அவ்விதமே
உருவெடுத்து - அதன் 
அங்கமெல்லாம்
உயிர்த்துவம் அளித்து






பிரபஞ்சத் துகள்களையும்
உய்ப்பித்து, அதன்
அணுவிற்கும் அணுவெனத் திகழ்ந்து
அண்டசராசரங்களையும் ஆட்டுவித்து
அயர்ந்திருந்த
ஒரு இறைத்த்த்துவத் தருணத்தில்














பிரபஞ்சத்
தொலைவெளிதனில்
வீச்சாய் விரவிப்
பரவியிருந்த-எம்
திக்கிலாச்சிந்தையில்
உதித்த
சுவராசியமான
சித்தம்.

எம் படைப்புச்
சுக்கல்களானசில
மானுட
மனங்களுக்குள் சில
சுவராசிய சு-தந்திரங்களை
விதைக்கும்
வித்தைதான் அது

எம் படைப்புகள்
எனையே
சப்த
ஸ்பரிச
ரூப
ரஸ
கந்தங்கள் மூலம்
உணர மறுக்கும்
விந்தைதான் அது.

இருளால்
வெளிச்சத்தின்
மேன்மை -இருளால்
வரையறுக்கப்படுகிறது

-
அதன்போல்
இறையதனின்
முழுமையை
நாத்திகம்
வரையறுக்கும்

இறையினைத் 
தொழும் ’இறை’ச்சல் 
எம் ஒரு
புள்ளியினை
பிரவசமாய்ப் 
பிரதிபலிக்கும் -அதனுள்ளே 
தம்உரு 
தொலைக்கும்
ஆயின் 
எமை
மறுத்துத்தூற்றும் 
நாத்திகச்சிந்தை 
எம் இறையையே
முழுமையாக்கும்- 
அங்ஙனமே
எம் அகப்பரிணாமத்தை
செழுமையுறச்செய்யும்.

ஆகவே
பிரபஞ்சத்திவலைகளாய் 
விரவி -அதனுள் 
ஆகிருதியாய் 
யுகயுகங்களாய் 
உறைந்திருந்திருந்த
இறைஎனும் 
இப்பேரண்டத்தையொத்த 
பேருண்மையை மறுக்கும்
நாத்திகமானுடங்களைப் 
படைப்பதென்பது-எமக்குள்
உயிர்த்துயரும் 
ஒரு 
பிரபஞ்சச்சுவராசியம்தான்!

5 comments:

Anonymous said...

அருமை. கவிதை. இறைமை.
முழுமை. செழுமை.

கவிதைக்கு நன்றி!

காயத்ரி said...

"நாத்திகம் இறை தன்மையின் முழுமையை வரையறுக்கும்" சரிதானென்று நினைக்கிறேன்! தன்னை உணராதவனும் தன்னை நம்பாதவனும்தான் நாத்திகன் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்! அதுவும் சரிதானே? இயற்கையை வர்ணீத்திருக்கும் பாங்கு மிக மிக அற்புதம் செந்தில்! பாராட்டுக்கள்!

காயத்ரி said...

"நாத்திகம் இறை தன்மையின் முழுமையை வரையறுக்கும்" சரிதான்! தன்னை உணராதவனும் தன்னை நம்பாதவனும்தான் நாத்திகன் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்! அதுவும் சரிதானே? இய்ற்கையை வர்ணித்திருக்கும் பாங்கு மிக மிக அற்புதம் செந்தில்! என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

- செகு - said...

"நாத்திகம் இறை தன்மையின் முழுமையை வரையறுக்கும்" சரிதானென்று நினைக்கிறேன்! அதுவும் சரிதானே?

--அழகாக கவிதையை அலசியிருக்கீங்க!

தன்னை உணராதவனும் தன்னை நம்பாதவனும்தான் நாத்திகன் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்! அதுவும் சரிதானே?

-- தெளிவாத்தான் சொல்லிட்டு போயிருக்காரு மனுஷன் :)

- செகு - said...


// இயற்கையை வர்ணீத்திருக்கும் பாங்கு மிக மிக அற்புதம் செந்தில்! பாராட்டுக்கள்!//

பாராட்டிற்கும் நன்றி !